Subscribe

BREAKING NEWS

20 April 2017

குறள்.07



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


பொருளுரை:

ஒருவகையாலும் தனக்கு நிகர் இல்லாத தன்மையுடைய இறைவனின் திருவடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல் மனக்கவலையை நீக்குதல் அரிதாகும்.


எளிய பரிகாரங்களும், இனிய பலன்களும் 

பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.  
சிவனடியான் வடிவேலன்.

No comments:

Post a Comment