அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
மலையேற்றத்தில் நம் தளம் மூலம் சதுரகிரி,வெள்ளியங்கிரி, அத்திரி மலை, பருவத மலை என சென்று வந்திருக்கின்றோம். இது தவிர ஏராளமான மலைகள் நம் தமிழ் நாட்டில் இருக்கின்றன.தேனி சண்முகநாத மலை, மிருகண்ட மகரிஷி மலை என தற்போது தான் நாம் அறிந்தோம். இது போல் ஒவ்வொரு ஊரிலும் மலைகள் ஏராளம். அவை தரும் நன்மைகளோ தாராளம். வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் நம் குழுவில் சிலரோடு நாம் சென்று வந்த பருவத மலை யாத்திரை பற்றி இங்கே தொட்டு காட்ட விரும்புகின்றோம்.
அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை என்று சொல்லுவார்கள்.ஏற்கனவே பருவத மலையின் சிறப்புகள் பற்றி பேசியுள்ளோம். இதில் 10 சிறப்புகள் பார்த்து விட்டு, மலையேற்ற தொடங்குவோம்.
1. ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதி தமிழகத்திற்கு வந்த போது முதன் முதலாக காலடி வைத்த மலை
2. ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தென் பகுதிக்கு தூக்கி வந்த போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை
3. ஏழு சடைப்பிரிவுகளை கொண்ட மலை
4. மூலிகை காற்று எப்போதும் வீசி தீராத நோய் தீர்க்கும் மலை
5. 4500 அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாறைப் படி,தண்டவாள படி ,ஏணிப் படி கொண்ட உலகில் உள்ள அதிசய மலை
6. சித்தர்கள் வாழும் மலை. பல அடியார் பெருமக்களுக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.மலையில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.
7. இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி, மலர்களின் வாசனையை நுகரலாம்.
8. அம்மன் அழகு...வேறெங்கும் காண முடியாத பேரழகு. இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம்.
9. அம்மன் கருவறையிலிருந்து வெளியே செல்ல ,செல்ல தூரம் அதிகரிக்க,அதிகரிக்க, அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் இருக்கும். இந்த அருள் நிலை காண கண் கோடி வேண்டும் )
10. சிவபெருமான் எதிரே கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் நாகம்,சூலம், உடுக்கை பிம்பம் காணலாம்.
திருஅண்ணாமலையில் இருந்து காலை சுமார் 6 மணி அளவில் புறப்பட்டு சுமார் 8 மணி அளவில் பருவத மலை ஊரை அடைந்தோம். அங்கிருந்து பருவத மலை அடிவாரம் செல்ல நடந்தோம். சுமார் 3 கி.மீ தொலைவில் ஆட்டோவில் சென்றோம். அங்கிருந்த கோயிலில் வழிபட்டு நடக்க ஆரம்பித்தோம்.
இன்னும் சிறிது நேரத்தில் அடிவாரக் கோயிலை அடைய உள்ளோம். இங்கே எப்போதும் கஞ்சி ஊற்றுவார்கள். நாம் ஊரில் இருந்த கோயில் பகுதியிலே நன்கு சாப்பிட்டு விட்டோம்.
இனி அடிவாரக் கோயிலில் தரிசனம் செய்து விட்டு , மலையேற்றம் ஆரம்பிக்க வேண்டியது தான்.
ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆசி பெற்றோம். கோயிலின் முன் பூட்டு போட்டு வேண்டுதல் வைத்து இருந்ததை பார்த்தோம். இனி நம்மை பருவத மலை அடிவார நுழைவாயில் வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது.
பிட்டுக்கு மண் சுமந்தார் அந்த பரம்பொருள் அன்று. இன்று இந்த கோயிலை மேலே கட்டுவதற்குஅன்பர்கள் கட்டாயம் மண் சுமந்து கொண்டு இருபார்கள்கள் என்பது கண்கூடு.
கூத்தாடி சித்தர் தரிசனம் பெற்று , நடை தொடர்ந்தோம்.
900 ஆம் படியை அடைந்து விட்டோம்.
