அடியார் பெருமக்களே,
அனைவருக்கும் வணக்கம். இப்போது தான் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள் புரியும் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்தோம். அதற்குள் அடுத்த ஆயில்ய பூசை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று தான் ஆரம்பித்தோம். இரண்டு, மூன்று பூசைக்கு பின்னர் பூசை பொருட்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தோம், திருநீறு அபிஷேகம் என்றால் தூய பசுஞ்சாண விபூதி தான் என்பது போன்றவை ஆகும். அதே போல் தான் மாதம் மாதம் வாங்கும் பூசை பொருட்களில் வில்வம்,நெல்லிப் பொடி போன்றவை வாங்கும் போது, அவை நெகிழிகளில் அடைக்கப்பட்டு கிடைக்கும். இது நமக்கு சற்று உறுத்தலாக இருக்கவே, இப்போது மொத்தமாக 1கிலோ, 2 கிலோ என மொத்தமாக வாங்கி, தனித்தனியே அவற்றை குடுவைகளில் அடைத்து கொண்டு செல்கின்றோம். இவையெல்லாம் நமக்கு குருவால் அருளப்பட்டவையே ஆகும். ஏனெனில் புறமும் அகமும் ஒன்றொன்று ஒன்று தொடர்பு உடையவை ஆகும். சென்ற மாத ஆயில்ய பூசையின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஐயனின் அருள் ஒவ்வொரு விதமாக இருந்தது. விபூதி அபிஷேகம் நமக்கு இங்கே மிகவும் பிடிக்கும். முப்பரிமாண நிலையில் விபூதி அபிஷேகத்தில் அகத்தியர் தரிசனம் பெற்றோம். என்ன தான்..நாம் இங்கே வார்த்தையில் வடிக்க முற்பட்டாலும், நேரில் கண்டு அருள் பெறுவது தான் மிக மிக சிறப்பாகும்.
வினைகள் ஓடிடும் விபூதி தரிசனம். எத்துணை பிறவி எடுத்து வந்துள்ளோம் என்று நமக்கே தெரியவில்லை. ஏதோ கொஞ்சம் செய்த புண்ணியத்தின் பலனே நம்மை இங்கே நிறுத்தியுள்ளார்கள் என்று தோன்றியது.
பூசையின் இடையே அகத்தியர் போற்றி,சித்தர்கள் போற்றித் தொகுப்பு அனைத்தும் படித்தோம். பூசையின் இடையே வெங்கடேஷ் ஐயா வந்து சிறப்பித்தார்கள். அடுத்து..இதோ நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அருள் வெளிப்பாடு...
இது தான். குருவின் வழிகாட்டல் என்பது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது மிக சரியாக இருந்தது. மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்தோம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..என்று மனதில் பிடித்தோம். கண்களில் ஒற்றினோம். உயிரில் உணர்த்தப்பட்டோம். நம் வெங்கடேஷ் ஐயா அவர்களுக்கு சிறப்பு செய்தோம்.
வழக்கம் போல், அகத்தியர் ஆயில்ய பூசைக்கு பொருளுதவி மற்றும் இன்னபிற வழிகளில் உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் (15/07/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html
அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html
அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html
அனைவருக்கும் வணக்கம். இப்போது தான் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள் புரியும் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்தோம். அதற்குள் அடுத்த ஆயில்ய பூசை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று தான் ஆரம்பித்தோம். இரண்டு, மூன்று பூசைக்கு பின்னர் பூசை பொருட்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தோம், திருநீறு அபிஷேகம் என்றால் தூய பசுஞ்சாண விபூதி தான் என்பது போன்றவை ஆகும். அதே போல் தான் மாதம் மாதம் வாங்கும் பூசை பொருட்களில் வில்வம்,நெல்லிப் பொடி போன்றவை வாங்கும் போது, அவை நெகிழிகளில் அடைக்கப்பட்டு கிடைக்கும். இது நமக்கு சற்று உறுத்தலாக இருக்கவே, இப்போது மொத்தமாக 1கிலோ, 2 கிலோ என மொத்தமாக வாங்கி, தனித்தனியே அவற்றை குடுவைகளில் அடைத்து கொண்டு செல்கின்றோம். இவையெல்லாம் நமக்கு குருவால் அருளப்பட்டவையே ஆகும். ஏனெனில் புறமும் அகமும் ஒன்றொன்று ஒன்று தொடர்பு உடையவை ஆகும். சென்ற மாத ஆயில்ய பூசையின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
இந்த முறை வேலும் இணைந்து கொண்டார். வேல் பூசையும் இணைந்து நடைபெற்றது. பூசையின் ஆரம்பத்தில் நீங்களே காணுங்கள். பூசைப் பொருட்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு நாம் மட்டுமே அங்கே ஆரம்பித்தோம். யார் யார் வந்து அருள் பெறுவார்கள் என்று நமக்கே தெரியாது. அனைத்தும் அவர் நேசம்.
பால், வில்வப் பொடி, அருகம்புல் பொடி, நெல்லிப் பொடி, திரவியப் பொடி என ஒவ்வொரு அபிஷேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அகத்திய அடியார் திரு.குமார் ஐயா அவர்கள் பூசையில் இணைந்து கொண்டார். திரு.வெங்கடேஷ் ஐயா அவர்களும் வருவதாக கூறினார்கள்.
