Subscribe

BREAKING NEWS

13 December 2017

செண்பகப்பொழில் தாயே போற்றி !



செண்பகப்பொழில் 

பேரைக்கேட்டாலே சும்மா இனிக்குதில்ல..ஆம்..இதுதான் தமிழின் அழகு. இது எந்த ஊர் சென்று தெரிந்து விட்டதா? வேறென்ன ? நம் தென்காசியின் மற்றுமொரு பெயர்தான் செண்பகப்பொழில்.சோலைகளும்,வனங்களும்,பசுமைகளும் போர்த்திய ஊர் என்பதால் தான் செண்பகப்பொழில் என்று பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கின்றோம். இது போல் பல பெயர்கள் தென்காசிக்கு உண்டு. இது போன்ற செய்திகளை நாம் அறிந்து, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.

முந்தைய பதிவுகளில் இது போல் பனப்பாக்கத்தின் பெயரை அறிந்தோம். விலாச காஞ்சி,திருத்தலபுரி,பனசையம்பதி,மயூரபுரி,புலியூர்,இந்திரபுரி,பிரம்மபுரி,கய்யாணமாவூர், பாலாற்றின்வடகரை என்று. அதே போல் தேனியில் உள்ள சின்னமனுர் அரிகேசரிநல்லூர் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இது போன்ற தொன்மையின் சிறப்பு மூலம் தமிழின் உயர்வும் இலங்கும்.

இன்றைய பதிவில் தென்காசித் தேவரை சந்திக்க உள்ளோம். அதற்கு முன்பாக தென்காசி பற்றி சில செய்திகள் அறிவோம். 


தென்காசியும் பல பெயர்களால் வழங்கப் பட்டு வந்துள்ளது. இந்த வகையில் தென்காசியும் பல பெயர்களை உள்ளடக்கியது. சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவ நல்லூர், ஆனந்தக் கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர், குயின்குடி, சித்தாவாசம், செண்பகப் பொழில், சிவமணவூர், சித்திர மூலத்தானம், மயிலைக்குடி, கேசிகைஎன பட்டியல் நீளுகின்றது. இதில் நமக்குப் பிடித்த பெயர் செண்பகப்பொழில். பேரே ஊரின் பெருமை சொல்கின்றது. 

முதலில் கோயிலின் தல புராணம் பற்றி சிறிதாக. தற்போது தான் நாம் கதை வடிவிலும், உரை நடை வடிவிலும் தல புராணம் படித்து வருகின்றோம். ஆனால் பன்னெடுங் காலத்தில் இப்படி உரைநடை வடிவில் இவை அறியப் படவில்லை. மாறாக செய்யுள் வடிவில், பாக்களாக பல படலங்களில் இவை இருந்திருக்கின்றன. பாடல் வடிவில் இப்போது நம்மால் உணர சற்று கடினம் தான். எனவே தான் தற்போது நாம் உரைநடை, கதை வடிவில் இவற்றை காண்கின்றோம். ஏதோ கதை தானே என்று எண்ணி அலட்சியப் படுத்தாது, பொருள் புரிந்து திருக்கோயில் மதிப்பை உணர்வோம். தென்காசி கோயிலும் பல படலங்களில் தல புராணத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

கண்ணைக் கவரும் சிற்பங்கள், இரட்டை சிற்பங்களாக இரு வீரபத்திரர்கள், இரு தாண்டவ மூர்த்திகள், மன்மதன்,ரதி தேவி என்று கலைச் சிற்பங்கள், திருமால் , காளி தேவி என தனி அழகு சிற்பங்கள், செண்பக மரம், பலா மரம் என இரண்டு தல மரங்கள் என இந்த திருத்தலம் சிறப்பை கொண்டு விளங்குகின்றது.





 
 கோபுர தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இதோ சிறு சிறு குறிப்புகளாக 

சுவாமி  : அருள்மிகு காசிவிசுவநாதர் 
அம்பாள்: அருள் தரும் உலகம்மை 
தீர்த்தம் : சித்திர கங்கை, அன்னபூரணி தீர்த்தம், காசிதீர்த்தம் 
தல விருட்சம்: செண்பக மரம்
திருப்பூசனைகள்: ஆறு காலப் பூசை 
 


ஆவணி மூலத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் , மாசி மகத் திருவிழா இங்கு விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 சுருக்கமாக தல புராணம், முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.

இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்.



இனிவரும் பதிவுகளில் தென்காசி தேவரையும், தல புராணத்தையும் இன்னும் சற்று விரிவாக காண, எம் பெருமானிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு;-

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html 
  
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html 
 
அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html
 
  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html


ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html
சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

 

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html


வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html
 
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

 


 

No comments:

Post a Comment