Subscribe

BREAKING NEWS

19 December 2018

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018)

அன்பர்களுக்கு வணக்கம்.


தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானின் அவதார திருநாளை சிறப்பாக கொண்டாட இறையருள் கூட்டுவித்துள்ளது. அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளம் சார்பில் அழைக்கின்றோம்.

ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.




ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.

இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.

நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று  ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி. 

சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் ஜெயந்தி காண கண் கோடி வேண்டும். இங்கே ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது. நம் தலத்தில் ஏற்கனவே பதிவு அளித்தோம். சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும் பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன் வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக நடைபெறும். அந்த தலங்களில் இதுவும் ஒன்று ஆகும். 



இந்த  வைபவம் வரும் 26/12/2018 மார்கழி  மாதம் 10- ஆம் நாள் புதன்கிழமை  காலை 9:00 மணி முதல்  தூசி கிராமத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் வந்து  கண்டுகளித்து எல்லா வளமும் தடையில்லாமல் கிடைத்திட வாழ்வில் நீங்கா புகழ்பெற ஐயனின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம். 

மேலும் விபரங்களுக்கு மேலே இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.

நாம் இன்னும் நேரில் சென்று தரிசனம் பெறவில்லை. இதே போல் தான் பனப்பாக்கம் அகத்தியர் கோயிலும் கடந்த இரண்டாண்டுகளாக நேரில் தரிசனம் செய்யாது இருந்தோம். இதோ இரண்டு மாதங்களுக்கு முன்னர் நம்மை மட்டும் அல்ல, நம் குழுவையும் அழைத்து உழவாரப் பணி கொடுத்து நம்மை திக்கு முக்காட செய்து விட்டார். நம் கையில் ஒன்றும் இல்லை. அனைத்தும் குருவின் வசம் தான். இதே போல் தூசி அகத்தியர் தரிசனம் பெற காத்திருக்கின்றோம். 


- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


மீள்பதிவாக:-

தூசி கிராமத்தில் அகத்திய பெருமானுக்கு தெய்வீக விவாஹ விழா - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_4.html 

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment