Subscribe

BREAKING NEWS

31 December 2018

TUT தளம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை திருவிழா

அனைவருக்கும் வணக்கம்.

என்னப்பா? பஞ்செட்டி சதய பூசை  திருவிழா என்று யோசிக்கிக்கின்றீர்களா? ஆம். பொதுவாக பஞ்செட்டி சதய பூசை வழிபாடு என்று தான் நாம் உணர்வோம், உணர்த்தப்படுவோம். ஆனால் TUT குழுவின் சார்பில் புரட்டாசி  மாதம் 7 ஆம் நாள் (23/09/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற சதய பூசை வழிப்பாட்டை தாண்டி திருவிழா என்ற நிலைக்கே நம்மை இட்டுச் செல்கின்றது. அந்த அனுபவத்தை சொல்லில் வடிப்பது கடினம். இருப்பினும் இங்கே கொஞ்சம் முயற்சி செய்கின்றோம்.

அன்றைய தினம் சுமார் 3 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து வேன் மூலம் புறப்பட்டோம்.செல்லும் வழியில் ஊரப்பாக்கம்,பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் அகத்திய சொந்தங்களை வேனில் ஏற்றிக்கொண்டு, அப்படியே கோயம்பேடு சென்றோம். அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். இதனைத் தவிர நம்மால் வேறு தறிப்பிடங்களை ஏற்பாடு செய்ய இயலவில்லை.






பின்னர் கோயம்பேட்டில் இருந்து யாத்திரை ஆரம்பமானது.



சுமார் 5 மணி அளவில் கோயிலை அடைந்து விட்டோம், பூசை முடித்து குழு காட்சிப்படம் எடுக்கலாம் என்று நினைத்தால் இருட்டிவிடும் என்பதால், அப்போதே மாலை வேளையில் சில படங்கள் எடுத்தோம்.






பின்னர் கோயிலின் உள்ளே சென்று பூசைக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். குழந்தைகளும் தங்களால் இயன்ற வண்ணம் சேவையில் ஈடுபட்டார்கள். இது போன்ற குழந்தைச்செல்வங்களை காணுதல் அரிது, எப்போதும் அலைபேசியில் கேம் விளையாடும் சிறார்கள் எங்கே? இது போன்ற பூசை, உழவாரப் பணியில் ஈடுபட்டு நமக்கும் அவ்வப்போது தெம்பு தரும் இவர்கள் எங்கே? திருமதி தாமரை அவர்களின் குழந்தைகளைத் தான் கீழே நீங்கள் பார்க்கின்றீர்கள்.





அடுத்து சிலரை அழைத்து ஒவ்வொரு சன்னதியிலும் தீபமேற்றி வழிபட வேண்டினோம்.




விநாயகர்,முருகன் என ஒவ்வொரு சன்னதியிலும் வழிபாடு செய்தோம் 




அடுத்து பூக்கள் என்னென்ன உள்ளது என்று சரிபார்த்தோம்.




 இங்கே சில அகத்திய அடியார்கள் சிலர் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியிலும், சிலர் வில்வம் பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.


அன்று உழவாரமும் நடைபெற்றதை மேலே நீங்கள் காணலாம். உழவாரப் பணி என்றால் கூட்டம் சேர்த்து செய்ய வேண்டியது என்று நீங்கள் எண்ண வேண்டாம். கூட்டத்தில் ஒன்றாய் இருப்பினும் நீங்கள் கோயிலில் ஒரு சிறு தூசியைத் துடைத்தாலும் அது உழவாரப் பணியே.




நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தார்கள்.


இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அபிஷேகம் தொடங்கியாகி விட்டது.









இரவின் மடியில் கோபுர தரிசனம்.




அட..கூட்டத்தை பார்க்கும் போது திருவிழா போன்று தான் அல்லவா தெரிகின்றது.





அபிஷேகம் முடித்து,தீபாராதனை காட்டிய உடன், சங்கல்பம் செய்ய கேட்ட போது நாம் நம் அலைபேசியில் இருந்து ஒவ்வொரு அன்பரின் பெயரை சொன்னோம். ஆவூரு அன்பரின் பெயரை சங்கல்பத்திற்காக சொன்ன போது, அகத்திய பெருமானிடம் இருந்து ஒவ்வொரு பூவாக கீழே விழுந்தது. இது தான் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். வேறென்ன வேண்டும் நமக்கு? அடுத்து அன்னம்பாளிப்பு தான்.




