Subscribe

BREAKING NEWS

20 June 2018

காத்திருக்கின்றார் கொண்டையம்பட்டி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள்

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சில பதிவுகளில் "நாராயணா எனும் நாமம்" பற்றி சில துளிகளை நாம் அறிந்து வருகின்றோம். நம் பயணத்தில் திரு.யாணன் ஐயா அவர்களின் சந்திப்பு பற்றி சொல்வதாய் கூறி இருந்தோம். அவரைப் பற்றி கூறுவதாக இருந்தால்

 சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.    

இந்த சுய அறிமுகம் நம்மை ஞானம் நோக்கி இழுக்கின்றது. சுமார் ஐந்தாறு முறை நேரில் சந்தித்து இருக்கின்றோம். நாம் சந்தித்து வந்த பெரும் போராட்டத்திற்கு தீர்வு காண முதலில் சந்தித்தோம். அவர் சொன்ன அறவுரை "ஆசிகளும் புண்ணியங்களும் " சேர்த்துக் கொண்டே வாருங்கள் என்பதே. அன்று முதல் ஒவ்வொரு விஷயத்திலும் அவரிடம் அளவளாவி தான் செய்து வருகின்றோம். சென்ற வாரம் கூட எம் தாயிடம் திரு.யாணன் ஐயா அவர்கள் பேசினார். அந்த உரையாடலின் ஆழம் இன்னும் நம்மை அன்பில் ஆழ்த்துகின்றது. இது தான் இன்றைய தேவையும் கூட..நாம் என்ன சொல்ல வருகின்றோமோ, அதனை செயலில் நிலைபெற செய்ய வேண்டும்.

இப்படியான பயணத்தில், பல முறை அவரிடம் பேசி உள்ளோம். அப்படியான ஒரு உரையாடலில், கோயில் கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள். அது எக்காலத்தும் நிலைத்து இருக்கும் என்று கூறினார். அப்படியே மதுரை அருகில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது என்று கூறி, அந்த கோயிலுக்கு உதவ வேண்டும் ராமச்சந்திரன் என்ற அன்பரின் அலைபேசி எண் கொடுத்தார். நாமும் திரு. ராமச்சந்திரன் ஐயாவிடம் பேசி, அவரது வங்கிக்கணக்கு வாங்கி, நம்மால் இயன்ற சிறு தொகையை செலுத்தி அவரிடம் தெரிவித்தோம். அவரும் நன்றி கூறி, மதுரைப் பக்கம் வந்தால், கட்டாயம் கோயிலுக்கு வாருங்கள் என்றார். நாமும் அந்த நாளுக்காக காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. இந்த மாதம் மதுரை சென்று வந்தோம். அப்போது திரு. ராமச்சந்திரன் ஐயாவினை தொடர்பு கொண்டோம். அப்போது தான் மதுரைக்கு பக்கம் கோயில் இருக்கும் ஊர் கொண்டையம்பட்டி என்று தெரிந்தது.பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் கொண்டையம்பட்டி அடைந்தோம். ராமச்சந்திரன் ஐயா அங்கே காத்திருந்து நம்மை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். முதல் முறை சந்திப்பு..இன்பமாய் தொடர்ந்தது. கோயில் பற்றி பல செய்திகள் கூறினார்கள். அந்த ஊரே வகுத்து மலை என்ற மலையின் அடிவாரத்தில் உள்ளது. கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஊர் இருக்கின்றது. நாகரிகம் இன்னும் முழுதாய் அங்கு எட்டிப்பார்க்கவில்லை. அதனால் கிராமம் உயிர்ப்பாய் உள்ளது.





பின்னர் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயிலை சென்று கண்டோம். சுமார் 1999 ஆண்டு முதல் இந்த கோயிலை கட்டிட அவர்கள் முயன்று வருகின்றார்கள்.அவர்களுடைய விளைநிலத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சகிதமாக  ஸ்ரீநிவாச பெருமாள் இருந்திருக்கின்றார். அவரை அங்கேயே கோயிலில் உருவாக்க இவர்கள் முயன்று வருகின்றார்கள். இன்றைய சூழலில் நாம் புதிதாக கோயில் கட்டுவதாக சொன்னால் நாம் விரும்புவதில்லை. பழமை மாறாத பழந்திருக்கோயில்களை நாம் உயிர்ப்பிக்க செய்ய வேண்டும் என்பதே நம் அவா. ஆனால் இந்த கோயில் அதில் விதிவிலக்காக உள்ளது. ஏனெனில் நமக்கு இந்த கோயிலை காட்டியவர் மிகப் பெரும் ஞானவான். நாமும் நேரில் கண்டு பார்த்த போது, நமக்காகவே கொண்டையம்பட்டி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் காத்திருப்பதை உணர்ந்தோம்.




