Subscribe

BREAKING NEWS

22 June 2018

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2)

அன்பார்ந்த அடியார் பெருமக்களே...

தேனி சண்முகநாத மலை தரிசனம் அடுத்த பதிவை இங்கே தொடர்கின்றோம். அழகென்ற சொல்லுக்கு மட்டும் முருகன் என்றல்ல; அருள் என்ற சொல்லுக்கும் முருகனே; தமிழ் மொத்தமும் முருகன் வசமே; தேனி சண்முகநாத மலை ஒவ்வொரு அடியார் பெருமக்களும் தரிசிக்க வேண்டிய இடம்.

முருகனுடைய திருநாமங்கட்கெல்லாம் சிவபெருமான் உமாதேவியிடம் காரணங்கள் கூறுகின்றார். "இன்ன காரணத்தால் இன்ன பெயர் அமைந்தது" என்று கூறுகின்றார்.

      "ஆறுமுகங்கொண்டதால் சண்முகன்"
      "கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன்"
      "கார்த்திகை மாதர் வளர்த்தனால் கார்த்திகேயன்"
      "ஆறு திருவுருவும் ஒன்று கூடியதனால் கந்தன்"
      "மயிலை வாகனமாக உடையவனாதலால் விசாகன்"


எம்மொழிக்கும் முதல்வனான முருகன் செம்மொழியான தமிழுக்குச் சிறப்புடைத் தலைவன் ஆவான். தமிழில் மூன்று இனம் உண்டு.
அவை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்படும். இவற்றுள் மெல்லினம் மென்மையும், இனிமையும் உடையது. ஆதலால் -

      மெல்லினத்தில் ஒரு எழுத்து "மு"
      இடையினத்தில் ஒரு எழுத்து "ரு"
      வல்லினத்தில் ஒரு எழுத்து "கு"


என "முருகு" என்று மூவினத்தில் மூவெழுத்தைக்கொண்டு எந்தை கந்த வேளின் திருநாமம் அமைந்துளது.

ஆண்டவன் ஆறு ஆகாரங்கட்கும் ஆறு சமயங்கட்கும் ஆறு அத்துவாக்களுக்கும், ஆறுபடை வீடுகட்கும் அதிபன்.

"முருகா" என்ற பெயரும் ஆறு பொருள்களைக் கொண்டது. தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற ஆறு தன்மைகளையும் உடைய சொல் "முருகு".

      "முருகுகள் இளமை நாற்றம்
      முருகவேள் விழா வனப்பாம்"


என்று பிங்கள நிகண்டு கூறுகின்றது.

இதனைப் புலப்படுத்தவே அருணகிரிநாதர்,

      "மெய்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள்"

என்று கூறுகின்றார். இப்பாடலில் முருகா என்பது ஒருமை. நாமங்கள் என்பது பன்மை.

பல நாமங்களின் பொருள்களையுடையது "முருகா" என்ற நாமம் என்பதை இப்படி உணர்த்துகின்றார்.

இறைவன் பல்லாயிரம் நாமங்கள் கொண்டவன். அவற்றுள் சிறந்த நாமம் மூன்று - முருகன், குமரன், குகன் என்பவை. இம் மூன்றனுள்ளும் மிகச்சிறந்தது முருகன் என்ற நாமம்.

      "முருகன் குமரன் குகன் என்று மொழிந்
      துருகுஞ் செயல் தந்துணர் வென்றருள்வாய்"


என்று கந்தரநுபூதியில் கூறுகின்றார்.


எத்துனை சிறப்பு வாய்ந்தது முருகா! எனும் நாமம். இத்தகைய முருகனை தேனியில் உள்ள சண்முகநாத மலையில் தரிசித்தது நம்மை இன்னும் நம்மை முருக அடியாராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.











அட..தரிசனத்திற்கு பின் இப்போது  அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...என்று  பாடத் தோன்றுகின்றது அல்லவா? இதோ.பாடலின் வரிகள்..மீண்டும் மீண்டும் பாடி பரவசம் அடையுங்கள்.


அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே
பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (2)
பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் (2)
... பசியாறி நின்றவன்
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே
குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (2)
குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (2)
பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (2)
நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (2)
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே

... தெய்வமும் முருகனே.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :-

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

விளம்பியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temple.blogspot.in/2018/04/blog-post_14.html

பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_6.html

அக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் - http://tut-temple.blogspot.in/2017/09/blog-post_13.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

கலையார் அரிகேசரியாய் போற்றி! போற்றி!! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_2.html


No comments:

Post a Comment