அடியார் பெருமக்களே.
தரிசனம் இன்னும் பெறுவோம் என்று வெள்ளியங்கிரி பதிவை நிறைத்தோம். நிறைவு பெறும் தரிசனமா அது? முழுமை பெறும் தரிசனம் அது. செங்குத்தான மலை, கரடுமுரடான பாறைகள், வாய் பிளந்து நிற்கும் அதலபாதாளம். யானை, செந்நாய் போன்ற வனவிலங்குகள். மலை மேல் செல்லச் செல்ல வாட்டும் குளிர், பனி. அந்தச் சிரமங்களைத் தாங்கித்தான் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளயங்கிரியில் ஏறி உச்சியில் உறைந்திருக்கும் ஈசனைத் தரிசித்தால் அனைத்தும் பறந்து போய் விடுகின்றது.
வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், வெள்ளி வார்ப்படத்தால் மூடி இருப்பது போலவும் காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒரு பெண், மணந்தால் சிவனை தான் மணப்பேன் என்று உறுதி பூண்டு நிற்கிறாள். அதிலும் குறிப்பிட்ட நாளுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமானும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருகிறது. இதனால் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால், நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவள் தான் கன்னியாகுமரி. இன்றும் அவளுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தன் பக்தையை காப்பாற்ற முடியாததால் மனமுடைந்த சிவன் தன் கவலைகளை குறைக்க ஒரு இடத்தை தேடுகிறார். அப்படி அவர் கண்டறிந்த இடம் தான் வெள்ளியங்கிரி மலை. விசனத்தோடு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சிவன் அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார். சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையில் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் வாழ்ந்த ஒரு அற்புத மலை இது. இன்றும் இங்கு பல சித்தர்கள் சூட்சும வடிவில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. வெள்ளியங்கிரி மலை பயணம் நமக்கு ஆன்மீக உணர்வை அதிகரிப்பதோடு உடலில் புத்துணர்வும் பெருகுகிறது என்பதே உண்மை.
சரி...தரிசனம் தொடர்வோமா?
கயிலாயம் எப்படி இருக்கும் என்று நாம் திரைப்படங்களில் தான் கண்டிருப்போம். இங்கு சென்றால் நாம் கயிலையை காண்பது உறுதி. சென்ற ஆண்டு நமக்கு இப்படி ஒரு தரிசனம் கிடைக்கவில்லை. அரக்க,பறக்க சென்றோம். முதல் முறை தரிசனம் வேறு; நன்றாக அமைந்தது. ஆனால் இந்த ஆண்டு கயிலை கண்டு, நெஞ்சில் இறுத்தினோம். கடுங்குளிரில் அந்த சாம்பிராணி பரவ, பரவ, மேலும் நெருப்பில் கண்ட காட்சி..அட...அட..அனுபவித்தால் தான் புரியும்.
ஒவ்வொருவராக சென்று ஆசி பெற்ற காட்சி. இவர் இங்கே பல்லாண்டுகளாக இருந்து பூசை செய்து வருகின்றார். இவரிடம் ஆசி பெற்றது மிகவும் மகிழ்வாக இருந்தது. காரணம் இவரை நாம் தொலைக்காட்சி பதிவில் பார்த்திருக்கின்றோம். சிவன் அடியார் இவரிடம் ஆசி பெற்றது எத்துனை எத்துணை பெரும் பேறு என்று யாம் அறிந்திலோம் இறைவா !
இதோ..உங்களுக்காக..தெள்ளத் தெளிவாக அந்த ஈசனின் அருட்காட்சி. கண்டு மகிழுங்கள். இந்தப் பராமனைக் காணத் தான் 10 மணி நேரம் நடந்தோம். கண்டதும் அனைத்தும் பறந்து போய் விட்டது. மனம் மிக மிக லேசாக மாறிவிட்டது. இயற்கையின் இன்பம் உணர்த்தப்பட்டது. தென்றலை ஸ்பரிசித்தோம். மழையில் நனைந்தோம். சிவத்தின் அருளில் ஊறினோம். கைலாய வாத்தியம் விண்ணைப்பிளக்க, கயிலாயத்தில் கால் ஊன்றி, இது கனவா? நனவா? என்று நம்மை நாமே தொட்டுப் பார்த்தோம். இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று நெக்குருகினோம்.
இளங்காலை சூரியன் எட்டிப் பார்த்த போது
இதைப் போன்ற இன்பம் வாய்க்க இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். இந்த முறை இரண்டு நாட்கள் வெள்ளிங்கிரியில் தரிசனம். அந்த மிதமான குளிர் இன்னும் வேணும் என்றே தோன்றுகின்றது. குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அட...நம்ம வினோத் ஏதோ..ஆராய்ச்சி பண்ணுவது போல் தெரிகிறதே...அடுத்து அப்படியே மலை இறக்கம் தான். சென்ற முறை 7 ஆவது மலை ஏறி இறங்குவதற்குள் நமக்கு போதும் ..போதும் என்றாகிவிட்டது.இம்முறை பல தம்பிகள் இருந்ததால், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் இருந்தது..ஆனால் ஒரே ஒருவருத்தம். ஆறாவது மலையில் உள்ள சுனையில் இம்முறையும் நாம் நீராட வில்லை.
ஒவ்வொரு மலையேற்றமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். வெள்ளியங்கிரியைப் பொறுத்த வரையில், உடலை மட்டுமல்ல;மனதையும் வெளுத்து வாங்கும் என்பதே உண்மை. நம்மை சிறுவயது நினைவுகளுக்கு வெள்ளியங்கிரி அழைத்து செல்கின்றது. இதே அனுபவம் சென்ற ஆண்டும் நமக்குக் கிடைத்தது.
இறங்கி வரும் போது தேநீர்கடையில் தேநீர் அருந்தினோம், ஒரு வழியாக ஆறாவது மலை அடிவாரத்தை நெருங்கிவிட்டோம். இதோ. அங்குள்ள ஈசன் தரிசனம்.
வேறென்ன வேண்டும்? இந்த தரிசனம் ஒன்று போதாதா? இந்த தரிசனம் மூலம் அம்மையப்பன் தருகின்ற தெம்பு போதாதா? மலை இறக்கத்தில் நாம் எப்படி வந்தோம்? எப்படி தரிசனம் செய்தோம் போன்ற செய்திகளை இனிவரும் பதிவிகளில் தொடர்வோம்.
- இனி மலை இறக்கம் தொடரும்.
மீள்பதிவாக:-
வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html
வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html
வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html
இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

No comments:
Post a Comment