Subscribe

BREAKING NEWS

05 August 2018

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்

காரணம் இன்றி காரியமில்லை எனபது மீண்டும் இங்கே நிரூபணமாகி உள்ளது. இதோ.  ஸ்ரீ மச்சமுனி சித்தர்  ஜெயந்தி விழா  அழைப்பிதழை இங்கே பகிரும் பொருட்டு தான் இந்த பதிவு தரப்படுகின்றது. இதன் பொருட்டு தான் நாம் திருப்பரங்குன்றம் யாத்திரை பதிவுகளை தொடர்ந்து இங்கே தொகுத்து வருகின்றோம்.

சென்ற பதிவிலே நாம் மச்சமுனி சித்தர் தரிசனம் பெற்றோம். இங்கே அவர் பற்றிய செய்திகளை இங்கே தருகின்றோம்.

மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800 , மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூட்களை நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மச்சமுனி சித்தர் ஐயா அவர்கள் வழங்கி உள்ளார்கள்.


மீண்டும் தரிசனம் முடித்து கீழே இறங்கி வரும் போது எடுக்கப்பட்ட காட்சிகளை இங்கே தருகின்றோம்.



மாசற்ற காற்றும், மனிதர்கள் அதிகம் இல்லாத தனிமையும். நம்மை வேறொரு உலகத்திற்கு ஆட்கொள்கிறது. சொல்லில் இதனை எழுத முடியவில்லை. சித்தர் பெருமக்களை நேரில் காண இயலாத போது, இது போன்ற பேரமைதியான சூழல் நம்மை அவர்களின் உலகத்திற்கு எடுத்து செல்லும்.



படிக்கட்டு பாதை வழியே தான் செல்ல வேண்டும் என்று விரும்பினோம். இந்த வழியில் சென்றால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே செல்ல முடியாது என்று கோயிலில் சிலர் கூறினார்கள்.எனவே மீண்டும் வந்த பாதை வழியே வாழ்க்கையைத் தொடங்கினோம். குறிப்பாக சொல்வதானால் வந்த வேலையை விட்டு விட்டு நம் சொந்த வேலையை செய்வதால் தான் நமக்குத் துன்பம் வருகின்றது.ஆழ்மனதிற்கு  புரிகின்றது. ஆனால் மேல் மனம் குரங்காட்டம் அல்லவா இருக்கின்றது.




அமைதி..அமைதி..அமைதி மட்டுமே இங்கே சாத்தியம். ஐயாவின் அருள் அலைகளை இங்கே அமைதியில் உட்கார்ந்தால் பிடிக்கலாம்.









இதோ..படிப் படியாக இறங்கி, திருப்பரங்குன்றம் கோயிலை அடைந்து விட்டோம். இன்னும் அந்த பச்சை நிற சுனை நம் மனதில் நிறைந்து இருக்கின்றது.





மச்ச முனி சித்தர் அருள் பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால் அவர் இந்த உலக துன்பங்களில் இருந்து விடுபடுவது உறுதி. அதனுடன் யோகத்தில் நிலைபெறுவதும் உறுதி. இதோ..ஸ்ரீ மச்சமுனி சித்தர்  ஜெயந்தி விழா பூசை ஆடி மாதம் 21ம் நாள் 6/8/2018 அன்று நடைபெற உள்ளது. நம் அன்பர்கள் கலந்து கொண்டு இறையருளும் குருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.


இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் என்பதே ஐயா எடுத்துரைக்கும் செய்தி. ஐயாவின் அருளோடு பதிவை முழுமை செய்கின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html



No comments:

Post a Comment