அடியார் பெருமக்களே...
அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள் என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.
சரி. பதிவின் உள் செல்வோமா?
முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.
வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.
என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம். அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.
நம் சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக் குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அலைபேசி எடுத்துக் கொண்டு பிணம் போல் திரிவதை விடுத்து, நம் இளையோர்களிடம் இணைந்து புதிதாக படைக்கலாம். குறிப்பாக தமிழ் நூல் படிக்கலாம் இது நம்மை இன்னும் இளமையாக்கும்.
சிறியோர்களிடம் மட்டும் இணைந்தால் போதுமா? மூத்தோரிடம் அன்பு செய்க. ஆசி பெறு.
இது தான் மிக மிக முக்கியமான ஒன்று, பிரார்த்தனை .சாதாரணம் ஒற்றை சொல் என்று எண்ணாதீர். நாமும் நம் தளம் சார்பாக பிரார்த்தனை அவ்வப்போது செய்து வருகின்றோம். இன்னும் நிறைவில் இல்லை. குருவின் வழிகாட்டல் வேண்டி நிற்கின்றோம்.
இப்படி சொன்னவுடன், வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று தர்க்கம் செய்யாதீர். ஒரே ஒரு நாள் ..அதுவும் மாதத்திற்கு ஒரே ஒரு நாள் இதை பின்பற்ற வேண்டும். இவை நம்மை அட்டாங்க யோகத்திற்கு நம்மை வழி நடத்தும் என்பதே உண்மை.
இயற்கையை நேசி. இயற்கை தான் கடவுள். கடவுள் தான் இயற்கை. நடை பயிலுங்கள். ஆரோக்கியம் தாண்டி ஆன்ம உணர்வில் ஒன்றுங்கள். இதெல்லாம் ஒரே நாளில் நடந்து விடாது. சித்த அடியார்கள் அனைவரும் சித்தர்களை ஆராதிப்பதுடன், இயற்கையை நேசிக்க கற்று கொள்ளுங்கள். உதாரணமாக மலை யாத்திரைக்கு செல்லும் போது , அருவி குளியல் கிடைத்தால் சோப்பின்றி குளியுங்கள். இது போன்று சில சில மாறுதல்களை செய்யுங்கள். இயற்கையோடு இணைந்து இருங்கள். இது பற்றி நாம் இன்னொரு பதிவில் பேசலாம்.
நல்லோரைக் காண்பதும் நன்று
நல்லோர் சொற் கேட்பதும் நன்று
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.
என்று எப்போதும் நன்மையே செய்ய நாட்டமாயிரு. அப்படி இருந்தால் தான் செடி,கொடிகளுக்கு நீர் ஊற்றும் போது நம்மைப்போல் அவற்றையும் நேசிக்க முடியும்.
சைவமா? அசைவமா? என்று பட்டிமன்றம் இங்கு வேண்டாம். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது உயிர் கொலை உணவில் சேர்க்காது இருக்க பழகவும். பொதுவாக சைவம் என்றாலே சிவனார் என்று நம் மனதில் தோன்ற வேண்டும். ஆனால் இன்று உணவின் வகையில் என்று பேசும் நிலையில் இருப்பது வேதனையே.
அப்படியென்றால் காய் கறிகளும்,கீரைகளும் உயிர் தானே. என்று தர்க்கம் இங்கே தேவை இல்லை.
அந்த காலத்தில் ஒவ்வொருவரும் சராசரியாக 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து உள்ளார்கள்.அதில் 60 வயது வரை அவர்களின் இளமைக்காலமே. 60க்கு மேல் தான் முதுமை தொடங்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். 30 வயது தள்ளவே அரும்பாடு படுகின்றோம். இது ஒருபுறமிருக்கு, 10க்கு மேற்பட்டோரிடம் அன்பை செலுத்து.
சராணாகதி. இறைவனிடம் பெற அனுதினமும் முயல்கின்றோம். அது போலவே குடும்பத்தில் கணவனும், மனைவியும் சரணாகதி தத்துவத்தை பின்பற்றுங்கள். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்று மனதில் நினைக்க வேண்டவே வேண்டாம். பெரியவர் நமக்கு மேலே ஒருவர் இருந்து கொண்டிருக்கின்றார்.
இன்று தினசரி செய்தித்தாளை திறந்து பார்த்தால், எத்துணை விபத்து செய்திகள், விபத்து செய்தி இன்றி செய்தித்தாள் பார்ப்பது அரிது. சாலைத் தகராறுகளை தவிர்
நாம் படுக்கையில் இருந்து எழுந்ததும் எதைத் தேடுகின்றோம், அந்த சூனியக்காரனைத் தானே..ஆம்..அலைபேசி தான். இனிமேலாவது எழுந்தவுடன் ஒரே ஒரு நிமிடம் அமர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லி, அன்றைய நாளை நன்மனத்தோடு துவக்குங்கள்.
சேவை..அது நம் குடும்பத்திற்கு ஆற்றினால் போதும் என்று எண்ணாதீர். உறவற்ற மக்களுக்கு ஆற்றுவதே சேவை. பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்றால் மனமிருந்தால் சாத்தியமே. முதலில் அண்டை வீட்டாரிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் பேசவில்லை என்றால் அவர்களை வாழ்த்துங்கள். நாளாக நாளாக அவர்களே நம்மிடம் வந்து உறவாகிவிடுவார்கள்.
கண்ணை இறுக்க மூடிக் கொண்டு நாம் மட்டும் நன்றாக வாழ்ந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். பிறர்க்கு உதவினால் தான் நாம் வாழ முடியும். நான் மட்டும் என்று நினைத்தால் அது வெறும் பிழைப்பு, நாம் என்று நினைத்தால் அது வாழ்வு. வாழ்வா? பிழைப்பா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நாம் தற்போது வாழ்ந்து வரும் நிலைக்கு நாமே காரணம். அது போல் நம் தவறுகளுக்கும் நாம் தான் காரணம், தவறுக்கு நாமே பொறுப்பு ஏற்றுக் கொள்வோம். பிறரின் மீது பழி சுமத்தி ஆகும் பயன் ஒன்றும் இல்லை. நாமே பொறுப்பு ஏற்கும் போது, மீண்டும் அந்த தவறு நிகழாது நம்மால் சரி செய்ய இயலும். மற்றவர் மீது பழி செலுத்தினால், அதே தவறு மீண்டும் மீண்டும் தோன்றத் தான் செய்யும்.
ஒவ்வொரு உயிரையும் நேசி. யாராக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசி பழக வேண்டும். எப்போதும் திறந்த புத்தகமாக இருக்க கற்றுக் கொள்வோம்.
நம்பிக்கை ... இதுவே நம் வாழ்வின் ஆதாரம், அச்சாணி. நம்மை, நம் பலத்தை நம்புவோம்.
என்ன அன்பர்களே..19 வழிகளும் சிறந்த வழிகள் தான். வாழ்வில் வெற்றி பெற இவை அனைத்தும் தேவை. நாமும் இவற்றை பினபற்ற முயற்சி செய்து வருகின்றோம். ஒவ்வொன்றாக பினபற்றுங்கள். பிறகென்ன வானம் வசப்படும்.
மீள் பதிவாக :-
யார் உண்மையான பக்தன் ? - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_48.html
பெண்மையைப் போற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_34.html
மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு (4) - http://tut-temple.blogspot.in/2018/02/4.html
அர்த்தமுள்ள இந்து மதம் - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_42.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
No comments:
Post a Comment