Subscribe

BREAKING NEWS

14 January 2019

"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - தொடர்ச்சி

அனைவருக்கும் வணக்கம்.


உழவாரம் அதுவே நம் வாழ்வின் ஆதாரம் என்று நமக்கு சொல்லத் தோன்றுகின்றது. நன்றியுணர்வு இருந்தால் தான் நாம் உழவாரப் பணி செய்ய முடியும். நாம் இன்னும் நம் தளத்திற்கென உழவாரப் பணி கருவிகள் வாங்கி வைக்கவில்லை. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டில் சேவை செய்து வருகின்றோம் என்றால் அது நம்மை வழி நடத்தும் குருமார்களின் அன்பும், கருணையம்ம் கருணையும் தான். சித்தன் அருள் வழங்கிய கோடகநல்லூர் உழவாரப் பணி மீண்டும் இந்தப் பதிவில் தொடர்கின்றது.

ஒவ்வொரு உழவாரப் பணியம் ஒவ்வொரு விதத்தில் நம்மை நெகிழ்த்தி விடும் .அந்த வகையில் இந்த உழவாரப் பணி நமக்கு சித்தர் பெருமக்களால் வழங்கப்பட்டது. பதினெண் சித்தர்களும் நமக்கு வழங்கிய உழவாரப் பணி. அகத்தியம் காட்டிய உழவாரப் பணி. சரி. உழவாரப் பணிக்கு செல்வோம்.


சென்ற பதிவில் உழவாரப் பணி பற்றிய அறிவிப்பு செய்தோம். இரண்டு அன்பர்கள் வந்தார்கள். இருபது பேர் செய்ய வேண்டிய பணியை அந்த இருவரும் செய்து முடித்தார்கள். நமக்கு ஒரே ஒரு நபர் வந்தால் கூட போதும். நம்மால் முடிந்த அளவில் இந்த சேவையில் ஈடுபடுவோம் என்பது உறுதி. மீண்டும் மீண்டும் எண்ணிக்கை முக்கியமல்ல;எண்ணங்களே முக்கியம் என்று நமக்கு உணர்த்தப்படுகின்றது.

கோயிலை சுற்றி உள்ள பாதையில் நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணியை அடுத்து செய்தோம். கோயிலை சுற்றியுள்ள நடைபாதை தற்போது சுத்தம் செய்து வருகின்றோம். இங்கேயே இருக்க வேண்டுகின்றோம். 


அடுத்து என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த சிந்தனையா?


அட..நம் அன்பர் போளூர் உமா அவர்கள். நாம் இவர்களை இங்கே சந்திப்போம் என்று நினைக்கவில்லை. ஆனால் அகத்தியர் சந்திக்க வைத்துவிட்டார். கோயிலை சுற்றிலும் நீர் ஊற்றி கழுவி விட்டோம்.




போளூர் உமா அவர்களோடு எம் தங்கையையும் சேர்த்து தீப மேடையை தேய்த்து கழுவ சொன்னோம். அவர்களும் முடிந்த அளவில் அந்த பணியை செய்து முடித்தார்கள். இனிமேல் தான் பணியின் முழு வீச்சு ஆரம்பம்.


இதுவரை கோயிலின் வெளிப்புறம் மட்டுமே முடித்துள்ளோம். இனி கோயிலின் முன்பகுதி மற்றும் கோயிலின் உட்புறம் நீர் ஊற்றி சுத்தம் செய்தோம். ஒருவர் குழாயில் இருந்து நீர் அடிக்க, மற்றவர்கள் துடைப்பம் கொண்டு கூட்டி வருவதை கண்டோம்.






      குழாய் நீர் அடித்து சுத்தம் செய்யும் பணி நிதானமாக நடைபெற்றது. இது போன்று மீண்டும் இங்கே உழவாரப் பணி செய்ய ஓராண்டு அல்லவா காத்திருக்க வேண்டும்.






மீண்டும் ஒரு முறை வெளியே சென்று பார்த்தோம். தீப மேடை வேலை சென்று கொண்டு இருந்தது.





உள்ளே மீண்டும் வந்தோம். முழுவீச்சில் நேர்த்தியாக பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதியம் 1 மணி அளவில் ஆரம்பித்தோம். இடைவேளை இன்றி சுமார் 2 மணி நேரமாக உழவார பணி தொடர்ந்து கொண்டிருந்தது.











ஓய்வெடுத்தோம் என்றால் மாலை நேரமாகிவிடும். எனவே ஒரே மூச்சாக செய்து விடுவோம் என்று அகத்தியரின் மேல் நம்மை ஒப்படைத்து விட்டு பணியை தொடர்ந்தோம்.












கோயிலின் முன் பகுதி முடிந்ததும் கோயிலின் உள்ளே சென்று மீண்டும் தரையை நீர் ஊற்றி கழுவும் பணி தொடரப்பட்டது.



கோயிலின் வெளியே மூவர் சும்மா..சொல்லக்கூடாது, நேர்த்தியாக..நிதானமாக கூட்டிக் கொண்டிருந்தார்கள்.




இதோ.. நம்மால் முடிந்த வரை உழவார செய்து முடித்து விட்டு, தாமிரபரணி புஸ்கரம் சென்று அன்னையை வணங்கினோம். கோடகநல்லூர் கோயிலின் அருகிலே உள்ள அன்னையை வழிபட்டு நமக்கு குருமுகமாக வழிகாட்டிய படி, அன்னைக்கு தீபமேற்றி ,மந்திரம் கூறி வழிபட்டோம்.






