ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
என்ற வள்ளலாரின் அருள்வாக்கோடு இப்பதிவைத் தொடர்வோம். சன்மார்க்கம் ஒன்றையே தம் குறிக்கோளாய்க் கொண்டு மருதேரியில் பிருகு மகரிஷி அருள் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கே ஜோதி வழிபாடு ஒன்றே பிரசித்தம். நாம் ஏற்கனவே மருதேரி அனுபவங்களை பகிர்ந்துள்ளோம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர வழிபாடு இங்கே நடைபெறும். அன்றைய நாளில் நவகோடி சித்தர்களில் யாரேனும் வந்து அருள் புரிவார்கள்.
சித்தர்கள் ஆசி நேரில் இங்கே கிடைக்காது, உருவ வழிபாடு கிடையாது. ஜோதியை மனதுள் நினைத்து, மனதினை செம்மைப் படுத்த, சித்தர்களை உணரலாம். மேலும் அன்றைய நாளில் குருவின் கருணையில் சித்த மருந்துகளை சூரணம்,லேகியம் போன்ற வடிவில் வழங்குகின்றார்கள். இது மட்டுமின்றி சித்தர்கள் போற்றிய வாழ்வியலை போதிக்க ஆசிரமம் முனைந்து செயல்பட்டு வருகின்றது.
தமிழ் மாத கடைசி ஞாயிறு அன்று, ரவி வழிபாடு யாகத்துடன் நடைபெறுகின்றது. இயற்கையை இன்று யார் வழிபடுகிறார்கள்? இதோ. நம் மருதேரி ஆசிரமம் இயற்கை வழிபாட்டினை - ரவி வழிபாடாக செய்து வருகின்றது.
இத்தகு சீரும், சிறப்புமிக்க மருதேரியில் வருகின்ற 31/12/2017 அன்று அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அகண்ட ஜோதி தரிசனத்தோடு, உலக மக்கள் அனைவரும் உடல் நலம், மன வளம் பெற்று வாழ்ந்திட சர்வரோக நிவாரண மக யஃனம் நடைபெற உள்ளது.இந்த யஃனம் பிருகு மகரிஷியாலும் , மரிஷீ, காஷ்யபர் மற்றும் அத்திரி குருக்களின் கருணையாலும், ஆசியாலும் நடைபெற உள்ளது. உலகம் உய்வு பெறவும், சன்மார்க்கம் ஓங்கவும் நடைபெறும் இந்த யக்ஞத்தில் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும்.

முந்தைய பதிவுகளுக்கு:-
No comments:
Post a Comment