Subscribe

BREAKING NEWS

15 November 2017

ஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக அறிமுகம்

அன்பார்ந்த உறவுகளே.

நம் தளத்தில் நாம் அவ்வப்போது சில புத்தக அறிமுகம் பற்றி அறிந்து வருகின்றோம். அந்த வகையில் சித்தர்களைப் பற்றி பேசும்  ஜீவ அமிர்தம் என்ற மாதாந்திர புத்தகம் பற்றி பார்த்தோம். சித்தர்கள் பற்றியும், மாதந்தோறும் நடைபெறும் பூஜை பற்றியும் இந்நூலில் செய்திகள் இருந்தது.
அதே போன்று பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி என்ற பதிவின் தலைப்பில் சிந்திப்போம் என்ற புத்தகம் பற்றிப் பேசினோம். சிந்திப்போம் என்ற புத்தகம் நம்மை சிந்திக்க வைக்கின்றது என்பதே உண்மை. இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது சிந்திப்போம் நூலின் கருத்துக்களை தனிப் பதிவுகளாக தர விழைகின்றோம்.

அடுத்து சன்மார்க்க நேசன் என்ற ஒரு இதழ், வள்ளலார் பற்றியும், சித்த மருத்துவம் பற்றியும் இதில் அனைவரும் அறிய வேண்டிய அரிய செய்திகள் உள்ளது. ஆசிரியர் உரை ஆன்மிகம் முதல் ஆரோக்கியம் வரை பேசிக் கொண்டிருக்கின்றது. இது போன்ற அரிய நூல்களை படித்து, பாதுகாத்து வைக்க வேண்டியது நம் கடமை. ஏதோ படித்தோம் என்று கடந்து செல்ல இயலாத கருத்துக்கள் இவற்றுள் உள்ளது. அதே போன்று, இந்த மாத நூல் அறிமுகத்தில்,




இயற்கை மருத்துவம் என்ற இதழ் பற்றி காண உள்ளோம். ஆமாம் உறவுகளே. இந்த நூலைப் படித்து நாம் பின்பற்றினால் , ஐந்தே ரூபாயில் நாம்  ஆரோக்கியம் பெற்று விடலாம் என்பது உறுதி. உண்மையான ஆன்மிகம் என்று இங்கே நாம் சொல்ல வேண்டிய நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். உண்மையான ஆன்மிகம் என்பது ஆரோக்கியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. இதனைத் தான் யோகம் என்று கூறி இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம்,பிராத்தியாகாரம் என்று அட்டாங்க யோகமாக நம் தாத்தாக்கள், சடை வளர்த்தவர்கள், கொண்டை போட்டவர்கள், காட்டில் உட்கார்ந்து தவம் செய்தவர்கள் வகுத்துள்ளனர். இவை நம் ஆரோக்கியம் சார்ந்தவையே அன்றி வேறொன்றும் அல்ல.

இனி நூலின் உள்ளே.




இந்த நூலினை வாங்கினால் நாம் ஆரோக்கியத்தை வாங்கியது போலவே.ஏனெனில் பற்பல செய்திகளை இவர்கள் சொல்வதோடு, இயற்கை வாழ்வியல் சார்ந்த நூல்களைப் பற்றியும் இவர்கள் சொல்வது இந்நூலின் சிறப்பு. நூலின் அட்டைப்படத்தை பாருங்கள். மருந்தில்லா மருத்துவம், எண்ணெய் மருத்துவம், எது உணவு ? போன்ற நூட்களை அட்டைப்படங்களில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த ஆரோக்கியம் சார்ந்த நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். படித்து பின்பற்ற வேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு.

அடுத்து நூலின் உள்ளே ...ஆசிரியர் பக்கம்.







