Subscribe

BREAKING NEWS

08 May 2018

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு

அன்பின் நெஞ்சங்களே...

சென்ற மாதப் பதிவுகளில் மோட்ச தீப வழிபாடு பற்றி ஆரம்பித்து இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு என்பது மிக மிக உயர்ந்த வழிபாடு ஆகும். விளக்கேற்றி வழிபாடு செய்தால்

நினைத்த காரியம் நடக்கும்
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.

உடல் அற்ற உயிர்களுக்காக, நம் முன்னோர்களுக்காக, அவர்கள் அடுத்த நிலையில் முன்னேறும் பொருட்டு வேண்டுவதே இந்த வழிபாட்டின் சூட்சுமம் ஆகும். யோசித்துப் பாருங்கள், நாம் எப்படி இங்கே பிறந்தோம், நம் பெற்றோரால் தானே. அவர்கள்...நம் தாத்தா,பாட்டி போன்ற முன்னோர்களால் தான். இப்போது அவர்கள் இங்கே நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஆன்மா இந்த நிலவுலகில் இருக்கலாம், அல்லது வேறேனும் உலகில் இருக்கலாம். இது போன்ற உடலேனும் சட்டை இல்லாத உயிர்களுக்கு உணவிட்டு, அவர்களை திருப்தி படுத்தினால் தான் நம் வாழ்க்கை மேன்மையுறும். இதற்காகத் தான் தர்ப்பணம், தானம்,திலா ஹோமம் என உண்டு. அதிலும் குறிப்பாக கருப்பு எள்ளை பயன்படுத்துவோம். இந்த கருப்பு எள் தான் முன்னோர்களுக்கு உணவாக கொடுக்கப்படும் என்பது ஐதீகம். அதனால் தான் மோட்ச தீபத்திலும் கருப்பு எள் சேர்க்கின்றோம்.

சென்ற பதிவில் 21 தீபத் திரிகள் தயார் செய்வது வரை நாம் கண்டோம்.மீண்டும் அங்கிருந்து தொடர்கின்றோம்.



தீபத் திரிகள் தயார் செய்யப்பட்டதும், கோயிலின் ஒரு ஓரத்தில் இரண்டு மரப் பலகைகள் வைக்கப்பட்டது. நாமும் அங்கே சென்றோம். ஒரு ஓரத்தில் 21 மண் சட்டிகள் இருந்தது. நாம் காலையில் தேநீர் அருந்தும் தட்டும்,கோப்பையும் போன்ற வடிவில் இந்த மண் அகல் இருந்தது.




பலகையின் மீது மஞ்சள் தெளித்தார்கள். 


அங்கிருந்த அம்மையாரை அழைத்து கோலம் போடப் பணித்தார்கள். அந்த கோலத்தின் மீது ஒரு பெரிய தழை வாழை இலை வைத்தார்கள்.




வாழை இலையின் மேல் பச்சரிசி தூவி நன்கு பரப்பினார்கள்.




 பின்னர் நவ தானியங்களும் பரப்பினார்கள்.


அதன் பின்னர் ஒவ்வொரு தட்டாக எடுத்து வைத்தார்கள்.





அடுத்து மோட்ச தீபமேற்ற நெய் கொண்டு வரப்பட்டது.சுமார் 10 லி நெய் தேவைப்படும் என்று பார்க்கும் போது தெரிகின்றது.


கருப்பு எள் வைத்து சங்கல்பம் செய்த காட்சி 


எள்ளை அப்படியே எடுத்து தட்டில் நிரப்பினார்கள் .





மூன்று வரிசைகளில் 7 தீபமாக மொத்தம் 21 தீபம் வைத்து, அதற்கான தட்டில் கருப்பு எள் கொண்டு நிரப்பப்பட்ட காட்சி. பார்க்கவே நமக்கு ஒரு சொல்ல இயலாத உணர்வாய் இருந்தது.


அனைத்து தட்டிலும் எள் நிரப்பிய பின்னர்,கோப்பை வடிவான அகல் மேலே வைக்கப்பட்டது.


அனைத்து பணிகளையும் அங்கிருந்த அகத்திய அடியார் குழு சிறப்பொடு செய்து கொண்டிருந்தார்கள். திரு.சூரிய நாராயணன் ஐயா நமக்கு அனைத்தும் விவரித்து கொண்டே ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தார். இப்போது திரியை மட்டும் அகல் விளக்கில் வைக்க வேண்டும். இதோ..நீங்களே பாருங்கள்.



ஒவ்வொரு திரியாக எடுத்து , நெய்யில் அமிழ்த்தி அகல் விளக்கில் வைத்தார்கள்.



தீபம் ஏற்ற வசதியாக  கற்பூரம் திரியின் நுனியில் வைத்தார்கள்.


அடடா..காணக் கண்கொள்ளா காட்சி..வித்தியாசமான அகல் விளக்குகள் நம் கண் முன்னே. உயர்ந்த திரி..அகண்ட அகல்... நமக்கு மோட்சம் தரப் போகும் தீபங்களின் அணிவகுப்பு. நம் மனம் ஒடுங்கியது.சுமார் 5 மணி அளவில் இந்த தயாரிப்பு வேலைகள் தொடங்கியது. நேரம் 6 தொட்டுக் கொண்டிருந்தது. அடியார் பெருமக்களும் வந்து கொண்டிருந்தார்கள்.







சுமார் 100 பேருக்கு  மேல் அடியார் பெருமக்கள் புடை சூழ, அந்த இடமே ..அகத்தின் வசத்தில்...அகத்தின் ஈசன் வசம் ஆனது.


ஏற்கனவே சென்ற பதிவில் இந்த மோட்ச தீப வழிபாடு எங்கே நடைபெறுகின்றது என அடுத்த பதிவில் தெரிவிப்பதாக சொன்னோம். நீங்களும் ஆர்வமாக இருப்பபீர்கள். அந்த ஆர்வத்துடன் அடுத்த பதிவு வரை காத்திருங்கள். அனைத்தும் தயார். தீபம் ஏற்ற வேண்டியது தான். இந்த வழிபாடு எப்படி சென்றது. என்னென்னெ வழிபாட்டில் சேர்த்தார்கள் என்பது போன்ற செய்திகளுக்கு அடுத்த பதிவில் விடை காண்போம். இன்னும் முன்னோர்களை உங்கள் மனதில் முன்னிறுத்துங்கள்.

மீள்பதிவாக :-

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html




No comments:

Post a Comment