Subscribe

BREAKING NEWS

13 May 2018

வளசரவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில்

அடியார் பெருமக்களே..


இன்றைய பதிவில்  நாம் இன்று அருள்மிகு அகத்தீஸ்வரர் (ம) வேள்வீஸ்வரர் உடனுறை திரிபுர சுந்தரி அம்பாள் ஆலயத்தை பற்றி அறிந்து கொள்ள உள்ளோம்.

தல வரலாறு

இத்திருக்கோவில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த திருத்தலம் தமிழ்நாட்டின் தலைநகரம், சென்னையம்பதியில் வடபழனி – போரூர் வழித்தடத்தில் ஆற்காடு சாலையில் வடபழனியிலிருந்து சுமார் 2 ½ கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னை மாநகரத்தின் தென்மேற்கு எல்லையில் ,திருவள்ளூர் மாவட்டம், வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது.இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும், இத்திருக்கோவிலில் வடக்கு புறத்தில் வேள்வீஸ்வரர் சன்னதியும், தெற்கு புறத்தில் அகத்தீஸ்வரர் சன்னதியும், இரட்டை பிள்ளை போல் இணையாக அமைந்துள்ளன. வேள்வீஸ்வரர் சன்னதியின் கால் பகுதி குமுதபடை மற்றும் பட்டிகைவரை கருங்கல்லால் கட்டப்பட்டது. அதன் மேல் உள்ள சுவர் கொடுங்கை தலை பகுதியில் செங்கலாலும், சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலின் முன் பெரிய திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இத்திருக்குள தீர்த்தம் சுக்ரதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.


மூலவர் சிறப்பு

இத்திருகோவிலில் எழுந்தருளியுள்ள மூலவர் அகத்தீஸ்வரர், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சுக்ரபகவானால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தினால் வேள்வீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோவிலில் அம்பாள் திருபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். கருணை கண்களாக விளங்கும் அம்பாளை கண்டாலே நம் மனக்கவலை எல்லாம் பறந்து போய்விடும். மேலும் இத்திருக்கோவிலில், அருள்மிகு வினைதீர்த்த விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், அருள்மிகு நடராஜர், அருள்மிகு பைரவர், அருள்மிகு கோதண்டராமர், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.






பிரதோஷ வழிபாடு

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. இத்திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷ தினத்தன்று மாலை 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அருள்மிகு வேள்வீஸ்வரர் ,அகத்தீஸ்வரர் அபிஷேகம், ஆராதனை, நந்தி அபிஷேகம், உற்சவர் அலங்காரம் நடைபெறும்.அன்று பக்தர்கள் அனைவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து, முக்கோடி தேவர்களுக்கும் தலைவணாம், முக்கண் நாயகனாகிய சிவபெருமானை நினைத்து பாடல்கள் பாடி ஈஸ்வரனை ஆனந்த கடலில் ஆழ்த்துவர். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து, கண்ணீர் மல்க வழிபட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?




பிரார்த்தனை சிறப்பு

சுக்ர பகவானை பூஜித்த வேள்வீஸ்வரரை இக்கோவிலில் யார் ஒருவர் மனமுருகித் தொழுது ஆராதிக்கிறார்களோ, அவர்களுக்குச் சுக்கிரனின் அருளால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும்.
பெண்களுக்கு மங்களங்கள் தரும் நாயகராக விளங்குகிறார், வெள்ளிக்கிழமைகலீல் வேள்வீஸ்வரர் சன்னதியில் நெய்விளக்கு ஏற்றி வழிபட, தடைப்பட்ட காரியங்களில் வெற்றி ஏற்பட்டு எண்ணம் ஈடேறும்.



அகத்திய முனிவர் பூஜித்த அகத்தீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் மக்களின் உடற்பிணியையும், மனப்பிணியையும் தீர்ப்பார், இவரை வழிபட்டு ஆனந்தம் பெறலாம்.

பக்தர்கள் அனைவரும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஈசனின் அருளை பெற்று குறைகள் நீங்க வாழ்வீராக!





  • மன நோய் மற்றும் வேள்விகளில் ஏற்படும் குறைகளை அகற்றும் வளசரவாக்கம் வேள்வீஸ்வரர் ஆலயம். 
  • அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம். 
  • சுக்கிர பகவானின் சாபம் தீர்த்த சுக்கிர தீர்த்தம். 
  • 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளசரவாக்கம் சிவன் கோயில் தல வரலாறு.
என பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.






மூலவர் : அகத்தீஸ்வரர் (ம) வேள்வீஸ்வரர் 
காலம் : சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்
ஊர் பெயர் : வளசரவாக்கம்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு
திருக்கோவில் நடை 
திறந்திருக்கும் நேரம் : காலை 6.30 மணியிலிருந்து 10.30 மணி வரை,
மாலை 5 மணியிலிருந்து 9.00 மணி வரை

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


முந்தைய பதிவுகளுக்கு:-


அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

பஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/02/16022018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

வாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 01/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/01/01022018.html

No comments:

Post a Comment