Subscribe

BREAKING NEWS

09 December 2018

வைகுண்ட ஏகாதசி - TUT உழவாரப்பணி அறிவிப்பு - 16/12/2018

அனைவருக்கும் வணக்கம்.

கார்த்திகை மாத இறுதியில் நாம் இருக்கின்றோம். இதோ மார்கழி மாதம் பிறக்க இருக்கின்றது. மாதங்களில் நான் மார்கழி என்கின்றார் கண்ணபிரான். இன்னும் மார்கழி மாதத்தின் சிறப்பு கூட்ட காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.

வரும் 18/12/2018 அன்று வைகுண்ட ஏகாதசி.



நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு முதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் உள்ளத்தில் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.

ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும்.

அனைத்து ஏகாதசியும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் உதய காலத்தில் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று பகல் உண்ணாவிரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப்பலனும் சேர்ந்து கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் ஏகாதசி வந்தாலும், மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமை உண்டு. இது பெரிய ஏகாதசி என்றும் முக்கோட்டி ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. சாதாரணமாகவே ஏகாதசி விரதமே சிறப்பாகப் பேசப்படும் போது மற்றவற்றைக் கடைப்பிடிக்காவிட்டாலும் சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதமாவது கடைப்பிடித்தால் நாராயணனின் நல்லருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வைகுண்ட ஏகாதசி அமைந்த விதத்தையும் அத்திருநாள் திருமால் திருத்தலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் சற்று அறிவோமா?

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து என்றும் வைகுண்ட ஏகாதசி முதல் இராப்பத்து என்றும் இத்திருவிழாவை அழைப்பர்.

இவ்விழா நாள்களில் அர்ச்சாவதாரப் பெருமாள் திருவிழா மண்டபத்தில் பிரதானமாக எழுந்தருளியிருப்பார். அவரைத் தரிசித்த வண்ணமாக வரிசையாக இரண்டு பக்கங்களிலும் ஆழ்வார்கள் மற்றும் வைணவ (குருமார்களும்) ஆசார்யப் பெருமக்களின் திருவுருவங்களுடன் அமர்ந்திருப்பர். இதுபோன்ற காட்சியை இந்த 20நாள்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இவ்விழாவில் பெருமானுக்கு விதவித அலங்காரங்கள் அமைக்கப்படும். இந்த நாள்களில் தமிழ் வேதமான ஆழ்வார்களின் பாசுரங்கள் (4000) பகவத் இராமானுஜர் அமைத்த முறைப்படி அந்தணர்களால் ஓதப்படும். முதல் பத்து நாள்கள் திருமொழித் திருவிழா என்றும் மற்றைய பத்து நாள்கள் திருவாய் மொழித் திருநாள்கள் என்றும் அழைக்கப்படும். இராப்பத்து திருநாளின் கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைந்ததாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் ஐதீகம்.

அன்று ஆழ்வார் கோஷ்டியில் எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர் கைத்தாங்கலாக எடுத்துச் சென்று பெருமாளின் திருவடி அருகில் வைத்து முழுவதுமாக துளசிதளங்களால் மூடிவிடுவார்கள். இது ஆழ்வார் முக்தி அடைந்ததைக் குறிக்கும். பிறகு அர்ச்சகர்கள் பெருமாளிடம் “நம் ஆழ்வாரை உலகின் நன்மை பொருட்டுத் திரும்ப அளிக்க வேண்டுமென வேண்டுவர். பின் பிரார்த்தனை நடக்கும். பெருமாள் நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்கியதாக அர்த்தம். துளசி தளங்களால் மூடப்பட்டிருந்த ஆழ்வாரை கைத்தாங்கலாக எடுத்துச் சென்று ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்த்து வைப்பார்கள்.

இந்தக் கடைசிநாள் வைபவத்திற்கு ஆழ்வார் திருவடி தொழுதல் வைபவம் என்று பெயர். இவ்வைபவங்களைத் தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டத்துக்குச் சென்றவர் யாரும் இல்லையென்பதால் வைகுண்டவாசல் (சுவர்க்க வாசல்) மூடப்பட்டிருந்ததாகவும் பின்பு வைகுண்ட ஏகாதசி நன்னாளான மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தினை முதன் முதலாகத் திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினர் என்பர். பொதுவாக கார்த்திகையில் திருப்பாணாழ்வார் அவதார நன்னாளில் திருமால் திருக்கோவில் மூலவருக்கு தைலக் காப்பு சமர்ப்பிக்கப்படும்.