மதுரை அருகில் கிராமத்தில் இருக்கும் கோயில், பசுமை மாறாத கிராமம், அந்த கோயில் இருக்கும் இடமும் நம்மை யோக அனுபவத்தில் ஆழ்த்துகின்றது. திரு. ராமச்சந்திரன் தம்பதியர் நிர்வாகம் செய்து வருகின்றார்கள். அம்மையார் தான் தினமும் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றார்கள். சைவ உணவு பழக்கம் மேற்கொண்டு வருகின்றார்கள். அவரைப் பார்த்து , நம்மால் இறை காரியம் தடைப்பட கூடாது என திரு.திரு. ராமச்சந்திரன் ஐயா அவர்களும் சைவத்திற்கு மாறி விட்டார்கள். அவர்கள் பேசியதில் இருந்து, எப்போது பெருமாள் அங்கு கோயிலில் அருள் தருவார் என்ற ஆதங்கம் தெரிந்தது. நாம் நம் தளத்தின் வாயிலாக நம்மால் இயன்ற அளவில் இணைகின்றோம் என்று கூறினோம்.








அப்படியே நம் தளத்தின் உறவுகள் அனைவருக்குமாக அங்கே பிரார்த்தனை செய்தோம். நம் நம்முடன் இணைந்து வரும் அனைவரின் நியாயமான பிரார்த்தனைகளை அங்கே பெருமாளிடம் சமர்பித்தோம்.பின்னர் நம் குழுவில் இந்த தகவலை தெரிவித்து இந்த கைங்கர்யத்தில் அனைவரும் உதவும் படி விண்ணப்பம் செய்தோம்.









ஆயிரம், இரண்டாயிரம் என்று உதவுங்கள் என்று நாம் கேட்கவில்லை. குறைந்தது நூறு ருபாய்...இன்னும் குறைவாக பத்து ரூபாயாக இருந்தால் கூட மனம் உவந்து கொடுங்கள். ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

















விளக்கேற்றி வழிபாடு செய்து, பின்னர் நாம் அப்படியே சிறிது நேரம் அகவழிபாட்டில் அமர்ந்தோம். எந்த ஒரு முயற்சியும் தேவையிலாது, மனம் ஒன்றியது. ஒரு நிலைப்பட்டது. ஓர்மையில் ஒன்றியது. இந்த ஆண்டிற்குள் பெருமாள் அங்கு அருள் பாலிக்க வேண்டி, மனதில் பிராத்தித்து விட்டு, அப்படியே வீட்டிற்கு வந்தோம்.










கொள்ளை கொள்ளும் அழகு கொண்ட கொண்டையம்பட்டி இன்னும் மனதுள் விரிந்து நிறைந்துள்ளது. நம் அன்பர்கள் கொடுத்த உதவியால் தற்போது வரை சுமார் ரூ.13001 வரை உள்ளது. இன்னும் ஒரு மாதம் வரை நிதியுதவி பெற தீர்மானித்துள்ளோம். நம்மிடம் தான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்களே நேரில் சென்றும் பணமாகவோ, பொருளாகவோ உதவலாம். இத்துடன் வங்கிக்கணக்கு விபரங்கள் இணைத்துள்ளோம் வாய்ப்புள்ள அன்பர்கள்,இந்த பதிவைப் படிக்கும் அன்பர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையினை நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தது பத்து ரூபாய் கொடுத்தால் கூட அது பெரும் பேருதவியாய் இருக்கும். சிறு துளி பெரு வெள்ளம் அன்றோ?

வங்கியில் செலுத்துபவர்கள் நம் அலைபேசியில் உறுதி செய்யவும். நேரிடையாக பணம் செலுத்த இருப்பவர்கள் வரும் ஞாயிறு  உழவாரப்பணி  அன்று கொடுக்கலாம். அடுத்த மாத இறுதியில் நாம் நேரில் அல்லது  திரு. ராமச்சந்திரன் ஐயாவின் வங்கிக்கணக்கில் செலுத்த உள்ளோம்.

R. RAKESH : A/C no: 01661610052666 
CHENNAI PARRYS CORNER BRANCH HDFC Bank
IFSC:-HDFC0000166

அலைபேசி எண்: 7904612352 9677267266


அனைத்தும் பெரும் ஆளின் வசம். நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன், நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன், நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்,நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன், நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்,நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன், நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின், நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன், நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்

                                  ஓம் நமோ நாராயணாய 

மீள்பதிவாக:- 

பாவ புண்ணியக் கணக்குகள் பார்க்கலாமா? - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_29.html

பெருமாளே...பெருமானே...! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_12.html

எளியோர்க்கு எளியோனாய்! எம் பெருமாளே போற்றி!! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_8.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - http://tut-temple.blogspot.com/2018/01/blog-post_15.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/12/blog-post_95.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே!  - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_30.html

 ஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக அறிமுகம் - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_15.html

மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்" - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_10.html

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம் - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_47.html




No comments:

Post a Comment