அன்பார்ந்த அடியார் பெருமக்களே...
இன்றைய பதிவில் முருகனைப் பற்றி சிறிது அறிய இருக்கின்றோம்.முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடி கிருத்திகை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறும். ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களான வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்தூர்,வல்லக்கோட்டை ஆகிய ஆலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேல் ஆலயங்களில் கூடும் தினம்.”திருத்தணி முருகனுக்கு அரோஹரா’ என்ற கோஷம் வானைப் பிளக்கும். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள்.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் என்று அகத்தியர் தன் ஜீவ நாடியில் சொல்லிய
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு வருகின்ற ஆடிக் கிருத்திகை 05/07/2018 அன்று காலை முதல் பூசை,அபிஷேகம்,அன்னம்பாலிப்பு. மகா தீபாராதனை, திருவீதியுலா என ஆடிக் கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு அழைப்பித்தழைப் பார்க்கவும்.
வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்துகொண்டு குருவருளும்,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.
மீள்பதிவாக:-
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html
திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html
சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html
முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html
முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html
நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html
வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html
No comments:
Post a Comment