Subscribe

BREAKING NEWS

14 August 2018

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம்

அனைவருக்கும் வணக்கம்.

நாரயணவனம் ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமின்  116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் 15.08.2018,புதன் கிழமை (நாளை) அன்று நடைபெற உள்ளது.ஶ்ரீசுரைக்காய் சுவாமிகள் வயதை யாரும் அறிந்தவர்  கிடையாது சுவாமிகள் வாழையடி வாழையாக ஒரு சித்தர்  பரம்பரையையே உருவாக்கினார். சித்தரின் அருளால் சட்டிப்பரதேசி, குமரகுப்பம் சுவாமிகள்,மடுகு சுவாமிகள், முந்தப் பரதேசி, மூடாலம்மா, மங்கம்மா, நந்தனார்  சுவாமி போன்ற மகான்கள் உருவாகி மிளிர்ந்துள்ளனர்.சுரைக்காய் சுவாமிகளை சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர்  பகுதிகளில் தாத்தா என்று செல்லமாகவும்,உரிமையாகவும் அழைக்கிறார்கள். சுரைக்காய் தாத்தா பயன்படுத்திய சுரைக்குடுவைகள்மற்ற பொருட்கள் இனறும் ஜீவ சமாதியில் உள்ளது. 08.08.1902 ம் ஆண்டு ஆடி மாதம் 24ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்லபஞ்சமி(கருடபஞ்சமி) ஹஸ்த நட்சத்திரம் பகல் 12 மணிக்கு பரிபூரணமடைந்தார். இது சிறு குறிப்பே. நாம் நம் தலத்தில் அளித்த பதிவை மீண்டும் இங்கே தருகின்றோம்.

இவரோட பேரு ராமசாமி. விருதுநகர் மாவட்டத்துல இருக்கற, கழுகுமலைல இருந்து சங்கரன் கோயில் போற வழில, "வாகைக்குளம்'ங்கிற ஊர்ல பிறந்தவர். தன்னோட சுரைக்குடுக்கையில் இருந்து அவர் எடுத்துக் கொடுக்கற எதுவும் மருந்து தான். நிறைய மூலிகைகள் பத்தித் தெரிஞ்சவர். சுரைக்காயுடன் காணப்பட்டதால் சுரைக்காய் ஸ்வாமிகள்னு மக்கள் சொல்லிட்டாங்க.'



"சுரைக்காய் ஸ்வாமிகள் தலையைச் சுத்தி முண்டாசு மாதிரி கட்டியிருப்பார். சில நேரங்கள்ல நெத்தியில் திருமண் இட்டுக் கொண்டிருப்பார். சிலசமயம் விபூதி இருக்கும். சமயத்துல எதுவுமே இருக்காது. ஆனா கையிலே ஒரு சுரைக்குடுக்கை; ஒரு கம்பும் வைச்சிருப்பார்
தமிழக எல்லை, ஆந்திர எல்லையோரத்தில் புத்தூர் என்கிற மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சுரைக்காய்ச் சித்தர்.நீண்டு அடர்ந்த சடைமுடியோடும் சிறிய கோவணத்துடனும், தீட்சண்யமான பார்வையோடும் காணப்பட்ட சித்தருக்கு….

சுரைக்காய்தான் பிரதானப் பொருள். அவர் சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவது எல்லாம் காய்ந்த சுரைக்காய் குடுவையில்தான்முதலில் இவர் பித்துப் பிடித்தவர் போல் புத்தூர், திருப்பதி, நகரி போன்ற இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவரின் அமானுஷ்ய சக்தியும்,மூலிகை மருத்துவர் என்பதும் தெரிய வரபுத்தூர் மலையில் குடில் அமைத்துக்கொண்டு தன்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு மூலிகை சாற்றையும், திருநீறு கலந்த தீர்த்தத்தையும் சுரைக்காய்க்  குடுவையில் தருவார். அதனால்தான் அவருக்கு சுரைக்காய்ச் சித்தர் என்ற பெயர் வந்திருக்கிறது. 

இதோ நம்மை வரவேற்கும் உயிர்நிலைக்கோயில் முழுதும் சுரைக்காய்கள் தான்.







இங்கு  அன்றாடம் வழிபாடு  நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கினர் நாள்தோறும் பல தொலைவிடங்களில் இருந்து வந்து வழிபட்டு அவர் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த இடத்தில் தியானம் செய்கிறபோது பிற இடங்களில் ஏற்படாத ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கைகூடுகிறது. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கட்டுகின்றனர்.இங்கு சுரைக்காய் வாங்கி வந்து, மனதில் வேண்டி சமர்ப்பித்தால், நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டுமரங்களை வெட்டிவந்து கொளுத்தி குளிர்காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயைச் சூழ்ந்து உட்காருவர். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொளுத்தப்படுகின்றன. மக்கள் உடல் நோயை தீர்க்கும் வெற்றியைத் தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் தடவிக் கொள்கின்றனர். பிள்ளை இல்லாதோர் வேண்டி பிள்ளை பிறந்தால் பிள்ளையின் எடைக்கு எடை காசு தருகின்றனர். பேய்பிசாசு பிடித்தோர் பில்லிசூனிய பாதிப்புடையோர் அதிலிருந்து விடுபட இங்குவருகின்றனர். திருமணத் தடை, குடும்பச்சிக்கல் நீங்க வேண்டியும் மக்கள் சித்தர் சமாதிக்கு வருகின்றனர். இக்கோவில் தனியாரால் பேணப்படுகிறது. காலை 6 முதல்12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் கோவில் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதால் நாள் முழுதும் கோவில் திறந்திருக்கும். அன்று பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நண்பகலிலும் இரவிலும் அன்னதானம் உண்டு. இங்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக பேருந்து போக்குவரத்து உள்ளது.                   
    











நாம் அன்று இரவில் தரிசனத்திற்காக சென்றிருந்தோம். அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தோம். மற்றுமொரு அமாவாசை அல்லது பௌர்ணமி நாளில் சென்று சுரைக்காய் சித்தரை வணங்கிட குருவருள் துணை புரியட்டும்.



ஸ்ரீமத் சுரக்காய சுவாமியே நமஹ

மீள்பதிவாக:-

வாழ்க வளமுடன்! என்ற மந்திரச் சொல் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_14.html

சித்த மருத்துவம் - கலிக்கம் மற்றும் நசியம் - http://tut-temple.blogspot.com/2017/05/blog-post_36.html

ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

No comments:

Post a Comment