அனைவருக்கும் வணக்கம்...
பனப்பாக்கத்தில் சென்ற மாதம் நடைபெற்ற உழவாரப் பணி அனுபவத்தை இந்த பதிவில்
தர விரும்புகின்றோம். ஏற்கனவே உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் -
பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும்
விழா என்ற பதிவிலும், உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு என்ற பதிவிலும் நம் உழவாரப் பணி யாத்திரை பற்றி கண்டோம்.
மீண்டும் அங்கிருந்து தொடர்கின்றோம்.
நேரம் மதியம் 1 மணியை தொட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நமக்கு இன்னும் துலக்க பாத்திரங்கள், துவைக்க வஸ்திரங்கள் என இருந்தன.
கோயிலின் மேல் புறம் உள்ள தூசி,தும்பு போன்றவற்றை நீக்கும் பணியில் திரு.சந்திரசேகரன் அவர்கள் செய்த காட்சி மேலே..கொஞ்சம் ரிஸ்க் அதிகம் தான் என்றாலும் அவரின் மனஉறுதி ஒன்றே போதும்.
பளபளக்கும் பாத்திரங்களின் அணிவகுப்பு மேலே
நேரம் ஆக,ஆக உழவாரப் பணி படு வேகமாகவும் அதே போல் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கல்லில் மட்டுமா கலை வண்ணம் தெரியும். நம் மகளிரின் கலை வண்ணம் மேலே தெரிகின்றதா?
நாம் தேய்த்துக் கொண்டிருப்பதைபார்த்த குருக்கள், சுமார் 1 மணி அளவில் மீண்டும் ஒரு 10 எண்ணிக்கையில் உள்ள குத்துவிளக்கு போன்றவற்றை தேய்த்து தரும்படி பணித்தார். நம்மால் முடியாது என்று சொல்ல முடியுமா என்ன? அவனுக்கு தொண்டு செய்ய வந்துவிட்டு நம் வசதியை பார்த்தால் தகுமா? இம்முறை மகளிருக்கு இணையாக திரு.ராஜகுமாரன் ஐயா வும் களத்தில் இறங்கிவிட்டார்.
நீங்களே பாருங்கள். நாம் சொல்ல வந்த செய்தி புரியும். மிக மிக நேர்த்தியாக கழுவினார்.
பணி இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.
யாரும் சும்மா இருக்கவில்லை.அவரவர்கள் அவர்களால் முடிந்த பணிகளை சிரமேற்கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். நமக்கும் இவற்றை பார்க்கும் போது மகிழ்வாக இருந்தது.
கோயிலினுள் உள்ள களைகளை எடுத்து வைத்திருந்தார்கள். இதுவே மிக மிக அதிகமாக இருந்தது. நாம் இவற்றை வெளியே அள்ளிப் போட்டோம்.
கோயிலை மீண்டும் ஒருமுறை வலம் வந்தோம். புலியும் மயிலும் வழிபட்ட தளம்.
பாத்திரங்கள் தேய்க்கும் பணி முழுமை பெற்றது. அடுத்து நாம் வழிபாடு செய்துவிட்டு உணவு அருந்துவோம். மணி 3 யை நெருங்கி விட்டது.எனவே இம்முறை உணவு அருந்துவோம் .அதன் பின்னர் வழிபாடு செய்வோம் என முடிவு செய்தோம்.
உழவாரப் பணிக்கு பின்னர்
சாதாரணமாக மதிய உணவு தாமதாமானால் பரவாயில்லை. காலை 9 மணி . முதல் தொடங்கி துலக்குதல்,துவைத்தல், கூட்டுதல் என பல சேவைகளை செய்யும் போது நம் உடல் வலு குறைந்து இருக்கும். இதில் உணவு தாமதாமானால் பின்னர் நமக்குத் தான் துன்பம்.எனவே உணவிற்கு பின்னர் வழிபாடு என்றோம்.
இத்தலத்தின் தல வரலாறு பற்றி கேள்விப்பட்டோம். இப்படியெல்லாம் நடைபெற
காரணம் என்ன? கைலாயத்தின் முக்கியத்துவம் இங்கே உணர முடிகின்றது. தலைவரின்
சொல்லே தரணி ஆளும் மந்திரம் என்றும் உணர்ந்தோம்.இதோ தல வரலாறு.
தலவரலாறு
ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார
மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும்
அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரழகை கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை
விரித்து ஆடுவதையும், நந்திதேவர் அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு
ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு
உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும்
நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால்
அவர்களும் கயிலாயம் சென்றனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை
மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால்
புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம்
நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற
காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம்பதியில் நம் திருவுருவமாக உள்ள
சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும்
இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.
பதிவின் நீளம் கருதி, இங்கே உணவருந்தி விட்டு அனைவரும் காத்திருப்போம். அடுத்த பதிவில் வழிபாடும், TUT குழுவிற்கு கிடைத்த சேவை பற்றியும் அறிவோம். அதுவரை பொறுமை காக்கவும்.
மீள்பதிவாக:-
உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html
பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_2.html
பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.com/2017/12/108.html
துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_21.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html
நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
No comments:
Post a Comment