Subscribe

BREAKING NEWS

14 May 2018

வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை

சென்ற ஏப்ரல் மாத தொகுப்பில் வெள்ளியங்கிரி யாத்திரை பற்றி பதிவிட்டு தொடர்வோம்
என கூறி இருந்தோம். இதோ இந்த பதிவில் மீண்டும் தொடர்கின்றோம்.

பாம்பாட்டி சித்தர் குகையில் இருந்து யாத்திரை இனிதே ஆரம்பித்தது. இனிமேல் சற்று கொஞ்சம் கடினமான பாதைகள் ஆரம்பம். வழுக்கு பாறை போன்ற பாதைகள், சந்தன நிற பாறை,விபூதி பாறை என சிறப்பான பாதைகள் இனிமேல் தான் வரும். சென்ற ஆண்டு யாத்திரையிலும் பாம்பாட்டி சித்தர் குகையில் சித்தர்கள் காப்பு படித்து சென்றோம். இம்முறை அனைவரும் ஒவ்வொருவராக உள்ளே சென்று தரிசித்து வந்ததும் அங்கிருந்து புறப்பட்டோம். இது போன்ற யாத்திரைகளில் வேகமோ, அவசரமோ காட்டாது பொறுமையாக சென்றால் தான் வெள்ளியங்கிரி முழுதும் ரசிக்க முடியும். இதோ இனி அடுத்த ஆண்டு தான் வெள்ளியங்கிரி செல்ல அனுமதி கிடைக்கும். நாம் பொறுமையாக சென்று தரிசித்தால் இன்னும் இந்த யாத்திரை நம்முள் நிறைந்து உள்ளது.




விபூதி பாறை 


TUTகுழுவின்  புன்னகை மன்னன் வினோத் 







இதோ நான்காம் மலையின் ஆரம்பம் இனிமேல் தான். மலையேறி நின்றதும் மனதுள் பச்சை வாசம். இப்போது நினைத்தாலும் உயிரெல்லாம் பசுமையாய் உள்ளது. இப்படி ஒரு பசுமை நாம் கண்ணால் கண்டதில்லை. கற்பனையிலும் நமக்கு எட்டவில்லை.








அனைவரும் இங்கே காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலே காணும் போளூர் உமா தம்பதியர் ஆரம்பத்தில் நடந்து வந்ததைப் பார்த்த போது, நமக்கு இவர்கள் மீண்டும் கீழே இறங்கி விடுவார்களோ? என்று எண்ணம் ஏற்பட்டது. ஆனால் மூத்தோனை மீண்டும் மீண்டும் மனதில் துதித்தோம். இதோ நம்முடன் அவர்களும் வந்து கொண்டே இருந்தார்கள்.





                                            இயற்கையிடம் சரண் அடைந்த போது

வருடத்திற்கு ஒரு முறை எனும் இது போன்ற மலை யாத்திரை செல்லுங்கள். மீண்டும் மீண்டும் கூண்டுகளில் சிக்காதீர்கள். நம்பத்தகுந்த, அனுபவமிக்க ஆன்மிக அமைப்புகளின் துணையுடன் இது போன்ற மலைகளுக்கு சென்று வாருங்கள். நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி. உங்கள் உள்ளம் திறக்கும், மனம் விரியும், காற்று வர கதவைத் திறக்க வேண்டாம். மனதைத் திற மற்றதெல்லாம் அவரே பார்த்துக் கொள்வார்.



நான்காம்  மலை முடித்து ஐந்தாம் மலை ஆரம்பித்து விட்டோம். நேரம் வேறு ஆகிக் கொண்டு இருந்தது. இங்கு நாம் வெயில் , மழை என்று எதையும் சொல்ல முடியாது. இங்கிருந்து நாம் சற்று வேகமாக செல்லுங்கள். ஆறாம் மலை சென்று அங்குள்ள அடிவாரத்தில் இரவு தங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். நமக்கு முன்னால் சுமார் 7 பேர் சென்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று வேகம் பிடித்தோம்.






நாம் நினைத்தவாறே பனி மூட்டம் ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் நாம் சிறு வயதில் கேரளாவில் அனுபவித்தது. அதற்கப்புறம் இது போன்ற யாத்திரைகளில் தான் நமக்கு காணக் கிடைக்கின்றது.





