Subscribe

BREAKING NEWS

19 May 2018

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018)

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை  
  நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானைச்  
செஞ்சாலி வயற்பொழில்சூழ் தில்லை மூதூர்ச்  
  சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை  
வெஞ்சாபமுமில்லை ஒரு வினையுமில்லை  
  வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்  
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்  
  அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்பாம் 

- தனிப்பாடல்.

இந்த பாடலின் சாரம்
          ஆசான் அகத்தீசனை மனமார பூஜித்தால் நோயும், வறுமையும், பகைமையும், மன உளைச்சலுமாகிய வெப்பம் தணிய ஆசான் அகத்தீசன் குளிர்ச்சி பொருந்திய நிழல்போல் இருந்து அருள் செய்வார். மேலும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்தால் தனக்கும் தன் சந்ததிகளுக்கும் செல்வநிலை பெருகச் செய்வார். ஆசான் அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் வளப்பம் பொருந்திய தில்லைவாழ் அம்பலவாணரின் கால் சிலம்; பொலிபோல் கேட்க இனிமை உடையதாக இருக்கும். காரணம் ஆசான் அகத்தீசனின் பாடல்கள் அத்தனையும் பிறவிப்பிணிக்கு மாமருந்தாக இருப்பதால் படிக்கவும், கேட்கவும், சிந்திக்கவும் இனிமை உடையதாக இருக்கும். ஆசான் அகத்தீசனை பூஜித்தால் அறியாமை காரணமாக பல ஜென்மங்களில் செய்த பாவத்தால், பிறரால் சபிக்கப்பட்ட கொடுஞ்சாபங்களும் நீங்கும், பாவங்களும் நீங்கும். அதுமட்டுமல்லாமல் "முருகா! " என்றால் ஈரேழு பதினான்கு லோகமும் கிடுகிடுவென நடுங்கும் ஆற்றல்பெற்ற ஆசான் சுப்ரமணியரின் வேல்படை நமக்கு உற்றதுணையாக இருக்கும். மேலும் வெற்றிகளும் உண்டாகும். தொடர்ந்து ஆசான் அகத்தீசனை பூஜைசெய்தால் நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஆசான் அகத்தீசர் குருவாக வந்து "அஞ்சேல்! " என்று ஆட்கொண்டு அருள்செய்வார். எனவே ஆசான் அகத்தீசரை தினமும் பூஜிப்போமாக!.



மேலும் விபரங்கள் பெற இணைப்பில் பார்க்கவும்

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்...

No comments:

Post a Comment