Subscribe

BREAKING NEWS

01 December 2017

அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)

திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின் கொண்டாட்டங்களின் நாம் திளைத்து வருகின்றோம். கிரிவலம், திருஅண்ணாமலை திருக்கோயில் , தீபத் திருவிழாவின் முதல் இரண்டு நாட்களின் கோலாகலங்கள் இவற்றை இதற்கு முந்தைய பதிவுகளின் மூலம் அறிந்தோம்.இதோ நாளை இந்நேரம் இன்னும் நாம் சிவத்தின் அருளில் காப்பாக இருப்போம். இன்றைய பதிவின் மூலம் மேலும் தரிசனக் காட்சிகளை இங்கே காண்போம்.

கண்களுக்கு விருந்து கொடுக்கும் முன்னர், செவிகளுக்கு உணவு கொடுப்போமா? இதோ

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஅண்ணாமலை தேவாரத் திருப்பதிகம் படித்து இன்புறுவோம்.

1.69 திருஅண்ணாமலை



பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

743பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.1
744மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.
1.69.2
745ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.3
746இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.4
747உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.5
748எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.6
749வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.7
750மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
1.69.8
751தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.9
752தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.
1.69.10
753அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.
1.69.11 


திருச்சிற்றம்பலம் !


இதோ இனி கண்களுக்கு விருந்து ஆரம்பம்.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா  பஞ்சமூர்த்திகள் மூன்றாம் நாள் இரவு அலங்காரம்











நான்காம் நாள் காலை பல்லக்கு வாகனத்தில் விநாயகர் மற்றும் தங்கநாக வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதீ பவனி   (26/11/2017)






பஞ்ச பூத நாயகனுக்கு ஐந்தாம் நாள் திருவிழா

விநாயகர்- வெள்ளி மூஷிக வாகனத்திலும்
முருகன்- வெள்ளி மயில் வாகனத்திலும்
அண்ணாமலையார்- வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும் உண்ணாமுலையம்மன்- வெள்ளி ரிஷப வாகனத்திலும்
சண்டிகேஷ்வரர்-சிறிய வெள்ளி ரிஷப  வாகனத்திலும் மாடவீதி பவனி (27/11/2017)











அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2017 பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள் இரவு வெள்ளி ரதம் (28/11/2017) 


















எட்டாம் நாள் காலை முஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் சிறிய குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதி பவனி  (30/11/2017) வருடத்தில் ஒரு முறை மட்டுமே ராஜகோபுரம் வழியாக வருபவர் அண்ணாமலையார் பிட்சாடனர் வடிவில்.  ஓம் நமசிவாய.




அனைவரும் கண்டு களித்து இன்புற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம், காண காண நம் கண்களுக்குள் அடங்காதவன் அவன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி மீண்டும் அடுத்த பதிவில்


முந்தைய பதிவுகளுக்கு :-

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html


ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html
சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment