Tuesday, May 22, 2018

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை

சித்தர்களின் வரிசையில் இன்று ஸ்ரீ கண்ணையா யோகி பற்றி இங்கே உணர்த்தப்பட இருக்கின்றோம்.


யோகி ஸ்ரீ கண்ணையா அவர்கள் குருசுவாமி தம்பதியினருக்கு மே 05, 1882 அன்று கோயம்பத்தூரில் பிறந்தார். இவரது தந்தை குருசுவாமி அவர்கள் அப் பிரதேசத்தின் பிரபலமான நாடி ஜோதிடர் ஆவார். சிறு வயதிலேயே கடவுளை காண வேண்டும் என ஏக்கம் கொண்டிருந்தார் கண்னையன் அவர்கள். இவர் 108 ஆண்டுகள் வாழ்ந்த ஓர் இந்து ஆன்மீகவாதியாவார். இவர் இந்தியாவின் சென்னை அம்பத்தூரிலுள்ள ஆத்ம ஞான யோக சபையினை நிறுவி ஆன்மீகப் பணி புரிந்தார்.

கண்ணையா யோகி அவர்களை அவரது ஆறாவது வயதிலேயே சப்தரிஷிகளின் தலைவரான ஸ்ரீ அகத்திய மாமஹரிஷி அவர்கள் ஆட்கொண்டு, நீலமலையிலுள்ள தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்தார். அங்கு அகத்திய மஹரிஷி மற்றும் புலிப்பாணி மஹரிஷி ஆகியோரால் நான்கு வேதங்கள், 96 தத்துவங்கள், எல்லா மொழிகளின் வடிவ, ஒலி ரகசியங்கள், யந்திர, தந்திர, மந்திரங்கள், ஆய கலைகள் 64, அஷ்டமாசித்திகளின் பெருக்கமான 512 சித்திகள் உட்பட அனைத்துவிதமான ஆன்மீகக் கலைகளும் கற்பிக்கப்பட்டது. அவர் 18 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து ஆன்மீகம் பயின்றார்.

18 ஆண்டுகால ஆன்மீகக் கல்வியின் பின்னர், தமது குருவின் உத்தரவின் பேரில் மீண்டும் கோயம்புத்தூர் திரும்பினார். அங்கு தமது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் முடித்தார். அதன் வாயிலாக இரு குழந்தைகளுக்கு தந்தையுமானார். இவ்வாறான காலகட்டத்தில் தனது தந்தையார் மரணமடைய, அவரது நாடி ஜோதிடப் பணியினைத் தொடர்ந்தார் கண்ணையா. சில காலத்தில தமது துணைவியாரும் இறக்க, தமது குழந்தைகளை பராமரிப்பதற்காக தம் குருவின் உத்தரவின் பேரில் மறுமணமும் புரிந்துகொண்டார்.
கண்ணையா யோகி அவர்கள் சென்னை அம்மத்தூரில் அமைந்துள்ள ஆத்ம ஞான யோக சபையினை நிறுவினார். இதன்மூலம் அங்கு வரும் பக்தர்களுக்கும் அடியவர்களுக்கும் தமது குருவிடமிருந்து கற்ற ஆன்மீக வித்தைகளை கற்பித்து வரலானார். கண்ணையா யோகி அவர்களது பக்தர்கள் உலக நாடுகள் பலவற்றில் உள்ளார்கள். இவருக்கு சீடர்கள் பலர் இருந்தாலும், முருகேசு சுவாமிகள், றுடொல்ஃப் மற்றும் யோகி ஜனார்த்தனா போன்றவர்கள் மிகப் பிரபலமானவர்கள்.


கண்ணையா யோகி அவர்களின் சிறப்பினைக் கூறும் குரு வந்தனப் பாடல்:

காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆன்மிக யோக ஞான தீபமே
ஸ்ரீ கண்ணைய தேவனே போற்றி போற்றி போற்றி

கண்ணையா யோகி அவர்கள் 12-02-1990 அன்று இறைப்பதம் அடைந்தார்.

ஸ்ரீ கண்ணையா யோகி பற்றி ஸ்ரீ அகத்திய மஹரிஷி அருளிய ஜீவ வாக்கு 

இறைவனின் அருளைக்கொண்டு இஃதொப்ப மகான்களும், ஞானிகளும் தாமே எல்லா இடங்களிலும் இருந்துகொண்டு எல்லா மனிதர்களையும் நெறிபடுத்த இயலாது. சுவடி மூலம் வாக்கினை கூறலாம். மனித வடிவிலே சிலரை ஆட்கொண்டு நெறிபடுத்தலாம். இன்னும் சிலரை உள்ளத்திலே உணர்த்தி ஆட்படுத்தலாம். இதுவும் வினை சார்ந்ததே. அவனவன் வினைக்கு ஏற்பதான் இறைவன் அருளால் செயல்படுத்தப்படும். அப்படி சில மனிதர்களை இறைவனின் அருளாணைக்கு ஏற்ப எம்போன்ற மகான்கள் ஆட்கொண்டு அந்த மனிதர்கள் மூலம் பல மனிதர்களை ஆன்ம வழியில் திசை திருப்ப இறைவன் திருவுள்ளம் கொண்டபொழுது, அப்படி எத்தனையோ மனிதர்களை தேர்ந்தெடுத்தபொழுது, அதில் ஒருவன்தான் இன்னவன் வினவிய விழி ஐயா என்ற நாமம் கொண்டோன், அந்த கண்ணையா நாமகரணம் கொண்டவன். அவனுக்கும் பல போதனைகளை யாம் நேரடியாகவே செய்திருக்கிறோம்.

வரும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜையானது ஆத்ம ஞான யோக சபையினரால் கொண்டாடப் பட உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற அழைக்கின்றோம்.Namaskaram. Dr. Pandit G Kanniyah Yogi's 136th Birthday Guru Pooja is on 02.06.18 (Saturday). 
Timing: 9am - 2pm. Venue: Adyar Shastri Nagar Welfare Association, 18/11, 5th Corss Street, Shastri Nagar, Adyar, Chennai-20. All are welcome. Thank you - Athma Gnana Yoga Sabha, 9840987338, 9940673067, 9600666661, 044-4210 2582. (LOCATION - Adyar Shastri Nagar Welfare Association
No 18/11,5th Cross Street, Shastri Nagar, Adyar, Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
044 2446 0822


(Note - Please confirm your present through SMS or Phone call, It will help us to organise better)
https://maps.google.com/?cid=12922317568064973028&hl=en&gl=gb

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக:-


மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