Subscribe

BREAKING NEWS

30 December 2018

"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - மார்கழி மாத உழவாரப் பணி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தில் வெகு நாட்களாக உழவாரப் பணி பற்றிய பதிவுகள் இல்லாது இருப்பது போல் தோன்றலாம். ஆனால் சுமார் 4 உழவாரப் பணி அனுபவப் பதிவுகள் நம்மிடம் உள்ளது. கொளத்தூர் ராஜராஜேஸ்வரி,பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், கோடகநல்லூர் உழவாரப்பணி, கூடுவாஞ்சேரி நூலாக உழவாரப்பணி, குன்றத்தூர் கோவிந்தன் அட..நம்ம திருஊரகப்பெருமாள் கோயில் என பட்டியல் நீளுகிறது.இன்றைய பதிவில் கோடகநல்லூர் உழவாரப் பணி பற்றி அறிவோம்.

சித்தன் அருள் இணைய தொடர்பாளர்களுக்கு கோடகநல்லூர் ஒரு வரப்பிரசாதம். நாமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்று வர முயற்சிதோ. ஆனால் அதற்கென்று வாய்ப்பு கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது சென்று தரிசனம் செய்ய தீர்மானித்தோம். மேலும் தாமிரபரணி புஸ்கரமும் இணைந்து விட்டது. எனவே இந்த முறை கோடகநல்லூர் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் சென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன் என்று சித்தன் அருளில் சொல்லி இருந்தார்கள். நாமும் உன் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கொடு பெருமாளே! என்று பிராத்தனை செய்து விட்டு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நம் குழுவோடு புஷ்கரம் சென்று நீராடி விட்டு, பின்னர் கோடகநல்லூர் சென்றோம்.

கோடகநல்லூர் திருத்தலம் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். மீண்டும் ஒரு முறை பதிவின் இறுதியில் தருகின்றோம். இந்தப் பதிவின் நீளம் சற்று அதிகம். மிக பொறுமையாக பார்க்கவும்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்து கோடகநல்லூர் செல்லும் என்று நாம் சரியாக கணிக்க முடியவில்லை. பின்னர் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு கோடகநல்லூர் சென்றோம். மனதில் பல கற்பனைகள், பெருமாள் கோயில், அதிகம் மக்கள் நடமாடாத இடம், பக்கத்திலே தாமிரபரணி. நம் கற்பனை நிஜத்தை மிஞ்சியது.

அன்று மதியம் சுமார் 1 மணி அளவில் கோடகநல்லூர் பெருமாள் கோயிலுக்குள் சென்றோம். நம்மை சித்தன் அருள் அக்னிலிங்கம் ஐயா அவர்கள் பெயர் சொல்லி அழைத்து வரவேற்றார்கள்.அனைத்தும் அகத்தியரின் அருள் என்று மனதில் கூறிவிட்டு, பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயாவிடம் என்னென்ன பணிகள் என்று கலந்து ஆலோசனை செய்தோம்.

நம்முடன் எம் தம்பி, எம் தங்கை, சுவாமிநாதன் ஐயாவின் குழுவில் சுமார் ஆறேழு பேர் என்று இருந்தோம்.மனதுள் பெருமாளை வேண்டிவிட்டு பணியை செய்ய ஆரம்பித்தோம்.










முதலில் அங்கிருந்த மேடையை நன்கு கழுவி சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். மேடை சுற்றியுள்ள தேவையில்லாத பொருட்களை எடுத்தோம், மகளிர் கூட்டும் பணியை செய்தார்கள். இந்த மேடையை சுத்தம் செய்யவே நமக்கு சுமார் 1 மணி நேரம் ஆகி விட்டது.




ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த மேடையை தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.



அடுத்து கோயிலைச்சுற்றி வலம் வந்தோம்.










பின்னர் கோயிலை சுற்றி நன்கு கூட்டி, நீர் விட்டு அலசி விடலாம் என்று அதற்கான பணியில் ஈடுபட்டோம்.




மேடை இருந்த பகுதியிலே இருந்த பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். 




இவ்வளவு தூசிகள் கொண்டதாக அந்தப் பகுதி இருந்தது.



அங்கே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பக்கத்தில் உள்ள இடத்தில வைத்தோம்.



உழவாரப்பணிக்கு நானும் தயார் என்று எம் குருவே நிற்கும் அழகை..இன்னும் காணவே மனம் ஏங்கியது.








ஆளாளுக்கு இந்தப் பணிதான் என்று என்று இல்லை. இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாம் செய்யும் உழவாரப்பணியில் சிறு ஓய்வு போன்றவை இருக்கும். இங்கு அப்படி அல்ல, ஒரே சீரான, நேர்த்தியான  பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.





மேடையை சுத்தம் செய்த பிறகு, தரையை நீர் ஊற்றி அலம்பிய காட்சி. இந்த மேடையின் சிறப்பு என்னஎன்று தொடர்பதிவில் காண்போம்.



இங்கு முடித்த பிறகு, பக்கத்தில் இருந்த இடத்தை ஏற்கனவே கூட்டியாகி விட்டது.அடுத்து மீண்டும் அங்கே நீர் ஊற்றி கழுவ வேண்டியது தான்.










அக்காவும் தம்பியும் இங்கே தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உழவாரப் பணி நமக்கு பல வழிகளில் சிறப்பானது. 








கோயிலை சுற்றி உள்ள பாதையில் நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணியை அடுத்து செய்தோம். கோயிலை சுற்றியுள்ள நடைபாதை தற்போது சுத்தம் செய்து வருகின்றோம். இங்கேயே இருக்க வேண்டுகின்றோம். 

மார்கழி  மாத உழவாரப்பணி அறிவிப்பு:-

இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி பெருங்களத்தூரில்  உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில்  வருகின்ற 06/01/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சதானந்த சுவாமிகள் 97 ஆவது குரு பூசை 23/01/2019 அன்று கொண்டாட உள்ளதால் இந்த உழவாரப் பணி செய்ய குருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:06/01/2019 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : சதானந்த சுவாமிகள் ஆசிரமம்,
பெருங்களத்தூர் 

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352/9677267266



- அடுத்த அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-


பனப்பாக்கம் உழவாரப்பணி அனுபவம் - அகத்தியர் அழைத்தார்...ஆனந்தம் தந்தார்... - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_16.html 

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html


உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

No comments:

Post a Comment