ஸ்ரீகுருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம்
அகத்தியர் - சித்தருக்கெலாம் தலைமை சித்தர், அகத்தின் ஈசனாய் விளங்குபவர். முன்பெல்லாம் சித்தர் என்ற வார்த்தை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் கேட்கும். ஆனால் இன்று திரும்பும் பக்கமெல்லாம் சித்தர்கள் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆம்..இது காலத்தின் கட்டாயமும் கூட. திரும்பும் பக்கமெல்லாம் சித்தர்கள்,மகான்கள் என்று நம் தமிழ்நாட்டில் இருக்கும் போது, சித்தர்கள்,அவர்களின் வழிபாடுகள் ஒவ்வொரு நாளும் செய்து வருவது போற்றுதலுக்குரியது. அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" தளம் சித்தர்களின் ஆசி பெற்று வருகின்றது என்பது தெள்ளத் தெளிவே.
நம் தளம் சார்பில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கூடுவாஞ்சேரி அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இப்படியான பயணத்தில் நாம் தீர்த்த மலை சென்று வந்தோம். அப்போது அங்கே ஒரு அகத்தியர் ஆசிரமம் இருப்பதாக கேள்விப்பட்டோம். அகத்தியர் அருள் பெற காத்துக் கொண்டு இருந்தோம். இதோ.அவரது அழைப்பும் வந்தது. இந்த ஆசிரமம் சுவாமி வீரமணி தாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. சுவாமி வீரமணி தாசன் அவர்கள் பக்திப் பாடல் எழுதி பாடுவதில் வல்லவர். அவருடைய ஆன்மிக பயணத்தில் சுவாமி அவர்கள் திருஅண்ணாமலையில் அகஸ்தியர் ஆசிரமம் கட்ட உத்தரவானது. ஆனால் சில காலங்களுக்கு பின் அது மீண்டும் தீர்த்தமலையில் அமையும் என்று அருளாணை பிறப்பிக்கட்டு இன்று பல அடியார்களுக்கு அருள் வழங்கி வருகின்றது.
ஓம் அகஸ்திய நாதனே என சுவாமி வீரமணி தாசன் குரலில் பாடலைக் கேட்ட போது, உள்ளம் மகிழ்ந்தது, உச்சி திறந்தது. இதோ பாடலின் சில வரிகள்.
ஓம் அகஸ்திய நாதனே
ஸ்ரீ சற்குரு நாதனே
ஓம் குருமுனி தேவனே
ஸ்ரீ குருமண்டல தெய்வமே
பொதிகாசலமோ நின் நாமம்
தணிகாசலமோ குரு நாதம்
குருவே குமரா என்றோதும்
குருமுனி பாதம் நமஸ்காரம்
சாய்ந்த லிங்கமோ சதுரகிரி
ஆய்ந்து வந்ததோ தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம் எழுந்த
உமக்கு நமஸ்காரம்
பொதிகை உமக்கு தலைமையகம்
அம்பாசமுத்திரம் துறைமுகமாம்
என்பால் வந்தாய் குருமண்டலம்
அகஸ்திய சுவாமிக்கு நமஸ்காரம்
சின்மய முத்திரை பிடித்தபடி
அன்புடன் புகுந்தாய் தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம்
உறையும் குருவே நமஸ்காரம்
சீடன் புலஸ்தியன் செவி மடுக்க
பாடம் நடத்திய குரல் தொனிக்க
வந்தாய் இந்த குருமண்டலம்
எந்தாய் உமக்கு நமஸ்காரம்
குற்றாலத்துறை நாதரப்பா
கற்றாய் அவரிடம் ஞானமப்பா
கற்றதை எமக்கும் எடுத்துரைக்க
வந்தாய் உமக்கு நமஸ்காரம்
ஏன் நமஸ்கரிக்க வேண்டும்? முதலில் நமஸ்காரம்/ சரணம் சொல்லி பழக்க வேண்டும். பின்னர் தான் சரணத்தின் வாயிலாக சரணாகதி தத்துவம் புலப்படும்.
மறுபுறத்தில் சித்தர் காப்பு பாடல் காணக் கிடைத்தது.

ஆசிரமம் பற்றியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆசிரமத்தின் ஒரு பக்கம் பார்த்து மெய் உருகினோம். சும்மா இரு என்று
உணர்த்திய ரமணர், சேஷாத்திரி , நாம மகிமை ஊட்டும் யோகி ராம் சூரத் குமார்
என கண்டு, அருளில் திளைத்தோம். அருட்கடலில் நீந்திக் கொண்டு இருந்தோம்
என்றே சொல்ல வேண்டும்.
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி
இந்த 14 ஞானிகள் அடங்கிய பாடலை காலையிலும் மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், பூசை செய்தும் வந்தால் ஞானிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது போன்ற சித்தர் காப்பு பாடலை தினசரி காலையிலும், மாலையிலு ஓதுவது மிகவும் நன்று. போற்றினால் தானே நம் வினை அகலும்.

என்ன ஒரு அமைதியான இடம். அமைதி மட்டுமல்ல..ஆனந்தமும் கூடவே. இது போன்ற
இடங்களுக்கு வந்தால் ஓரிரு நாள் தங்கினால் தான் இன்னும் நம்முள் நம்மை நாம்
உணர முடியும்.
ஆசிரம இடம் மட்டும் விரிந்து கிடைக்கவில்லை. இங்கே அருளும் விரிந்து தான் கிடக்கின்றது.
ஆசிரம இடம் மட்டும் விரிந்து கிடைக்கவில்லை. இங்கே அருளும் விரிந்து தான் கிடக்கின்றது.
சித்தர் பெருமக்களின் பாதம் பணிந்தோம்.
சித்தர்கள் வாழும் ஸ்ரீகுருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் வருகின்ற 24/06/2018 அன்று ஞாயிற்றுக்கிழமை 7 ம் வருட வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் மற்றும் அனைத்து பரிவாரங்கள், சித்தர்களுக்கு சிறப்பான ஹோமம்,அபிஷேகம், 108 சங்காபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூசை நடைபெறும்.
பூசையைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற குருவருள் கூட்டியுள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசி பெரும்படி வேண்டுகின்றோம்.
மீள்பதிவாக :-
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html
No comments:
Post a Comment