Subscribe

BREAKING NEWS

01 June 2018

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை

அடியார் பெருமக்களே..

அனைவர்க்கும் வணக்கம். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாம் திருச்சி செல்ல நேரிட்டது. அப்போது இரண்டு நாள் பயணமாக திட்டம் வைத்து சென்றோம். சனிக்கிழமை திருப்பட்டூர், திருநெடுங்களம், எறும்பீஸ்வரர், தாயுமானவர்,உச்சிப்பிள்ளையார்,உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் என சென்று வந்தோம். அடுத்த நாள் காலை நம் குழுவின் உறவும், அகத்தியர் வழிபாட்டை நமக்கு உணர்த்திய திரு.செல்லப்பா அண்ணனை தொடர்பு கொண்டு நம் திருச்சி பயணத்தை பற்றி சொன்னது தான் தாமதம், அவர் உடனே வீட்டிற்கு வரும் படி அன்பு கட்டளை இட்டார். பின்பு அவர் வீட்டிற்கு சென்று காலை உணவு முடித்து அன்றைய தினம் சித்தர்கள் மற்றும் ஜீவன் முக்தர்கள் யாத்திரையாக மாற்றிவிட்டார். அனைத்தும் நாம் அருள் பெற வேண்டிய புண்ணிய ஷேத்ரங்கள். அவை ஸ்ரீ கட்டக்கழி சுவாமிகள் ஜீவசமாதி,ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் மடாலயம்,ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் மடாலயம், பொன்மலைப் பரதேசி மடாலயம் என நீண்டது. 

நாம் தரிசித்த கோயில்கள் அனைத்தும் நாம் ஏற்கனவே காண வேண்டும் என்று குறித்து வைத்து இருந்தோம். ஆனால் அன்று எதிர்பாராதவிதமாக நமக்கு அருள் நிறைந்த ஆனந்த தரிசனமாக அமைந்து விட்டது. மற்ற பொதுவான கோயில்களுக்கு என்று வேண்டுமானாலும் நாம் செல்லலாம். இவை போன்ற சித்தர் கோயில்களுக்கு நாம் ஏதேனும் புண்ணியம் செய்தாலோ அல்லது குருவருள் இருந்தாலோ தான் செல்ல முடியும். சரி..வாருங்கள் ..குழுமியானந்த சுவாமிகள் பற்றி உணர்வோம்.



திருச்சி வரகனேரியில் பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோயில் உள்ளது, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015 ஆண்டில் திருப்பணிகள் நிறைவு பெற்று, குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதனை நாம் நம்மை வரவேற்கும் திருக்கோயிலின் கோபுரம் பார்த்தே அறிய முடிகின்றது. 

உள்ளே சென்றதும் விநாயகரை வணங்கி வழிபட்டு , நம் ஐயாவின் அருள் பெற நேரே செல்லலாம். பொதுவாக சித்தர் பீடம் சென்றால் பொதுப் பிரார்த்தனை வைக்கவும். அனைத்து சித்தர்களும் அருளை வாரி வாரி வழங்கவே காத்திருக்கின்றார்கள். நாம் தான் அவர்களிடம் சென்று ஏதேனும் மாய மந்திரம் போடுவார்களா? என்று தேடி வருகின்றோம். சித்தர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள். நம் பிரச்சினை எப்போது தீரும் என்று நினைக்காது, அவர்களிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மெல்ல,மெல்ல நம் நிலை மாறுவதை நீங்கள் அனுபவத்தால் உணர முடியும். 

தங்கள் அருகில் உள்ள சித்தர் உயிர்நிலை கோயில்களுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் 7 வாரம் சென்று பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு வாருங்கள். முடியாதவர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உதாரணமாக நல்ல குரு கிடைத்து ஆன்மிக நாட்டம் பெற்றிட வியாழன் அன்று காலை பிரம்மமுகூர்த்தம் அல்லது மாலை 5 முதல் 7 மணி வரை ..இதே போல் தொடர்ந்து 7 வாரம் அசைவம் தவிர்த்து வழிபட்டு வருதல் நலம். இதே போல் எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சித்தர்களை,ஜீவன் முக்தர்களை கைப் பிடியுங்கள், பின்னர் அவர்களே தங்களை விடாப் பிடியாக பிடித்துக் கொள்வார்கள். 

முதலில் நீங்கள் உங்கள் கையை,அவர்களின் கையோடு பிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் நம்மை பிடித்து விட்டால், அது தலைமுறை தோறும் தொடரும். நாம் பிடித்தால் கூட விட்டு விடுவோம். ஆனால் அவர்கள் பிடித்தால் நம்மை விடமாட்டார்கள்.இது தான் சித்தர்களின் கருணை நிலை.


உள்ளே சென்று கணபதியையோ வணங்கினோம். அப்படியே அருகிலேயே ஐயாவின் அருள்நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


மேலே காணும் காட்சியில் ஐயாவின் திருமுகம் ஒளி வெள்ளத்தால் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. நாமும் மறுபடியும், மறுபடியும் காட்சியை பிடித்து பார்த்தோம். ஆனால் ஒளியின் அருளில்...ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் தரிசனம் நமக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.



நம் உடல் சிலிர்த்தது. பின்னர் அன்று காலை நடைபெற்ற தீப ஆராதனை கண்டு திளைத்தோம்.





