Subscribe

BREAKING NEWS

22 May 2018

மாடம்பாக்கம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஆலயம் - கும்பாபிஷேக அழைப்பிதழ்

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. பொதுவாக கோயில் நகரம் என்று கும்பகோணமும், காஞ்சிபுரமும் அழைக்கப்பட்டு வருகின்றது. கோயில் நகரான காஞ்சியில் தரிசிக்க வேண்டிய சிவத்தலங்கள், வைணவத்தலங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிட முடியாது. 108 சிவத்தலங்கள் தரிசிக்க வேண்டிய தளங்களில் இடம் பெரும். அது போலவே வைணவத் தலங்களும் ஆகும்.

அருள்மிகு வெடித்துக்கூடிய வசிட்டேசுவரர் கோயில்
அருள்மிகு காசிபேசுவரர் கோயில்
அருள்மிகு அங்கிரேசுவரர் கோயில்
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
அருள்மிகு வில்வநாத ஈசுவரர் கோயில்
அருள்மிகு காளத்தீசுவரர் கோயில்
அருள்மிகு முக்தீசுவரர் கோயில்
அருள்மிகு திருமேற்றளீசுவரர் கோயில்
அருள்மிகு சோளீசுவரர் கோயில்
அருள்மிகு அனாதி திருத்தேசுவரர் கோயில்
அருள்மிகு மகா ருத்ரேசுவரர் கோயில்
அருள்மிகு காயாரோகணீசுவரர் கோயில்
அருள்மிகு கணிகண்டீசுவரர் கோயில்
அருள்மிகு நகரீசுவரர் கோயில்
அருள்மிகு உருத்திர கோட்டீசுவரர் கோயில்
அருள்மிகு வன்னீசுவரர் கோயில்
அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் கோயில்
அருள்மிகு மணிகண்ணீசுவரர் கோயில்
அருள்மிகு திருக்கச்சி அநேக தங்காவதீசுவரர் கோயில்
அருள்மிகு அரிசாபம் பயம் தீர்த்த ஈசுவரர் கோயில்

என்று 108 தலங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி இங்கே சில
கோயில்களே தரப்பட்டுள்ளன.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப்பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.

ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடலில்கள் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

இத்தகைய புண்ணிய பூமியாம் காஞ்சிபுரத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் நாம் தரிசித்து வரும் ஆலயங்களாக மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம், நந்தீசுவரர் ஆலயம் என தொடர்ந்து வருகின்றோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர், மாடம்பாக்கம் ஆதனுரில் அகத்தீசுவரர் ஆலயம் இருப்பதாக கேள்விப்பட்டு, நேரில் சென்று தரிசித்தோம். அப்போது அங்கேயே மற்றொரு ஆலயம் ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கண்டோம்...பதிவின் இறுதியில் மீண்டும் மீள்பதிவு செய்கின்றோம்.

இத்தகு சிறப்பு மிக்க மாடம்பாக்கத்தில் 250 வருடங்களாக எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு புதிதாக ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, ஆலயம் கம்பீரமாய் ஊரின் நடுவில் உள்ளது. இதன் பொருட்டு, ஆலய கும்பாபிஷேகம் விளம்பி வருடம் சித்திரை மாதம் 9 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்கு உள்ளாக நடைபெற  இறையருள் கூட்டியுள்ளது.



இது சமயம் ஆன்மிக அன்பர்களும், பொது மக்களும் மேற்படி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பொருளுதவியும்,சரீர உதவியும் செய்து மூத்தோனின் அருளும், ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமியின் அருளும் பெறுமாறு வேண்டுகின்றோம். கீழே நிகழ்வின் நிரலை இணைத்துள்ளோம்.






அனைவரும் வருக!  இறையருள் பெறுக !!

மீள் பதிவாக :-

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் -  http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_16.html

No comments:

Post a Comment