Subscribe

BREAKING NEWS

14 June 2018

ஜீவ அமிர்தம் அருளும் முருகன் பாடல்கள்

ஜீவ அமிர்தம்

சித்தர்களின் ராஜாங்கம் நடக்கின்ற மாத இதழ். நம் தளத்தில் ஜீவ அமிர்தம் இதழ் பற்றி பதிவு வெளியிட்டிருக்கின்றோம். நாம் செய்கின்ற அன்னசேவை ஜீவ அமிர்தம் மூலம் கற்றுக் கொண்டது தான். இதழின் வண்ணப்படம் இதயத்தின் வண்ணத்தையும் மாற்றுவதே ஜீவ அமிர்தத்தின்  வெற்றியாகும். நம் தலத்தில் ஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ் பற்றியும் செய்தி வெளியிட்டு இருந்தோம். பின்னர் நாம் ஒரு நாள் நேரில் சென்று முருகன் பாடல் ஒலித்தட்டு...அல்ல...அல்ல..அருள் தட்டு அது...பெற்று வந்தோம்..அவ்வப்போது கேட்டு வருகின்றோம்.

2017 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெகு சிறப்பாக விழா நடைபெற்றது. நம்மால் விழாவில் நேரில் சென்று கலந்து கொள்ள இயலவில்லை. அக்டோபர் மாதம் வெளிப்பட்ட முருகன் அருள் அகிலம் முழுதும் ஆண்டு வருகின்றது. அந்த அருட்கடலில் இருந்து சில துளிகளை பருக இங்கே தருகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் அருள்தட்டை வாங்கி தினமும் கேட்க பணிகின்றோம்.

விநாயக பெருமானை வணங்கி, திருப்போரூர் திருமுருகனைப்  போற்றி, சிறிய அறிமுக உரையுடன் அருள்தட்டு ஒளிர்கின்றது. தமிழ் மொழியினைப் போற்றி, அருளாளர்கள் வரிசை கூறி, ஆதி மூலத்தை பணிவதே இந்த ஒலித்தட்டின் நோக்கம் என்பது தெளிவாக விளங்குகின்றது.

என்ன புண்ணியம் செய்து விட்டேன்

 என்று அட்டகாசமான தொடக்க பாடல். நாமும் என்ன புண்ணியம் செய்தோம் என்று தான் நினைத்தோம். என்ன தவம் செய்தோமோ? ஜீவ அமிர்தம் கிடைக்க! நாம் என்ன புண்ணியம் செய்தோம் என்றே ஏங்கினோம். வசீகரிக்கும் குரலில், மெல்லிசையில்..தமிழிசை ஒலிக்க, திருமுருகரின் கை வண்ணத்தில் ஒவ்வொரு பாடல் வார்த்தையும் அருளாடலே.

சித்தர்கள் போற்றும் குருநாதனை நாமும் வணங்க வைத்த முதல் பாடல். மூவர் சமாதி பற்றி அறிந்து கொண்டோம். வடபழனி கோயிலின் பின்னே உள்ள மூவர் சமாதி அண்மையில் நாம் தரிசித்து வந்தோம். சரியாக பாடல் கேட்டு ஒரே வாரத்தில் நமக்கு மூவர் சமாதி தரிசனம். என்ன சொல்வது முன்னிற்கும் முருகன் அருளை ! முருகன் என்றாலே அகத்தியரும் வந்து விடுவார் அல்லவா! ஆம்..அவரின் அருளின் நிலை இப்பாடலில் வெளிப்படுகின்றது.

வடபழனி, மூவர் சமாதி, சிறுவாபுரி, திருச்செந்தூர் என நம்மை அழைத்து செல்வது மிகச் சிறப்பு.





அடுத்து, இரண்டாவது பாடல் - "வேண்டும் முன்பே இங்கு யார்"

வேண்டும் முன்பே இங்கு யார் வந்தது என்ற கேள்வி...
வேலவன் என்றே மனம் சொன்னது. முருகனின் பல்வேறு நாமங்களை ஒருங்கே உள்ளடக்கிய பாடல். வேதனையைத் தீர்க்கும் வேலவனின் பாதத்தில் சரணம் அடைந்திட இந்த பாடல் செய்கின்றது. கிருத்திகை, கார்த்திகை, பௌர்ணமி, ஷஷ்டி என முருகனுக்கு உகந்த நாட்களில் நாம் செய்ய வேண்டிய செயல்களை பாடல் வடிவில் தந்தது சிறப்பிலும் சிறப்பு. கர்மம் நீக்கி கந்தன் புகழ் பாடி, வேண்டும் முன்பே வரும் வேலவனின் பாதம் அடைவோம்.



முத்தாய்ப்பாக மூன்றாவது பாடல் - "தைப்பூசத் திருநாளில்"

பாடல் ஆரம்பமே அதிரடி தான். அதிரடித் துவக்கத்தில் கணீர் குரலில் தைப்பூசத் திருநாளில் காவடி எடுத்தோம். என்று கேட்ட போது நமக்கும் காவடி எடுக்க வேண்டும் என்று ஆவல் வந்தது.

"கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா 
வேலனுக்கு அரோகரா 
விமலனுக்கு அரோகரா"

என்று இடையில் பாடிய போது நமக்கு புதுத்தெம்பு கிடைக்கின்றது.காவடியில் இத்தனை வகைகளா? என்றும் நாம் வியப்புற்றோம். பால்காவடி , பன்னீர் காவடி, புஷ்பக் காவடி  , மச்சக் காவடி..மயில் காவடி, பறவை காவடி, சர்ப்ப காவடி,தீர்த்தக் காவடி என...இவற்றை நாம் கண்ணுறும் நாள் நோக்கி ஏங்குகின்றோம் என்பதே உண்மை.