அன்றைய தினம் அகத்தியரின் தரிசனம் இதோ..அனைவருக்கும் தரப்படுகின்றது.




அன்றைய பூசையில் TUT குழுவின் மூலம் தான் பூசை/அபிஷேகப் பொருட்கள் கொண்டு வர சொன்னோம். அனைத்தும் அதிகமாக இருந்தது. பூக்களா? இரண்டு, மூன்று வண்ணங்களில், பஞ்சாமிர்தமா? ஒரு பெரிய தட்டு நிறைய..கடைசியில் கொடுத்த அன்னமா ..சுமார் 10 வித அன்னங்கள்..உயரிய சுவையில்..இவ்வாறு நம் உடல்,பொருள் தாண்டி நாம் கொடுத்தோம். அகத்தியரும் முருகப் பெருமானின் பரிபூரண தத்துவத்தை அங்கே காட்டி, அங்கே வந்த அனைவரையும் கண் திறந்து பார்த்தார். அவரின் கடைக்கண் பார்வை பட்டபின் என்ன வேண்டுவது? அன்பே..அகத்தீசா ? யாமொன்றும் அறிந்திலோம். 

முருகனின் ஆசி கிடைக்கும்  என்று  நாம் அன்று எண்ணவில்லை. அனால்  பூசை அறிவிப்பின் பதிவை முன்கூட்டியே வேலுண்டு துணை வருங்கால் - TUT சதய பூசை அழைப்பிதழ் என்றே அளித்தோம். நாம் வழக்கமாக சொல்வது தான். நாம் எதனையும் திட்டம் இடுவது கிடையாது, நடப்பது எல்லாம் நம்மை வழி நடத்தும் குருவின் வசம் தான்.

வாழ வழி காட்டும் அகத்தியருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து சென்றோம். இதே போல் அடுத்த பூசைக்கு நாம் 2019 ஆம் ஆண்டிலும் காத்திருக்கின்றோம்.

விரைவில் பஞ்செட்டி அகத்தியர் பதிவு தர குருவிடம் வேண்டுகின்றோம்.


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

வேலுண்டு துணை வருங்கால் - TUT சதய பூசை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/tut.html

இன்றைய குரு பூர்ணிமா தரிசனம் - மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_27.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_74.html

பஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/02/16022018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

வாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 01/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/01/01022018.html


30 December 2018

"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - மார்கழி மாத உழவாரப் பணி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தில் வெகு நாட்களாக உழவாரப் பணி பற்றிய பதிவுகள் இல்லாது இருப்பது போல் தோன்றலாம். ஆனால் சுமார் 4 உழவாரப் பணி அனுபவப் பதிவுகள் நம்மிடம் உள்ளது. கொளத்தூர் ராஜராஜேஸ்வரி,பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், கோடகநல்லூர் உழவாரப்பணி, கூடுவாஞ்சேரி நூலாக உழவாரப்பணி, குன்றத்தூர் கோவிந்தன் அட..நம்ம திருஊரகப்பெருமாள் கோயில் என பட்டியல் நீளுகிறது.இன்றைய பதிவில் கோடகநல்லூர் உழவாரப் பணி பற்றி அறிவோம்.

சித்தன் அருள் இணைய தொடர்பாளர்களுக்கு கோடகநல்லூர் ஒரு வரப்பிரசாதம். நாமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்று வர முயற்சிதோ. ஆனால் அதற்கென்று வாய்ப்பு கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது சென்று தரிசனம் செய்ய தீர்மானித்தோம். மேலும் தாமிரபரணி புஸ்கரமும் இணைந்து விட்டது. எனவே இந்த முறை கோடகநல்லூர் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் சென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன் என்று சித்தன் அருளில் சொல்லி இருந்தார்கள். நாமும் உன் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கொடு பெருமாளே! என்று பிராத்தனை செய்து விட்டு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நம் குழுவோடு புஷ்கரம் சென்று நீராடி விட்டு, பின்னர் கோடகநல்லூர் சென்றோம்.

கோடகநல்லூர் திருத்தலம் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். மீண்டும் ஒரு முறை பதிவின் இறுதியில் தருகின்றோம். இந்தப் பதிவின் நீளம் சற்று அதிகம். மிக பொறுமையாக பார்க்கவும்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்து கோடகநல்லூர் செல்லும் என்று நாம் சரியாக கணிக்க முடியவில்லை. பின்னர் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு கோடகநல்லூர் சென்றோம். மனதில் பல கற்பனைகள், பெருமாள் கோயில், அதிகம் மக்கள் நடமாடாத இடம், பக்கத்திலே தாமிரபரணி. நம் கற்பனை நிஜத்தை மிஞ்சியது.

அன்று மதியம் சுமார் 1 மணி அளவில் கோடகநல்லூர் பெருமாள் கோயிலுக்குள் சென்றோம். நம்மை சித்தன் அருள் அக்னிலிங்கம் ஐயா அவர்கள் பெயர் சொல்லி அழைத்து வரவேற்றார்கள்.அனைத்தும் அகத்தியரின் அருள் என்று மனதில் கூறிவிட்டு, பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயாவிடம் என்னென்ன பணிகள் என்று கலந்து ஆலோசனை செய்தோம்.

நம்முடன் எம் தம்பி, எம் தங்கை, சுவாமிநாதன் ஐயாவின் குழுவில் சுமார் ஆறேழு பேர் என்று இருந்தோம்.மனதுள் பெருமாளை வேண்டிவிட்டு பணியை செய்ய ஆரம்பித்தோம்.










முதலில் அங்கிருந்த மேடையை நன்கு கழுவி சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். மேடை சுற்றியுள்ள தேவையில்லாத பொருட்களை எடுத்தோம், மகளிர் கூட்டும் பணியை செய்தார்கள். இந்த மேடையை சுத்தம் செய்யவே நமக்கு சுமார் 1 மணி நேரம் ஆகி விட்டது.




ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த மேடையை தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.



அடுத்து கோயிலைச்சுற்றி வலம் வந்தோம்.










பின்னர் கோயிலை சுற்றி நன்கு கூட்டி, நீர் விட்டு அலசி விடலாம் என்று அதற்கான பணியில் ஈடுபட்டோம்.




மேடை இருந்த பகுதியிலே இருந்த பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். 




இவ்வளவு தூசிகள் கொண்டதாக அந்தப் பகுதி இருந்தது.



அங்கே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பக்கத்தில் உள்ள இடத்தில வைத்தோம்.



உழவாரப்பணிக்கு நானும் தயார் என்று எம் குருவே நிற்கும் அழகை..இன்னும் காணவே மனம் ஏங்கியது.








ஆளாளுக்கு இந்தப் பணிதான் என்று என்று இல்லை. இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாம் செய்யும் உழவாரப்பணியில் சிறு ஓய்வு போன்றவை இருக்கும். இங்கு அப்படி அல்ல, ஒரே சீரான, நேர்த்தியான  பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.





மேடையை சுத்தம் செய்த பிறகு, தரையை நீர் ஊற்றி அலம்பிய காட்சி. இந்த மேடையின் சிறப்பு என்னஎன்று தொடர்பதிவில் காண்போம்.



இங்கு முடித்த பிறகு, பக்கத்தில் இருந்த இடத்தை ஏற்கனவே கூட்டியாகி விட்டது.அடுத்து மீண்டும் அங்கே நீர் ஊற்றி கழுவ வேண்டியது தான்.










அக்காவும் தம்பியும் இங்கே தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உழவாரப் பணி நமக்கு பல வழிகளில் சிறப்பானது. 








கோயிலை சுற்றி உள்ள பாதையில் நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணியை அடுத்து செய்தோம். கோயிலை சுற்றியுள்ள நடைபாதை தற்போது சுத்தம் செய்து வருகின்றோம். இங்கேயே இருக்க வேண்டுகின்றோம். 

மார்கழி  மாத உழவாரப்பணி அறிவிப்பு:-

இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி பெருங்களத்தூரில்  உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில்  வருகின்ற 06/01/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சதானந்த சுவாமிகள் 97 ஆவது குரு பூசை 23/01/2019 அன்று கொண்டாட உள்ளதால் இந்த உழவாரப் பணி செய்ய குருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:06/01/2019 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : சதானந்த சுவாமிகள் ஆசிரமம்,
பெருங்களத்தூர் 

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352/9677267266



- அடுத்த அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-


பனப்பாக்கம் உழவாரப்பணி அனுபவம் - அகத்தியர் அழைத்தார்...ஆனந்தம் தந்தார்... - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_16.html 

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html


உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html