ஆசிரியர் பக்கத்தில் தற்போது நாம் செய்ய வேண்டிய செயல்களை தற்கால சூழலுக்கு ஏற்ற படி திரு. வெள்ளைச்சாமி ஐயா நம்மோடு பேசுகின்றார்கள். உதாரணத்திற்கு இளைய சக்தியின் எழுச்சியைப் பற்றி ஜல்லிக்கட்டு போராட்டம் காலத்தில் பேசி உள்ளார். இதற்கடுத்து உள்ளே சென்றால், பற்பல சுவைகளில், மணங்களில் பூங்கொத்தாய் நூல் நறுமணம் வீசுகின்றது. 








காந்திய கருத்துக்களும், வினோபாஜி பற்றிய செய்திகளும் உண்டு. வாழ்வியல் யோகா என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளி வருகின்றது. என்ன தான் நாம் பல யோகாசனம் புத்தகங்கள் வைத்து இருந்தாலும், இந்த இதழில் வெளி வருகின்ற மாதம் ஒரு யோகாசனம் , அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. இவர்கள்ஏனோதானோ என்று யோகாசனம் பற்றி கூறவில்லை, அவற்றை பயின்று பார்த்து, தத்தம் அனுபவத்தில், தற்கால வாழ்வியலை கருத்தில் கொண்டு, தேவையான ஆசனப் பயிற்சியை இவர்கள் மாதம் தோறும் கூறுகின்றார்கள். நம்மிடம் உள்ள யோகா நூலைத் திறந்தால், அதிக அளவில் இருக்கும், எங்கே , எப்படி ஆரம்பிப்பது என்று மலைப்பாக இருக்கும், இந்த இதழ் வாங்கி, அந்த யோகாசனத்தை பார்த்து, ஐந்தே ஒரு அடுத்த இதழ் கிடைக்கும் வரை. இந்த ஆசனத்தை பயில்வேன் என்று பயில இலகுவாக இருக்கும், அடுத்த மாதம் முதல் அடுத்த ஆசனம் கற்றுக் கொண்டு அவற்றை இணைத்துக் கொள்ளலாம், இது எளிய யுக்தி தானே. இது இந்த நூலின் வாயிலாக நாம் கற்றுக் கொள்ள விரும்புவது.


மனச்சோர்வு, மூளை பக்கவாதம் போன்ற சில உடல் உபாதைகளை பற்றியும் இதழில் வெளியிடுகிறார்கள். மேலே நீங்கள் பார்த்தால் , தெளிவாகப் புரியும்.


ரத்த சோகையா ? இருக்கவே இருக்கு பீட்ரூட். அஜீரண கோளாறா? அண்ணாசி பழம் சாப்பிடுங்கள் என்று போகிற போக்கில் எளிமையாக தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் உணவே மருந்தாய் இருப்பது நூலின் தனிச் சிறப்பு.





தற்போது தொலைக்காட்சி பெட்டியை திறந்தாலே , விளம்பரங்களில் கிருமிகள், அந்த சோப் யூஸ் பண்ணுங்க, இந்த லிகுய்ட் யூஸ் பண்ணுங்க என்று நம்மை மூளை சலவை செய்கின்றார்கள், நோய்க்கு காரணம் கிருமிகள் அல்ல என்று ஒரு கட்டுரை இதை தெளிவாய் உணர்த்துகின்றது, குழந்தைகளுக்கான இயற்கை உணவு முறைகள் பற்றியும் சொல்வது நூலின் மணிமகுடத்தில் மின்னும் ஒரு வைரக்கல்.


காந்திய வழியில் தலை வலிக்கு தீர்வு மேலே 




உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும், எப்படி உன்ன வேண்டும் போன்ற செய்திகளை வழ,வழ என்று சொல்லமால்  நறுக்கித் தெரிந்தார் போல்,எளிமையையாய் புரியும் வண்ணம் செய்திகளை அறியத் தருவது நமக்கும் எளிமையாய் உள்ளது.