பாதை எப்படி ஊர்ந்து செல்கின்றது என பார்த்தீர்களா?








இந்த உருண்டையான பாறையில் ஒரு விசேஷம் உள்ளது.தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியவில்லை.


சரியான நேரத்தில் பிடித்தோம். ஒரு குருவி ஒன்று வந்து அமர்ந்த தருணமே அது.



ஐந்தாம் மலை நடந்து சென்ற போது நமக்குக் கிடைத்த தரிசனம். நாம்  கையில் நெய், அகல் என அனைத்தும் வைத்து இருந்தோம். ஆனால் விளக்கேற்றி வழிபட அப்போது தோன்ற வில்லை.
சித்தர்களின் ராஜாங்கத்தில் உள்ள வெள்ளியங்கிரியில் இந்த இடத்தில கண்டிப்பாக சித்தர்களின் ஆற்றல் பொதிந்து இருக்கும்.











அப்படியே ஆறாவது மலை இறங்கி விட்டோம். இறங்கியவுடன் அங்கே ஒரு சுனை உண்டு. அப்படியே பளிச் என பச்சை வண்ண நீரில் அங்கே நம் தலைவரும் லிங்க ரூபத்தில் காட்சி தந்து கொண்டிருப்பார். அடுத்து ஏறினால் ஏழாவது மலை. அந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் தான். நாம் அங்கே உள்ள ஒரு கொட்டகையில் இரவு தங்கி, மறுநாள் காலை தரிசனம் செய்ய முடிவெடுத்து இருந்தோம். நாம் சரியாக 5 மணி அளவில் ஆறாம் மலை அடைந்தோம். இன்னும் சற்று நேரத்தில் சூரிய பகவான் மறைய உள்ளார். சூரியன் உதிப்பதும், மறைவதும் இல்லை. நமக்கு அப்படித் தோன்றுகின்றது. அது போல் தான் ஆன்மிகத்திலும்..அனைத்தும் இங்கேயே இருக்கின்றது. நாம் தான் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை.

அங்கே சென்று விசாரித்தோம். நமக்கு முன்னே சென்ற சுமார் 8 பேரும் அங்கே இல்லை. எங்கே சென்று இருப்பார்கள். வேறெங்கே? ஏழாவது மலை நோக்கித் தான் என்று மனதை சரி செய்து விட்டு, இரவு உறங்குவதற்கு ஆயத்தமானோம்.











சுமார் 7 மணி அளவில் அவர்களும் மேலிருந்து கீழே அடிவாரம் வந்து விட்டார்கள். நாம் என்ன தான் திட்டம் தீட்டினாலும், நாடகத்தை அவர் தான் நடத்துகின்றார், நம் சிற்றறிவுக்கு என்ன தெரியும்? ஏன்?எதற்கு ? என்று நாம் யோசித்தாலும் விடை காண முடியாது அல்லவா? அனைவருக்கும் ஏற்கனவே இரவு உணவு கொடுத்திருந்தோம். அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள். நாமும் மறுநாள் காலை வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசிக்க இருக்கும் அந்த நொடியை மனதுள் நினைத்துக்கொண்டே இருந்தோம்.

அடுத்த நாள் காலை யாத்திரை எப்படி இருந்தது? சென்ற ஆண்டு சென்ற பொது ஏனோ தானோ என்று வெறுமனே சென்று வந்தோம். இந்த முறை பூஜை பொருட்கள், விளக்கேற்ற தீபம்,நெய் என கொண்டு சென்று இருந்தோம். இது இப்போது நடைமுறை வழக்கமாக கைக்கொண்டு விட்டோம்.வெறுமனே சென்று இறையை தரிசித்தால் நம்மையும் அவர் வெறுமனே தான் அனுப்புவார். ஆங். சொல்ல மறந்து விட்டோம். மலையேற்றத்தில் நாட்டு சக்கரை போன்ற இனிப்புகளை வாங்கி கொண்டு சென்று, இருபுறமும் போட்டுக் கொண்டே செல்லுங்கள். ஆயிரமாயிரம் எறும்பு போன்ற உயிர்களுக்கு நாம் உணவிட்டு மாதிரி இருக்கும்.

- விரைவில் வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனம் பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html



No comments:

Post a Comment