அதனால் வைகுண்ட ஏகாதசி வரை மூலவர் தரிசனம் கிடைக்காது. வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் சேவை/தரிசனம், உற்ஸவர் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருள்வது என்று விசேஷமாக இருக்கும்.


திருவரங்கத்தில்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

திருமலையில்

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி யானது அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். ரைட்மந்த்ரா சுந்தர் அவர்கள் தொடர்ந்து குன்றத்தூரில் உள்ள திருஊரகப் பெருமாள் கோயிலில் உழவாரப் பணி செய்வது வழக்கம். சென்ற ஆண்டும் நாம் நம் தளம் சார்பில் அங்கே உழவாரப் பணி செய்தோம். இதோ இந்த ஆண்டும் அங்கே உழவாரப் பணி செய்ய குன்றத்தூர் கோவிந்தன் நம்மை அழைக்கின்றார். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு உழவாரப் பணியை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம். அலைபேசியில் நம்மை அழைத்து தெரிவிக்க வில்லை என்று எண்ண  வேண்டாம். இதனையே அழைப்பாக எடுத்துக்கொள்ளவும்.

சுருக்கமாக குன்றத்தூர் கோவிந்தன் பற்றி அறிந்து கொள்வோம்.











 நம்மை வரவேற்கும் ராஜ கோபுரம். ராஜ கோபுரம் தாண்டி உள்ளே சென்றால் , பிரகாரத்தில்  லக்ஷ்மணருடன் கூடிய கல்யாண ராமர் சன்னதி உள்ளது. தனித்தனியே ஆஞ்சநேயர் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் உள்ளது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

 குலோத்துங்க சோழன் தம் தோஷம் நீங்க, காஞ்சி சென்று ஊரகப் பெருமாளை தரிசித்து, நீங்கப் பெற்றார், பின் குன்றத்தூர் வந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் இங்கே திருஊரகப் பெருமாள் கோயிலை காட்டினார். பெருமாள் இங்கே திருப்பதி வெங்கடாசலபதியாக இங்கே காட்சி தருகின்றார்.




 வைகுண்ட ஏகாதசி இங்கே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதோ கோயில் குருக்களிடம் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சிப்பதிவுகளை வாங்கி , இங்கே பதிவிடுகின்றோம்.



 குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்




                                             திருஊரகப்பெருமாள் கோயில் தரிசனம்

                                      குன்றத்தூர் முருகப் பெருமான் கோயில் தரிசனம்



                                                      கந்தலீஸ்வரர் கோயில் தரிசனம்


                                                    சேக்கிழார் கோயில் தரிசனம்

அன்றைய தினம் உழவாரப்பணியில் திருஊரகப்பெருமாள் தரிசனம்,கந்தலீஸ்வரர் கோயில் தரிசனம், சேக்கிழார் கோயில் தரிசனம் மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில் தரிசனம் என ஒருங்கே பெற உள்ளோம். யாரும் இந்த கிடைத்தற்கரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பார்கள். நாம் ஒரே உழவாரப்பணியில் நான்கு கோயில் தரிசனம் பெற உள்ளோம். அதாவது ஒரே நாளில் சைவம்,வைணவம்,கௌமாரம்,காணாபத்யம் என அருளை அள்ள இருக்கின்றோம். சென்ற ஆண்டு செய்த உழவாரப் பணி அனுபவத்தை பதிவின் இறுதியில் தந்துள்ளோம். படித்து இன்புறுக!

இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில்  உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயிலில்  வருகின்ற 16/12/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:16/12/2018 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயில்         
            குன்றத்தூர் அடிவாரம் 
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352/9677267266


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - http://tut-temple.blogspot.com/2018/01/blog-post_15.html


 குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2017/12/blog-post_95.html


 உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

1 comment:

  1. மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் புங்கம்பாடி
    https://pungampadi.blogspot.com/

    ReplyDelete