இயற்கை மருத்துவம் என்றாலே இவர் பெயர் இல்லாது இருக்காது. ஸ்ரீ ராமுலு ஐயாவின் கட்டுரை 
உள்ளது. அவரின் குரு ராமகிருஷ்ணன் ஐயா, சிவ சைலம் நலவாழ்வு, ராஜபாளையம் அரவிந்தர் ஆசிரமம் போன்ற இயற்கை நலவாழ்வு பயிற்சிகள் எங்கெங்கு நடைபெறுகின்றது என்பது பற்றி இதழின் கடைசி பகுதியில் சொல்கின்றார்கள்.


ஒவ்வொரு இதழின் பக்கத்திலும் அடியில் ஒரு நற்சிந்தனை வெளியிட்டிருப்பது இன்னும் நூலினை மேன்மை பெற செய்கின்றது. இவற்றை தொகுத்து தனிப் பதிவாக "வாழ்வாங்கு வாழ" என்ற தலைப்பில் தனிப்பதிவாக தர குருவிடம் வேண்டுகின்றோம். இந்த நற்சிந்தனை வழங்கும் அடியாரை நாம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.




நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பற்றி என்றாவது நாம் உணர்ந்து இருப்போமா? இதோ உறுப்பு, என்ன உணர்வுகள் தரும், அறிகுறிகள் என்ன என்று மிக மிக எளிதாக உள்ளது. 


அட ! பெண்கள் பகுதி என்று இதை ஒதுக்க வேண்டாம். சூப்பரான மல்லி அவல் சாதம் எப்படி செய்வது என்று நல்ல உணவு பற்றியும் இவர்கள் பேசி வருவது குறிப்பிடத் தக்கது. ஒன்றா? இரண்டா? இது போன்ற பல செய்திகள் .. பதிவின் ஆரம்பத்தில் நாம் இதைத் தான் சொன்னோம். இந்த இதழ் நறுமணம் கமழும் ஒரு பூங்கொத்து. 


அக்காலம், இக்கலாம் எப்படி உள்ளது என்றும் தங்களுக்காக மேலே எடுத்து வெளியிட்டுள்ளோம். 
சுமார் 16 பக்கங்கள் கொண்ட மிக மிக சிறிய மாத இதழ், ஆனால் பொதிந்து இருப்பதோ பெரிய பெரிய கருத்துக்கள். வெறும் ஐந்தே ரூபாயில் ஆரோக்கியம்  பெற இந்த இதழை வாங்கிப் படியுங்கள். இதழ் ஐந்து ரூபாய் தரத்தில் தான் இருக்கும். ஆரம்பத்தில் நாம் வாங்கிவிட்டு அப்படியே வைத்து விட்டோம், அட்டைப்படம் சரியில்லை, பக்கங்களிலும் தரம் இல்லை என்று, பின்பு ஒரு நாள் படித்த பின்பு தான் , வசீகரிக்கும் வண்ண அட்டைப்பட மாத இதழ்களை விட, இந்த மாத இதழ் மகத்துவம் பொருந்தியது என்று.

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். கண்டிப்பாக இந்த மாத இதழை வாங்கிப் படியுங்கள், நீங்கள் படித்து , பின்பற்ற ஆரம்பித்தாலே, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படா. நாம் எப்படி அஞ்சறைப் பெட்டியை இழந்தோமோ, இந்த இதழையும் அது போல இழக்க கூடாது, வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்றால் அது " இயற்கை மருத்துவம் " மாத இதழே. மாதச் சந்தா கட்ட மீண்டும் கீழே உள்ள இணைப்பில் பாருங்கள்.



அருமையான , சமுதாயத்திற்கு தேவையான "இயற்கை மருத்துவம் " என்ற மாத இதழை வெளியிடும் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்திற்கு இங்கே நன்றி தெரிவிப்பதில் நாமும், TUT குழுமமும் மகிழ்ச்சி அடைகின்றது.

விரைவில் "வாழ்வாங்கு வாழ" பதிவில் இயற்கை மருத்துவ இதழின் பொன்மொழிகளைக் காண்போம். 


முந்தைய பதிவுகளுக்கு :-

மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்" - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_10.html

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_47.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html


No comments:

Post a Comment