மீண்டும் கோயிலுக்கு வந்தோம். உள்ளேயும் சுத்தம் செய்துவிட்டார்கள். சற்று ஓய்வெடுத்தோம். அப்போது நம் தளம் சார்பில் கொண்டு சென்ற வஸ்திரம்,தேன் போன்ற அபிஷேக பொருட்கள், அன்னாபிஷேகம் செய்ய அரிசி என அனைத்தும் திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களிடம் கொடுத்தோம்.








இவ்வளவு பணி செய்து விட்டு நம்மை சும்மா அனுப்புவாரா? மதியம் உணவும் உண்ணவில்லை. நல்ல பசி வேறு, உழவாரப் பணி செய்த களைப்பில் பசி எடுத்துக் கொண்டிருந்தது. நாம் உணவை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அன்று அகத்திய அடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு உண்டோம். அந்த அன்பு..அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ? உணவு முடித்து நன்றி கூறி அங்கிருந்து விடை பெற்றோம். வெளியே வந்து எப்படி முக்கிய சாலைக்கு செல்வது என்று தெரியவில்லை.  அங்கே வந்த ஆட்டோக்கள் ஒவ்வொன்றாக கேட்டுப் பார்த்தும் பலனில்லை. சரி.அகத்தியர் விட்ட வழி என்று கூறி நாம், எம் தம்பி , தங்கையோடு நடக்க ஆரம்பித்தோம்.


அப்போதே  அங்கு ஓரு அற்புதம் நடைபெற்றது. முடிந்த வரை நடந்து சென்று பின்பு யாருக்காவது அலைபேசியில் போக்குவரத்து வேண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அலைபேசி எடுக்கின்றோம். அப்போது அங்கே ஒரு மகிழுந்து ( கார் ) வந்து நின்றது. அதுவும் அக்னிலிங்கம் ஐயாவின் மகிழுந்து.சரியாக 3 பேர் செல்ல வசதி. அனைத்தும் அகத்தியரின் அருள் என்று மனத்தில் இறுத்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம். அன்றைய தினம் எம் பெற்றோரை கோடகநல்லூர் அழைத்து செல்ல முடியவில்லை என்று வருத்தம் இருந்தது.அடுத்த ஆண்டுக்காக காத்திருக்கின்றோம்.இந்த வருட அகத்தியர் ஜெயந்தியில் நமக்கு அடுத்த ஆண்டுக்கான உழவாரப் பணி அழைப்பும் கிடைத்து விட்டது. அன்றைய தினம் மறு நாள் பூசை நாம் காண நமக்கு கொடுத்து வைக்க இயலவில்லை. நமக்கு கிடைத்த அருள்நிலைகளை கீழே பகிர்கின்றோம்.





அது சரி..அங்கே ஒரு மேடையை சுத்தம் செய்தோம் அல்லவா? அங்கே தான் பெருமாள் அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அட. நம் மூலவர் காட்சி கொடுத்த இடம் அல்லவா? அங்கே சுற்றிலும் இருந்த நந்தவனத்தில் அகத்தியர் உலாவிய போது, பெருமாளின் தரிசனம். பக்கத்தில் தாமிரபரணி. நாம் அந்த இடத்தில் பாதம் பதிக்க  கொடுத்து வைத்தவர்கள் தான்.

சித்தன் அருளில் கீழ்க்கண்ட செய்தி கண்டோம். அனைவருக்குமாக இங்கே பதிவு செய்கின்றோம்.

உழவாரப்பணியை இதற்கு முன் பல கோவில்களில் செய்திருந்தாலும், இங்கு செய்தது மிக நிறைவை தந்தது. அது அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் முயற்சி. அடியேனின் முயற்சி என்று ஒன்றுமே இல்லை. உழவாரப்பணி என்பதை ஒருவன்/ஒருவள் செய்தாலும், அந்த நபர், தனக்கென அதை செய்வதில்லை. அதன் பலன் பிறருக்குத்தான் செல்கிறது. செய்தவர் வேண்டுமானால், அமர்ந்து, நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். உழவாரப்பணி என்பது தன்னைவிட்டுவிட்டு, பிறருக்காக செய்கிற விஷயம் என்பதால், சித்தர்கள் என்றுமே அதை ஆசிர்வதித்தனர். அந்த நிலையில் நிரந்தரமாக, மனசாலோ, உடலாலோ அர்ப்பண மனோபாவத்துடன் செய்கிற ஒருவன்/ஒருவள், சித்த மார்கத்தினுடே, இறைவனை அடைய தகுதி உள்ளவர்களாக மாறுகின்றனர்.

ஞாயிறன்று, உழவாரப்பணி செய்த, திரு ஸ்வாமிநாதன், அவர் மனைவி சித்ரா, மனோ, உமா (போரூர்), ராகேஷ், ராகினி, ரஞ்சித், சங்கர், ராஜேஷ், மற்றும் அடியேனின் குழுவில் இருந்த அகத்தியர் அடியவர்களுக்கும், அகத்தியர் சார்பாகவும், பெருமாள் சார்பாகவும், "சீரும் சிறப்புமாக வாழ்க்கை" அமைய வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கை எல்லாம் நிறைந்ததாக இருக்கும் எனவும் கூறுகிறேன்.

நமக்கு இங்கே உழவாரப் பணி செய்ய வாய்ப்பு வழங்கிய திரு.அக்னிலிங்கம் ஐயா & திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கும் நம் நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். நம்முடன் இந்த சேவையில் இணைந்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - மார்கழி மாத உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_7.html

பனப்பாக்கம் உழவாரப்பணி அனுபவம் - அகத்தியர் அழைத்தார்...ஆனந்தம் தந்தார்... - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_16.html 

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html


உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

No comments:

Post a Comment