அந்த இடமே கருணை மழையில் நனைந்து கொண்டிருந்தது. குருவின் கால் பட்ட இடம் தான் கைலாயம். கையில் உள்ள பணம்,பொருள் இல்லாது( கையில் உள்ளது லாஷ் ஆனால் தான் கைலாஷ் நினைவிற்கு வரும் ) போனால் தான் நமக்கு கைலாயம் தோன்றுமோ? இங்கு மனம் நுண்ணிய அதிர்விற்கு செல்கின்றது. மனக்கசடுகள், மன அழுக்குகள் நீங்குவதை இங்கே கால் வாய்த்த உடனே உணரலாம்.




அப்படியே கோயில் வலம் வரும்போது விநாயகர் அகவல் படித்தோம். தில்லையின் கூத்தனையும், அகிலம் ஆளும் அன்னையையும் தரிசித்தோம். மீண்டும் ஒருமுறை குழுமியானந்தர் தரிசனம் பெற்றோம்.இப்போதும் ஒளி ரூபமே.









காண்பதற்கரிய, கிடைத்தற்கரிய சுவாமிகளின் திருவுருவம் கண்டோம். இதற்காகத் தான் நமக்கு ஒளி தரிசனம் கொடுத்தீரா? என்று மனதுள் கேட்டோம். பதிவின் ஆரம்பத்திலே  பிர்மரிஷியா இல்லை பிரம்மரிஷியா? என்று கேள்வியோடுதான் துவக்கினோம். விடை மேலே கிடைத்து விட்டது. 







வள்ளலார் தரிசனம், நால்வர் அருள்நிலை, திருமுறை வழிபாடு கண்டோம். 

பிர்மரிஷி குழுமியானந்த சுவாமிகளின்  மடாலயத்தில் மாதாந்திர திருவோணம்,மாதாந்திர பூசம், அமாவாசை ஆகிய   நாட்களில் பகல் 12 மணி அளவில் வழிபாடு நடைபெற்று சுமார் 700 பேர் முதல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 இந்த அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

கோவில் காலை 06.30 மணி முதல்  11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் 08.00 மணிவரையும் திறந்திருக்கும். காலை  06.30 மணி,காலை  10.30 மணி,மாலை  06.30 மணி,இரவு   08.00 மணி என நான்கு கால பூசைகள் இங்கே செய்யப்பட்டு வருகின்றது.

மாதாந்திர திருவோணம்,  மாதாந்திர பூசம்,  மாதாந்திர அமாவாசை, திருக்கார்த்திகை,  பிரதோஷம், மாதாந்திர பௌர்ணமி,  சங்கட ஹர சதுர்த்தி ஆகிய நாட்களில்  சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுசமயம் ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகளின் வார வழிபாட்டு  குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. 


சுவாமிகள்  ஜீவ சமாதி   அடைந்த நாளான  தமிழ் வைகாசி  மாதம் திருவோணம் நட்சத்திரம்   அன்று மகா குருபூஜை  வருடா வருடம் மிக சிறப்பாக 3 நாட்கள்  விழாவாக நடைபெற்று வருகிறது.     மூன்று நாட்களும்     சுவாமிக்கு  சிறப்பு அபிஷேக  ஆராதனையும்,  பொதுமக்களுக்கு  அன்னதானமும் விமரிசையாக  நடைபெற்று வருகிறது. இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும்  சுவாமிகளின் 118 ஆவது குருபூசை விழா வருகின்ற 4/6/2018 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு குருவருளும்,திருவருளும் பெற வேண்டுகின்றோம்.



ஏற்கனவே கூறியபடி மேற்படி விழாவானது மூன்று நாட்கள் களை கட்டும். 4/6/2018 , 5/6/2018, 6//6/2018 என மூன்று நாட்களும்  பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஏன் மூன்று நாட்களும் இன்னிசை நிகழ்ச்சி என்றால் சுவாமிகளிடம் வந்து பிரார்த்தனை செய்தால் நல்ல குரல் வளம் பெற்று பாடகர்களான வருவார்கள் என்பது உறுதி. தியாகராஜ பாகவதர் போன்ற பாடகர்கள் இங்கு வந்து சுவாமிகளின் அருள் பெற்ற பின்னரே, கலைத்துறையில்  உச்சம் தொட்டார்கள் என்பது செவி வழி செய்தி ஆகும்.

வாய்ப்புள்ள அன்பர்கள் ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  விழாவில் கலந்து கொண்டு குருவருள் பெறுக. நாமும் நம் தளம் சார்பாக நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் இணைய குருவிடம் வேண்டுகின்றோம். அருகிலேயே ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசனம் பெற்று வரலாம்.

தொடர்புக்கு :

குழுமிகரை, வரகனேரி,(பொன்னையா மேல்நிலைப் பள்ளி அருகில்) திருச்சிராப்பள்ளி 620 008, தமிழ்நாடு, இந்தியா

Ph: 0431-34268547  E.Mail : kulumiananthaswamy@gmail.com


- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.


மீள் பதிவாக :-

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html


முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html


வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_69.html

மதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14 - http://tut-temple.blogspot.in/2018/04/13-14.html

சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_87.html

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - வைகாசி விசாகத் தேர்த் திருவிழா - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_14.html

No comments:

Post a Comment