அபிஷேகம் ஆரம்பம். அபிஷேகம் மட்டும் ஆரம்பமென்று..அருளின் வெளிப்பாடும் ஆரம்பம் தான். அபிஷேகத்தின் பொது அகத்தியர் துதி,போற்றி என்று கொஞ்சமாக பாட ஆரம்பித்தோம்.
அகத்தியரைப் போற்றும் நந்தி தேவர் துதி மிக மிக விசேஷம். அகத்தியர் தமிழை வளர்த்தார் என்பதற்கு சான்று அவர் படைத்த நூட்களே ஆகும். சுமார் 147 நூட்களை நமக்கும், நம் தமிழுக்கும் சேர்த்து தந்துள்ளார். இலக்கணம்,மருத்துவம்,யோகம்,ரசவாதம்,மந்திரம்,சாலம்,ஞானம்,சோதிடம் என அவர் தொடாத இடமே இல்லை.
ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. நாம் நினைப்பது எல்லாம், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்திடவே..வேறொன்றும் அறியேன் பராபரமே...சித்தர்களைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அகத்தியர் பூசையில் அவர் மட்டும் தான் ஆசி வழங்குவார் என்று எண்ணாதீர். சித்தர்களில் யார் வேண்டுமானாலும் வந்து அருள் வழங்கலாம். பெயர், இடம் போன்ற பாகுபாடு தாண்டி ஜீவனில் உள்ள சிவத்தை உணர்ந்தவர்கள்..எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சித்தர் பூசை எங்கு நடந்தாலும் சென்று வழிபடுங்கள்.
வினைகள் ஓடிடும் விபூதி தரிசனம். எத்துணை பிறவி எடுத்து வந்துள்ளோம் என்று நமக்கே தெரியவில்லை. ஏதோ கொஞ்சம் செய்த புண்ணியத்தின் பலனே நம்மை இங்கே நிறுத்தியுள்ளார்கள் என்று தோன்றியது.
பூசையின் இடையே அகத்தியர் போற்றி,சித்தர்கள் போற்றித் தொகுப்பு அனைத்தும் படித்தோம். பூசையின் இடையே வெங்கடேஷ் ஐயா வந்து சிறப்பித்தார்கள். அடுத்து..இதோ நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அருள் வெளிப்பாடு...
இரு கண்கள் போதவில்லை..எட்டுத் திக்கும் அகத்தியரின் அருள்..சித்தர்களின் அருளில் சிறக்கட்டும் இப்புவி. நம் குழுவின் சார்பில் மூவர் மட்டுமே இருந்தோம். எண்ணிக்கை நமக்கு முக்கியமில்லை. விடுமுறை தினமாக இருந்தால் அனைவரும் வருவார்கள் என்பதை நாம் இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு செய்தி கண்டோம் ..அதனை இங்கே சொல்ல விரும்புகின்றோம். அதுவும் நம் அகத்தியர் சம்பந்தமான செய்தி. பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயா அவர்கள் நாடி சம்பந்தமாக ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். உடனே அந்த செய்திக்கு ஏகப்பட்ட பதில்கள் வந்து இருந்தன..எங்கே நாடி படிக்கின்றார்கள்? அது..இது? என்று...நாம் சற்று நிதானித்து விட்டு, மாலை அவரை தொடர்பு கொண்டோம். ஒரே போடாக போட்டார்...
இத்துணை நாள் நாம் அகத்தியர் பூசை, உழவாரப் பணி போன்ற செய்திகள் பகிரும் போது ஒரு சிலரே பதில் கொடுப்பார்கள். ஆனால் நாடி போன்ற செய்திகள் சொன்னதும் எத்துணை பேர் பதில்கள் என்று கவனித்தீர்களா? என்றார். உண்மை தான். நாடியை சோதிடமாக பார்க்காதீர்கள். நாடி கிடைத்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் நாம் நம்மிடம் நல்வினைப் பயன் வைத்திருக்க வேண்டும்.முதலில் நீங்கள் சித்தர்கள் பூசை, உழவாரப் பணி, ஆலய தரிசனம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். மற்றவை தானாகவே கிடைக்கும். என்றார். இது நூற்றுக்கு நூறு உண்மை தான். பொய்யாகிய இந்த மெய்யை நாம் அகத்தியர் பூசை, உழவாரப் பணி இன்ன பிற சேவைகளில் ஈடுபட்டு சுத்தம் செய்தால் நம்முள் சித்தர் பெருமக்கள் வழிகாட்டுவார்கள்.
மூன்றே மூவர் தானா? என்று யோசித்து பூசையில் இருந்தோம்.ஆனால் நீங்களே பாருங்கள்...
நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் அங்கத்தினர் அனைவருக்காகவும் சங்கல்பம் செய்து, மனமுருக வேண்டி, வந்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் கொடுத்து, அன்று ஆயில்ய பூசை முழுமை செய்தோம்.
குருவும் திருவும் ஒன்றாக..வேலொடு அகத்தியர் தரிசனம்..சித்தர் பூமியில் நின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தோம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..என்று மனதில் பிடித்தோம். கண்களில் ஒற்றினோம். உயிரில் உணர்த்தப்பட்டோம். நம் வெங்கடேஷ் ஐயா அவர்களுக்கு சிறப்பு செய்தோம்.
வழக்கம் போல், அகத்தியர் ஆயில்ய பூசைக்கு பொருளுதவி மற்றும் இன்னபிற வழிகளில் உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் (15/07/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
மீள்பதிவாக:-
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html
அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html
அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html
No comments:
Post a Comment