வழியில் செல்லும் போதே தூரத்தில் தெரிகின்ற பருவத மலையை சற்று பெரிதாக்கி உற்று நோக்கினோம். வழியின் இரு மருங்கிலும் பசுமை.. காண காண களியாட்டம் தான்.
நம்முடன் சுமார் 60 வயது அன்பர் முதல் முறையாக இணைந்து வந்துள்ளார். எனவே பொறுமையாக ஓய்வெடுத்து நடந்தோம்.
மலையேற்றத்தின் முதல் பகுதியாக இங்கு ஒரு கோயில் வரும். இங்கு சிவனார்,ஐயப்பன் என தரிசனம் பெறலாம். நம்முடன் வந்தவர்கள் ஒவ்வொருவராக முன்னே சென்று கொண்டிருந்தார்கள்.
திருவல்லிக்கேணி ( திரு அல்லிக் கேணி ) பருவதமலை அடியார்கள் சங்கம் தான் இங்கே சேவை செய்து வருகின்றார்கள். ஓரளவிற்கு மலையின் மேலே ஏறி வந்து விட்டோம். இனி தான் மலை மேல் கம்பி பிடித்து ஏற வேண்டும்.
- இனிவரும் பதிவுகளில் மீண்டும் மலை ஏறுவோம்.
வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html
வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html
மலையேற்றத்தில் நம் தளம் மூலம் சதுரகிரி,வெள்ளியங்கிரி, அத்திரி மலை, பருவத மலை என சென்று வந்திருக்கின்றோம். இது தவிர ஏராளமான மலைகள் நம் தமிழ் நாட்டில் இருக்கின்றன.தேனி சண்முகநாத மலை, மிருகண்ட மகரிஷி மலை என தற்போது தான் நாம் அறிந்தோம். இது போல் ஒவ்வொரு ஊரிலும் மலைகள் ஏராளம். அவை தரும் நன்மைகளோ தாராளம். வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் நம் குழுவில் சிலரோடு நாம் சென்று வந்த பருவத மலை யாத்திரை பற்றி இங்கே தொட்டு காட்ட விரும்புகின்றோம்.
அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை என்று சொல்லுவார்கள்.ஏற்கனவே பருவத மலையின் சிறப்புகள் பற்றி பேசியுள்ளோம். இதில் 10 சிறப்புகள் பார்த்து விட்டு, மலையேற்ற தொடங்குவோம்.
1. ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதி தமிழகத்திற்கு வந்த போது முதன் முதலாக காலடி வைத்த மலை
2. ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தென் பகுதிக்கு தூக்கி வந்த போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை
3. ஏழு சடைப்பிரிவுகளை கொண்ட மலை
4. மூலிகை காற்று எப்போதும் வீசி தீராத நோய் தீர்க்கும் மலை
5. 4500 அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாறைப் படி,தண்டவாள படி ,ஏணிப் படி கொண்ட உலகில் உள்ள அதிசய மலை
6. சித்தர்கள் வாழும் மலை. பல அடியார் பெருமக்களுக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.மலையில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.
7. இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி, மலர்களின் வாசனையை நுகரலாம்.
8. அம்மன் அழகு...வேறெங்கும் காண முடியாத பேரழகு. இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம்.
9. அம்மன் கருவறையிலிருந்து வெளியே செல்ல ,செல்ல தூரம் அதிகரிக்க,அதிகரிக்க, அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் இருக்கும். இந்த அருள் நிலை காண கண் கோடி வேண்டும் )
10. சிவபெருமான் எதிரே கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் நாகம்,சூலம், உடுக்கை பிம்பம் காணலாம்.
திருஅண்ணாமலையில் இருந்து காலை சுமார் 6 மணி அளவில் புறப்பட்டு சுமார் 8 மணி அளவில் பருவத மலை ஊரை அடைந்தோம். அங்கிருந்து பருவத மலை அடிவாரம் செல்ல நடந்தோம். சுமார் 3 கி.மீ தொலைவில் ஆட்டோவில் சென்றோம். அங்கிருந்த கோயிலில் வழிபட்டு நடக்க ஆரம்பித்தோம்.
இன்னும் நாம் பர்வத மலை ஏற்றம் ஆரம்பிக்க வில்லை. மலை அடிவாம் செல்ல இந்த பாதை வழியே சுமார் 2 கி.மீ நடக்க வேண்டும்.
