Subscribe

BREAKING NEWS

29 June 2018

ஸ்ரீ சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் தியான மண்டபம் திருப்பணி பத்திரிக்கை


அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.


அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.



திருவாரூரில் பிறந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி 
திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி 

என்று நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை நாம் கண்ணால் கண்டு, மனத்தால் நடந்து, கிடந்து அருள் பெற வேண்டும். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இத்தகு சிறப்புமிகு திருஅண்ணாமலையில் சற்குரு சாந்தானந்த சுவாமிகளுக்கு அன்னதானத்துடன் கூடிய ஓர் தியான மண்டபம் கட்ட ,சென்னையை சேர்ந்த சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் முயற்சி செய்து வருகின்றார்கள். இந்த தியான மண்டபம் கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை ஆலயத்திற்கு அருகிலும், வருணலிங்கம்,வாயு லிங்கத்திற்கு நடுவிலும், விபூதி பாபா இருக்கின்ற ஓம் நகரில் உருவாக்கப்பட உள்ளது.

சற்குரு சாந்தானந்த சுவாமிகள் தியான மண்டபத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மஹா பெரியவா, சாந்தானந்த சுவாமிகள் திரு உருவங்களும், ஏனைய மகான்களின் அருள்படங்களும் அமைக்க உள்ளார்கள். தாங்கும் அறைகளும், ஆன்மிக நூலகமும் திறக்க உள்ளார்கள். 

ஆகவே, ஆன்மிக பெரியோர்கள் அனைவரும் இந்த திருப்பணியில் பங்கு கொண்டு,குருவருளும்,திருவருளும் பெறும்படி சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் வேண்டுகின்றோம்.


அன்பர்கள் தங்களால் மனமுவந்து அளிக்கும் உதவியை ஸ்ரீ சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் என்ற பெயருக்கு DD/Cheque மூலம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விபரங்களுக்கு  மேலே உள்ள இணைப்பை பார்க்கவும்.

மேலதிக விபரங்களுக்கு : சாந்தானந்ததாசன் K. ராம்மோகன் - 8148000910 & 9444200910

- மீண்டும் அடுத்த பதிவில்  இணைவோம்.


No comments:

Post a Comment