அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம்
என்றவுடன் நீங்கள் நினைத்தது சரி தான். பஞ்செட்டி என்றும் பஞ்சேஷ்டி என்றும் அழைக்கப்படும் திருத்தலமே ஆகும்.
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி
இறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்
இறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்
ஸ்தலம் - பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் )
ஸ்தல விருட்சம் - வில்வம்
இதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் , இஷ்ட லிங்கேஸ்வரர்,பைரவர், அகத்தியர்
இத்திருத்தலம் மிகப் பெரும் ஆன்மிகத் தலம் ஆகும். ஒருமுறை மாமுனிவர்களான வசிஷ்டர்,கௌதமர், கன்வர் ஆகியோர் இந்த புவியில் தவம் செய்ய ஏற்ற இடம் எது பிரம்மாவிடம் முறையிட்டார்கள்.அப்போது பிரம்மா தர்ப்பைப் புல்லில் சக்கரம் செய்து அதை உருட்டினார். அந்த சக்கரம் உருண்டு கடைசியாக நிற்கின்ற இடத்தில் சென்று தவம் செய்க என்றார். அவ்வாறு அந்த சக்கரம் நின்ற இடமே பஞ்சேஷ்டி திருத்தலமாகும்.
இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்றும் இன்றளவில் அழைக்கப் பட்டு வருகின்றது.
பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் ) அதாவது அகத்தியர் பெருமானால் இங்கே ஐந்து யாகம் நடந்தமையால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்திரன்- விஸ்வரூபன் சாபம் நீங்கிய தலம் என்று வழங்க பெறுகின்றது. இந்த திருத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்க,திருமணத் தடை நீங்க, நவகிரகத் தோஷம் நீங்க, வாஸ்து தோஷம் நீங்க, சத்ரு தோஷம் நீங்க, விரும்பியன கிடைக்க என அனைத்திற்கும் சேர்த்து பரிகார தலமாக இத்திருக்கோயில் விளங்குகின்றது.
இந்த ஸ்தலம் சென்னையிலிருந்து சுமார் 30 km தூரத்தில் உள்ளது. சென்னை
கல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது இந்த இடம். காரனோடை செக் போஸ்ட்
தாண்டி தொடர்ந்து வந்தால் இப்போது கட்டுமானத்தில் உள்ள ஒரு மேம்பாலம்
வரும். அங்கே ஒரு U turn எடுத்து விட்டால் தேசிய சாலையின் இந்த
பக்கம் (சென்னை செல்லும்) வந்து விடுவீர்கள் . அங்கிருந்து சுமார் 300
டு 400 மீட்டர் தூரத்தில் பஞ்செட்டி arch ஒன்றை காணலாம். அதற்குள்
திரும்புங்கள். ஒரு 50 மீட்டர் சென்று இடம் திரும்பினால் கோவிலை காணாலாம்.
இங்கே அகத்தியரை மனதார சதயம் அன்று வேண்டுபவர்கள் எல்லா நலன்களையும்
பெறுவார்கள் என்று சித்தர் நாடி குறிப்புக்கள் கூறுகின்றன. எல்லா சதயம்
நாட்களில் அகத்தியர் பூசை வேண்டுதலும் நடக்கின்றது.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.
பங்குனி மாதத்தில் சதய பூசை நாளை நடைபெற உள்ளது. இது மிக மிக
முக்கியமான பூசை ஆகும். முன்னோர்களின் ஆசி, பித்ருக்களின் ஆசி தந்து கர்ம
வினைகளை நாளை நடைபெறும் சதய பூசை தர வல்லது. பங்குனி மாத சதய நட்சத்திர தினமான 12/04/2018 அன்று பஞ்சட்டி அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் குரு அகஸ்திய மகரிஷிக்கு மாலை 5.30 மணி முதல் 7.30 வரை அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
12/04/2018வியாழக்கிழமை மாலை
5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும் இப்பூசையில் கலந்து கொண்டு
அகத்தியர் ஆசி, நவகோடி சித்தர்களின் ஆசியும் பெறும்படி கேட்டுக்
கொள்கின்றோம்.
அகத்தியர் ஏன் இங்கே ஐந்து யாகங்கள் செய்தார் எனபது போன்ற செய்திகளை அடுத்த பதிவில் காண சித்தம் உணர்த்தட்டும்.
முந்தைய பதிவுகளுக்கு:
பஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/02/16022018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
வாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 01/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/01/01022018.html