பொடி நடையாக நடக்க ஆரம்பித்தோம்.
நடந்து செல்லும் போதே பருவத மலை தரிசனம் கிடைத்தது.பார்ப்பதற்கு நந்தி வடிவில் மலை தெரியும்.
இனி அடிவாரக் கோயிலில் தரிசனம் செய்து விட்டு , மலையேற்றம் ஆரம்பிக்க வேண்டியது தான்.
ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆசி பெற்றோம். கோயிலின் முன் பூட்டு போட்டு வேண்டுதல் வைத்து இருந்ததை பார்த்தோம். இனி நம்மை பருவத மலை அடிவார நுழைவாயில் வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது.
பாதம் தொட்டு வணங்கி ஓம் நம சிவாய என்று மனதில் கூறி, யாத்திரை தொடர்ந்தோம்.
ஆரம்பித்த பாதை நன்கு கல் வைத்து படிக்கட்டுகளாக போட்டு இருந்தார்கள். நடக்க இலகுவாக இருந்தது. கையில் குச்சி வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம். காலையில் இது போன்ற மலை யாத்திரை மனதிற்கு தெம்பு அளிக்கும். நம் மன உறுதியை திடப்படுத்தும்.
பிட்டுக்கு மண் சுமந்தார் அந்த பரம்பொருள் அன்று. இன்று இந்த கோயிலை மேலே கட்டுவதற்குஅன்பர்கள் கட்டாயம் மண் சுமந்து கொண்டு இருபார்கள்கள் என்பது கண்கூடு.
கூத்தாடி சித்தர் தரிசனம் பெற்று , நடை தொடர்ந்தோம்.
900 ஆம் படியை அடைந்து விட்டோம்.
வழியில் செல்லும் போதே தூரத்தில் தெரிகின்ற பருவத மலையை சற்று பெரிதாக்கி உற்று நோக்கினோம். வழியின் இரு மருங்கிலும் பசுமை.. காண காண களியாட்டம் தான்.
இனி இந்தப் படிக்கட்டு பாதை இருக்காது. கல் மண் கொண்ட பாதை தான். கல்லும் மண்ணும் காலுக்கு மெத்தை என்று மனதில் கூறிக் கொண்டே நடக்கலானோம்.
நம்முடன் சுமார் 60 வயது அன்பர் முதல் முறையாக இணைந்து வந்துள்ளார். எனவே பொறுமையாக ஓய்வெடுத்து நடந்தோம்.
மலையேற்றத்தின் முதல் பகுதியாக இங்கு ஒரு கோயில் வரும். இங்கு சிவனார்,ஐயப்பன் என தரிசனம் பெறலாம். நம்முடன் வந்தவர்கள் ஒவ்வொருவராக முன்னே சென்று கொண்டிருந்தார்கள்.
மீண்டும் இங்கிருந்து மலையேற்றம் தொடர்ந்தோம்.
கற்கள், பாறைகள், மண் என பாதை மாறி விட்டது. இங்கெல்லாம் மிக மிக பொறுமையாக சென்றோம்.
இங்கிருந்து நாம் செல்ல கம்பி கைப்பிடி வைத்து இருந்தார்கள்.ஒவ்வொன்றாக பிடித்துக்கொண்டே மேலே ஏற வேண்டும். இவை இல்லை என்றால் நம்மால் மேலே ஏறுவது சிரமம். எப்படி இது போன்ற கம்பிகளை கொண்டு இப்படி ஏற்படுத்தி இருக்கின்றார்களால் என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த வசதி இல்லாத பன்னெடுங்காலத்தில் எப்படி மலையேற்றம் நடந்து இருக்கும். மலைப்பாக இருக்கின்றது? இதுக்கே மலைத்தால் எப்படி? இன்னும் மேலே மேலே ஏற ஏற நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!
- இனிவரும் பதிவுகளில் மீண்டும் மலை ஏறுவோம்.
மீள்பதிவாக:-
அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_21.html
வெள்ளியங்கிரி ஈசன் தந்த தெம்பே போதும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_28.html
வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html
வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html
வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html
இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html
குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html
No comments:
Post a Comment