மாய உலகில் எந்த நிகழ்வும் சாதனை அல்ல
முருகா உன்னை அடைவதே சாதனை ஆகும்

அப்பப்பா..இது தான் இந்த பாடலின் சூட்சுமக் கருத்தும் ஆகும். சித்தர்கள் மாய உலகை வெறுப்பவர்கள். மாய வித்தைக்கு அப்பாற்பட்டவர்கள். முருகனும் அதனைத் தான் விரும்புகின்றார்.அவரை அடைவதே சாதனை ஆகும்.



ஆதியும் நீயே ..அந்தமும் நீயே 

என்று தொடங்கிய அடுத்த பாடல். சக்தியின் மைந்தன்.சித்தர்களின் தலைவனைப் பற்றி உணர்த்தும் பாடல். சுப்ரமணியம் எனும் தத்துவம் தான் நம் உடலில் உள்ள தத்துவம்.இது முருகனை உணர்த்தும் தத்துவம் ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் தத்துவமும் ஆகும். வேல் பற்றி தொட்டுக் காட்டியது இப்பாடலின் மகத்துவம் உணர்த்துகின்றது.
முருக தத்துவம் மட்டுமல்ல..தமிழ் தத்துவமும் சேர்ந்தது மகிழ்வாய் இருந்தது. ஆதி,அந்தம்,அழகு,அறிவு,தேவர்,மூவர், வான்,மண் என அனைத்தும் முருகனே என உண்மையை உடைத்தது நிதர்சனம்.

அடுத்த பாடல் - பிரணவத்தின் மூலவா...

நம் மனதில் வீற்றிருந்து வாசம் செய்யும் முருகனை அழைக்கும் பாடல். பேசும் முருகனை இந்த பாடலில் உணர முடிகின்றது. மயில், சரவண பொய்கை, என அனைத்தும் முருகன்..முருகனே..என ஒலிக்கும் பாடல். கந்த கோட்டம் சென்றால் கனவுகள் மெய்ப்படும் என்ற வரி கேட்கும் போது மெய் மறந்தது உண்மை. முத்துக்குமாரனை, அழகனை ஆராதிக்கும் பாடல் இது.



முருகா சரணம் 

என்று அடுத்த பாடல் தொடங்கியது..எத்துணை சரணங்கள்..அனைத்தும் உமக்கே முருகப் பெருமானே.

முருகா சரணம்
அழகா சரணம்
கந்தா சரணம்
கதிர்வேலா சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்
குகனே சரணம்
விமலா சரணம்

கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தான் இருக்கின்றது. சுப்பையா தெய்வத்தை  நாளெல்லாம் அழைத்துக் கொண்டே இருக்கலாம் என்பது தான் இந்த பாடலின் தெளிவு. சரணம் மட்டும் சொன்னால் போதுமா? சரணாகதி அடைய வேண்டாமா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்பும் பாடல். சரணாகதி அடைய சரணம் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று ஆன்மிகத்தின் முதல் படியையும் நமக்கு சொல்லாமல் சொல்லி சென்றது இந்தப் பாடல்.




முருகா முருகா  

என அழைக்கும் அடுத்த பாடல். குருவாய் முருகனை அழைக்கும் பாடல். முருகா முருகா என அனுதினமும் தொழ வைக்கும் பாடல். நினைவில் தொழுதால் போதுமா? கனவிலும் முருகா முருகா என்று அழைக்க செய்யும் பாடல். கனவிலும் வேல் மறவேன் என்று நம்மை இட்டு செல்வதே இந்தப் பாடலின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவு. ஓதிமலை ஆண்டவனை அழைத்த பாடல்.

உலகில் உன்னைப்போல் எவருமில்லை
உன்னை வணங்குவதே அறிவின் எல்லை

என்று கேட்டதும் முருக தத்துவம் தெரிந்தது. திருப்போரூர் கந்தனையும், அருளாளர்களையும் அழைத்தத்து இந்த பாடலில் மட்டும் தான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதர் கூறியது இங்கே பூரணமாய் வெளிப்பட்டது.



அடுத்ததாக "ஓம் எனும் ரகசியம்"

பாடல் தொடங்கியது.அனைவரும் சித்தர் மார்க்கத்தில் 8 ,2 என்று கேட்டு வருகின்றார்கள். இது என்ன? என்பதை தெளிவாக சொல்கின்றது இந்தப்பாடல்.

எட்டிரண்டு பத்தாகும்
எட்டிரண்டு பத்தாகும்  என ஆன்மிகத்தின் உச்சத்தை சொன்னது நமக்கு சிலிர்ப்பை தருகின்றது. வாசியும் இங்கே கண்கூடாக சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் இந்தப் பாடலில் வெட்டவெளிச்சம். இதற்கு மேல் நாமும் இங்கே சொல்வது சரிப்படாது.தேவைப்படுபவர்கள் அருள்தட்டைப் பெற்று முருகனைப் பற்றுங்கள்.

மொத்தம் 9 பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில். இந்த முருகன் பாடல்கள் நமக்கு, நம் உயிருக்கு ஜீவ அமிர்தம் ஊட்டுகின்றது என்பதே உண்மை. வாய்ப்புள்ள அன்பர்கள் பாடல்கள் கேட்டு,அருள் பெறுங்கள்.

தொடக்கத்தில் கூறியது போல், "என்ன புண்ணியம் செய்து விட்டேன்" என்றே நமக்கு மீண்டும் தோன்றியது.

மேலும் விபரங்களுக்கு:







மீண்டு அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

ஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment