Subscribe

BREAKING NEWS

16 December 2018

பனப்பாக்கம் உழவாரப்பணி அனுபவம் - அகத்தியர் அழைத்தார்...ஆனந்தம் தந்தார்...

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

பணப்பாக்கம் உழவாரப் பணி அனுபவம் பதிவுகள் ஒன்றிலே அடக்க முடியவில்லை. காரணம் என்ன என்று நமக்குத் தெரியவில்லை. இந்த உழவாரப் பணி மறக்க இயலாத ஒன்று. வெகு நாட்கள் கழித்து நாம் வேன் பிடித்து சென்றோம். இதில் எம் குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றனர்.ஏனெனில் மீண்டும் எம் குடும்பத்தாரை எப்போது ஒன்றிணைப்பது? இதே நிலை தான் நம் குழுவிற்கும். யார் யார் வந்து பணி செய்ய வேண்டும் என்று அந்த பரம்பொருள் விரும்புகின்றாரோ அவர்கள் தான் வர முடியும். மீண்டும் அனைவரையும் இது போல் ஒன்றிணைப்பது நம் கையில் இல்லை.

சென்ற பதிவில் மதிய உணவு உண்ட நிலையில் இருந்தோம்,. இதோ அகத்திய முனிவ தம்பதிகள் தரிசனம் பெறுங்கள். நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு, நம் மனமும் சுத்தமானது.



ஒவ்வொரு சன்னதியும் அழகாக இருந்தது, கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.


                                                         அடுத்து மூத்தோன் தரிசனம்.








இங்கு இருக்கும் தூணை பார்த்தபோது நமக்கு ஒரு வித உணர்வு ஏற்பட்டது. புலியும், மயிலும் வழிபட்ட தலத்தில் நாம் வணங்குகின்றோம். மெய் சிலிர்க்கும் மெய்யுணர்வு இது.


மீண்டும் ஒருமுறை வெளியே வந்து கொடிமர தரிசனம் பெற்றோம்.


வினை தீர்க்கும் விநாயகர் ஒரு புறம் 


சிவன் பார்வதி தேவியோடு நந்தி மீது அருள் தருகின்றார் 


                                    அன்னை பார்வதியின் ஆயுதம் ஒரு புறம்


                             மயிலாடு வள்ளி,தெய்வானையோடு நம் முருகப் பெருமான்



புலியும் மயிலும் வழிபடும் காட்சி 





பாத்திரங்கள் ஒவ்வொன்றாக  கோயிலுக்குள்ளே கொண்டு வருகின்றார்கள்.



இதோ வழிபாட்டிற்கு தயார். அனைவரும் தரையில் அமர்ந்தோம்.


சிவ புராணம் ஓதினோம். தெரிந்த துதிகளை படித்தும் பாடிக் கொண்டும் இருந்தோம்.










சிவன் சந்நதி தரிசித்து அம்மனின் சந்நதியில் தரிசிக்க வந்தோம். குருக்களுக்கு வியர்த்து விட்டது. அந்த புழுக்கம்..அது தரும் சுகம், வாசம்..வேறெங்கு கிடைக்கும். தீபாராதனையோடு அன்பர்களுக்கு கர்ம காண்டம் எது? என்ற சிறு நூல் ஒன்றைப் பரிசளித்தோம்.



குருக்களை நம் அன்பர் திரு.மனோகர் ஐயா அவர்கள் மரியாதை செய்தார். நேரமானாலும் பொறுமையாக இருந்து அனைவர்க்கும் சங்கல்பம் செய்வித்து, பூசை செய்திட்ட குருக்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ஒரு உழவாரப் பணியை நாம் ஏற்பாடு செய்கின்றோம் என்றால் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். அங்கு இங்கு பேசுங்கள் என்று நம்மை வழிநடத்தி, ஒரு மாதம் ஆகிவிடுவார்கள். கோயில் எப்படி உள்ளது?எது போன்ற பணிகள் போன்ற பல முன் தயாரிப்புகள், மதிய உணவு போன்றவையும் பார்க்கவேண்டும். வெளியூர் கோயில் என்றால் வாகன வசதி என நாம் பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் ஒரே வாரத்தில் நடக்கின்றது என்றால் அது இங்கு வீற்றிருக்கும் அகத்தியரின் அருளால் தான். நம்மை அழைத்தது அவர் தான். அளித்ததோடு மட்டுமின்றி..ஆங்..பதிவின் இறுதியில் அந்த ஆனந்தம் பற்றி சொல்கின்றோம்.

உற்ற துணையாய் இருந்த திரு.செந்தில்வேல் ஐயாவிற்கு மரியாதை செய்த போது





தனித்தனியாக அனைவருக்கும் பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்பட்ட போது 





அனைவரும் சேர்ந்து ஒரு குழு காட்சி ( குரூப் போட்டோ ) எடுக்க முயன்ற போது




மீண்டும் நம்மை எப்போது அழைப்பார் என்று அவருக்குத் தான் தெரியும். உழவாரப் பணியில் பங்கேற்ற அனைவர்க்கும் நன்றி.


இந்த உழவாரப் பணி  ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழாவிற்கு நாம் செய்தோம். ஏதோ நம்மால் இயன்ற சிறு சேவை அவ்வளவே. இதோ நீங்கள் இனி அந்த  உருத்திராக்க மண்டபத்தில் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதி தரிசனம் பெற உள்ளீர்கள்.





அட..இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எங்கள் அகத்தீசா. இது மட்டுமின்றி மற்றொரு அருளும்,சேவையும் நம் TUT குழுவிற்கு கிடைத்துள்ளது. அது நாம் இங்கே செய்த இந்த உழவாரப் பணியாள் என்று தான் நாம் நினைக்கின்றோம். நாம் செந்தில்வேல் ஐயாவிடம் தொடர்பில் இருந்த போது, ஏதேனும் ஒரு கோயிலுக்கு மாதந்தோறும் நம் குழு மூலம் பூசை செலவை ஏற்க நினைத்தோம்.தக்க தருணம் இப்போது தான் வாய்த்துள்ளது. சென்ற கார்த்திகை மாதம் முதல் ஆயில்ய ஆராதனை பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு நம் TUT குழுவின் சார்பில் செய்து வருகின்றோம். வாழ வழிகாட்டும் குருவின் தாள் பணிகின்றோம். குருவிற்கு வேறு கைம்மாறு நாம் என்ன செய்துவிட முடியும். இதோ .சென்ற ஆயில்ய ஆராதனை ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதி தரிசனம்.



யாராவது இந்த சேவையில் இணைய விரும்பினால் நம்மை தொடர்பு கொள்ளலாம். இதற்கு முந்தைய பதிவில் சொன்னது போன்று இது கிடைத்தற்கரிய பேறு தானே ! கூடுவாஞ்சேரி ஆயில்ய ஆராதனை நம்மை இப்பொது பனப்பாக்கத்திற்கும் கொண்டு சேர்த்துள்ளோம். வாருங்கள் பித்தம் நீக்கி சித்தம் தெளிவோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.


மீள்பதிவாக:-


உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html


உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment