Subscribe

BREAKING NEWS

02 December 2018

நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்..


அனைவருக்கும் வணக்கம்.

முருகன் அருள் முன்னிற்க சிவன் மலை முருகன் பற்றிய சிறப்பு செய்திகளை இங்கே அறிய உள்ளோம்.மேலும் தற்போது நாம் கொண்டாடிய கந்த ஷஷ்டி விழாவின் துளிகளை பதிவின் இறுதியில் தருகின்றோம். ஏற்கனவே சொன்னது போல் சிவன் மலை என்றதும் இங்கே சிவன் இருக்கின்றார் என்று நினைத்தால் அது சரி அல்ல. இங்கே சிவனாரின் திருமகன் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.இந்தக்கோயில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இக்கோவில் உள்ளது



* சிவன் மலை என்பதால் இந்த மலையில் இருப்பது சிவன் கோவில் அல்ல மாறாக இங்கு முருகன் கோவில் இருப்பது சிறப்பு.

* சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே சிவன் மலை எனப்படுகிறது.

* ஆஞ்சநேயர் இந்த கோவில் வந்து முருககடவுளை வணங்கி சென்றது மிகவும் சிறப்பானது.

* தீராத நோய்களை தீர்க்கும் ஸ்தலமாக இது விளங்குகிறது.

* கந்த சஷ்டி கவசம் பாடப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலும், சிவன்மலை முருகன் கோவிலும் சில மைல் தூரங்களில் அருகே அமைந்திருப்பது சிறப்பு.

* இது மட்டுமல்லாமல் வட்டமலை முருகன், கொங்கண சித்தர் வழிபட்ட ஊதியூர் முருகன் கோவில்களும் இக்கோவிலில் இருந்து சில மைல் தொலைவிலேயே அமைந்துள்ளன.

* சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார்.

“சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

* சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.

* வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். இதற்கு நிறைய வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை என்பதால் வள்ளியாத்தாள், சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்து தன் மகனின் நோய் நீங்க பெற்றாள்.

* இங்குள்ள ஜீரஹரேசுவரர் சன்னதியில் மிளகுரசம் வைத்துப் பூஜித்துக் கொண்டால் காய்ச்சல் நீங்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

* வேறெந்த முருகன் கோயில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது.

* எல்லாவற்றையும் விட சிறப்பானது இங்குள்ள முருகன் தன் பக்தர்களின் கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளை உணர்த்தும் நிகழ்வாகும்.

* பக்தர்களின் கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளை சொல்லி விட்டு மறைந்துவிடுவார் முருகன்.

* முருகன் சொன்ன பொருளை கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்வர். இப்படி பூஜை செய்வதன் மூலம் அந்த பொருளால் ஏற்படும் ஆபத்துக்களையோ அல்லது அந்த பொருளுக்கு ஏற்படும் ஆபத்துக்களையோ பெருமளவில் குறைத்து முருகன் காத்தருள்வார் என்பது நம்பிக்கை.

* சுனாமி வந்தபோது கடல் நீரும், ஈரோடில் மஞ்சள் விலை ஏறியபோது மஞ்சளும், வைத்து பூஜை செய்யப்பட்டது.

* இந்தியா, சீனா யுத்தம் வந்தபோது துப்பாக்கி வைத்து பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

* முருகன் வந்து கனவில் ஒரு பொருளை உணர்த்தினார் என்பதை நாம் கோவில் அலுவலகத்தில் சொல்லி அவர்கள் கோவிலில் முருகன் சன்னதியில் பூ கட்டி போட்டு பார்த்த பின்னரே பொருளை பூஜை பெட்டியில் வைக்கின்றனர்.

* நமக்கு சாதகமாக உத்தரவு வந்தால்தான் நாம் சொன்ன பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்வர்.

* அடுத்த பொருளை அடுத்த பக்தர் வந்து சொல்லும் வரை ஏற்கனவே உள்ள பொருளே பூஜைக்கு வைக்கப்படுகிறது.

* பால், பச்சரிசி உள்ளிட்ட பல பொருட்கள் இக்கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ கந்த ஷஷ்டி விழாவிற்கு செல்வோமா?




சென்ற ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு முடித்து நாம் கந்த ஷஷ்டி விழாவிற்கு காப்பு கட்ட நமக்கு குருக்கள் பணித்தார். அதே போல் நம் குழுவின் சார்பில் மூவர் காப்பு கட்டிக்கொண்டோம். அன்று முதல் விரதம் இருக்க ஆரம்பித்தோம்.



இதோ..நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்..என்று முருகன் அருளில் திளைக்க நாம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து ஒரு வாரம் வந்தோம்.

 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

நூறு முகம் காட்ட இருக்கும் ஆறு முகனை தினமும் தொழுது கொண்டே வந்தோம்.



இதோ..அந்த நாளும் வந்தது. நாமும், சிவசங்கர்,பத்ம குமார் மூவரும் அன்று மாலை கோயிலை அடைந்தோம். முதன் முதலாக சூர சம்ஹாரம் காண இருக்கின்றோம். அன்று மாலை முழுதும் முருகா..முருகா என்று ஒலித்து கொண்டே இருந்தது. 



முருகன் கோயிலின் முன்னே வேல் வைக்கப்பட்டிருந்தது.


பின்னர் உற்சவர் இருக்கும் இடத்திற்கும் சென்றோம். நேரம் செல்ல செல்ல நமக்கு சற்று பதட்டமாக இருந்தது. குருக்கள் பூசையை ஆரம்பித்தார். இதோ சற்று நேரத்தில் வேல் வாங்கி சூர சம்ஹாரம் செய்ய முருகன் புறப்பட இருக்கின்றார். நாமும் முருகனுடன் செல்ல இருக்கின்றோம்.





அழகெல்லாம் முருகனே..அருளெல்லாம் முருகனே..என்று கேட்டிருப்போம், மேலே பாருங்கள்..பார்த்தால் இது புரியும். 





கந்த ஷஷ்டி விழா பற்றி கோயில் குருக்கள் சிறிய உரை நிகழ்த்தினார். மாலை நேரம் இரவு நோக்கி நெருங்கி கொண்டிருந்தது. நாமும் நம்முள்ளே உள்ள தீய குணங்களை சம்ஹாரம் செய்ய முருகனிடம் வேண்டினோம்.


நம் அன்பர் பத்ம குமார் முருகனுக்கு குடை பிடிக்க தயாராகி விட்டார். முருகனுக்கு குடை பிடிக்க இவர் ஒரு வாரம் விரதம் இருந்துள்ளார். சும்மாவா..சாட்சாத் அந்த பரம்பொருளின் கருணை நமக்கு சும்மா கிடைக்குமா என்ன?







இன்னும் சற்று நேரத்தில் முருகன் வேல் வாங்கப் போகின்றார். வேல் வாங்கி விட்டு சூரனை சம்ஹாரம் செய்ய புறப்பட போகின்றார். மூன்று வேல்களை ஒவ்வொன்றாக முருக அடியார்கள் வாங்கினார்கள். நமக்கு கதாயுதம் கிடைத்தது. அப்படியே வாங்கி விட்டு, முருக சரணம் விண்ணப் பிளக்க முருகன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.




அலைகடலென கூட்டம் வந்துவிட்டது. இதற்கு மேல் நாம் காட்சியை பதிவு செய்யவில்லை. சிவசங்கர் முருகனை ஒருபக்கத்தில் தூக்கி கொண்டு வந்தார். பத்மகுமார் குடையையே அப்படி,இப்படி என ஆட்டிக்கொண்டு வந்தார். நாம் முருகனுக்கு முன்னே மூன்று வேல் உள்ள படையில் ,படை வீரனாக சென்றோம். கோயிலுக்கு வெளியே செல்ல, இருள் சூழ்ந்து விட்டது.

முதலில் சிங்க முகன் முருகனிடம் மோதுவதற்கு ஓடோடி வந்தார். முருகன் ஒரு வேல் சென்று தலையை கொய்தது.இரண்டாவதாக கஜ முகன் ஒரு கை பார்க்க வந்தார். முருகன் சும்மா விடுவாரா என்ன? மீண்டும் கஜமுகன் தலையைக் கொய்து அனுப்பினார். இறுதியில் சூரன் வந்தார். இவர் ஒரே முறை வரவில்லை. மூன்று முறை முருகனிடம் வந்தார். முருகப் பெருமான் மூன்றாவது முறை சூரனை சம்ஹாரம் செய்து சேவலாக மாற்றினார்.இது செய்தியாக பார்த்தால் ஒன்றும் விளங்காது. நேரில் சென்று பார்த்தால் தான் நாம் சொல்ல வரும் விஷயம் புரியும். நாம் அப்படியே கண்ணீர் கடலில் மிதந்தோம். நம்மை முருகப் பெருமான் அவரது போர்ப் படையில் முன்னே நிறுத்தி உள்ளார் என்றால் என்னே நாம் செய்த புண்ணியம். சூர சம்ஹாரம் முடிந்து உள்ளே சென்ற முருகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை என்று தொடர்ந்தது.

நாம் உள்ளே அரோகரா! அரோகரா என்று கோஷமிட்டுக் கொண்டே உள்ளே சென்ற போது, சில அடியார்கள் நம் காலை தொட்டுக் கும்பிட்டார்கள். முருகா சரணம் என்று அவன் புகழ் ஓதி, போர் கருவிகளை வேலொடு கொடுத்தோம்.

மீண்டும் இரவு சுமார் 9 மணி அளவில் கோயில் சென்று முருகனை தரிசித்தோம், நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்... என்று நமக்குத் தோன்றியது.




ஆம். நம்மிடம் உள்ள தான், தனது என்ற பற்றுக்களை கொஞ்ச கொஞ்சமாக கந்த ஷஷ்டி சூர சம்ஹாரத்தில் அழித்து விட்டார் என்று இன்று நம்மால் உணர முடிகின்றது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதும் நமக்கு சத்தியமாக சாத்தியப்பட்டிருக்கின்றது.

எப்படியோ.. நம் கனவிலும் நினையாத கந்த ஷஷ்டி விரதம் நாம் முதன் முதலாக கைக்கொண்டிருக்கின்றோம். அடுத்த ஆண்டில் இன்னும் சீர்பட முருகனருள் வேண்டி நிற்கின்றோம். இந்தப் பதிவின் மூலம் சிவசங்கர் & பத்மகுமார் அவர்களுக்கும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் குருக்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/11/2018.html

சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_16.html

 வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_9.html

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html

ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html

 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4) - http://tut-temple.blogspot.com/2017/10/4_25.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html

வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html


No comments:

Post a Comment