Subscribe

BREAKING NEWS

29 December 2017

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு

அன்பார்ந்த TUT தள வாசகர்களே. 

இதோ 2017 ஆம் ஆண்டின் நிறைவில் இருக்கின்றோம். பிறக்கும் 2018 ஆம் ஆண்டு அனைவருக்கும் நலத்தையும், வளத்தையும் கொடுக்க நாம் பிரார்த்திக்கின்றோம். இந்த ஆண்டில் அகத்தியர் வனம் மலேஷியா குழுவுடன் இணைந்து கடந்த 6 மாதங்களாக அன்னசேவை செய்து வருகின்றோம். TUT தளத்தின் ஆரம்பமே அன்னதானம் தான். சுமார் 10 -15 எலுமிச்சை சாத பொட்டலங்கள் தயாரித்து, நண்பர் திரு.தமிழ்மணியின் வீட்டில் , கர்த்தரிடம் பிரார்த்தனை செய்து ஆரம்பித்த தொண்டு, இன்று மற்ற குழுக்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது. பிள்ளையார் சுழி இட்டு துவக்கி வைத்து, நம்முடன் இணைந்து பயணித்து வரும் திரு.தமிழ்மணி  மற்றும் அவர் தம் அன்பு குடும்பத்தார்க்கு நன்றியைத் தெரிவிப்பதில் TUT குழு மகிழ்ச்சி கொள்கின்றது.

 இதே போல், முதலில் கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் மட்டுமே செய்து கொண்டிருந்த அன்னசேவை, இதோ அகத்தியர் வனம் மலேஷியா குழு இணைந்தமையால் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செய்து வருகின்றோம். சென்ற அன்னதானம் சைதாப்பேட்டை பகுதிகளில் நடைபெற்றது. இதனைப் பார்க்கும் போது உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வாக்கியம் நினைவிற்கு வருகின்றது. குருவின் ஆசியினால், வருகின்ற 2018 ஜனவரி மாத அன்னதானம் திருஅண்ணாமலையில் உள்ள சாதுக்களுக்கு வழங்கும்படி நிகழ்வு உறுதியாகி உள்ளது. 2018 ஆரம்பமே அசத்தலோடும், அட்டகாசத்தோடும் TUT ஆரம்பிக்க உள்ளது. இந்த திருஅண்ணாமலை அன்னதானம் செய்ய நாம், மிகப் பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அன்னதானம் பற்றி சில சிந்தனைகள் செய்து விட்டு, அறிவிப்பை இறுதியில் வெளியிடுகின்றோம்.

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... என்று கேட்டிருக்கின்றோம்.இது எங்கே உள்ளது ?


ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!
நூல்: மணிமேகலை
பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்
சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை
மணிமேகலையே,
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!
 இவற்றைப் படிக்கும் போது, மணிமேகலை,சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெருங்காப்பியங்கள் படிக்கத் தோன்றுகின்றது. இதோ சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி உங்களுக்காக - ஆக்கத்தில் உதவி - தமிழ் பிராமிண் இணைய தளம்.

மணிமேகலை காப்பியம் படைத்த புலவரே, பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று அவ்வையார் கூறுகிறாரே!
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)


 
அட,உங்கள் கருத்தும் அதுதானா ! சோழ மன்னன் காந்தமன் வேண்டியதால் அகத்தியர் தனது தண்ணீர் கலசத்தைக் கவிழ்க்கவும் காவிரி உற்பத்தியானதாமே!
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)
 
காவிரி நதி ஜீவ நதியா?
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

 
அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் (மணி 25-228)

 

Food, Shelter and clothing are three essential things என்று இன்று எல்லோரும் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன பேரறிஞரே, பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று காந்தன் என்னும் சோழனை அகத்தியர் ஒளிந்துகொள்ளச் சொன்னாரா?
மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்
தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்
கன்னி ஏவலிற் காந்த மன்னவன்
அமர முனிவன் அகத்தியன் ரனாது
துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25
   
உங்கள் காலத்தில் யவனர்களும் தமிழர்களுடன் வேலை செய்தார்களா?
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி





 
செல்வத்தின் பயனே ஈதல் என்று புலவர்கள் கூறுகின்றனரே? அதிலும் தானத்தில் சிறந்தது அன்ன தானமா?
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)
 

அருமையான வாசகம். சரியான அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?
கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக (மணி 7-8)
 
தொல்காப்பியர் ஆறு அறிவு படைத்த மனிதன் பற்றிக் கூறுகிறார். நீங்களும் உயிர்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறீர்களா?
பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்
தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

 
கோவலன் கொலையுண்டவுடன் மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக (2-64)

 
அகத்திய முனிவன் வேண்டியதால் சோழ மன்னன் 28 நாள் இந்திர விழாவை பூம்புகாரில் ஏற்பாடு செய்தது உண்மைதானா?
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று
மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோளெடுத்த
நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 
அமுத சுரபி என்னும் அற்புத கலசத்தால் ஏழை எளியவர்களுக்கு உணவளித்த மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?
காணார், கேளார், கால் முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)
அற்புதம், அற்புதம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கே கற்பித்தான் போலும்!
  

அப்பப்பா..நம்  கலாச்சாரம் என்பது அறிவியலும் உளவியலும் ஞானமும் கலந்த ஒன்றாகும். அதை புறக்கணித்து விட்டு பிற கலாசாரத்தை போற்றி புகழ்வது அறிவுடைமையாகாது என்றே நமக்குத் தோன்றுகின்றது.




மெய் அன்பர்களே.

அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து  வருகின்ற 1/1/2018 திங்கள் கிழமை அன்று காலை  சுமார் 7 மணி அளவிலும் & மாலை சுமார் 6 மணி அளவிலும்   திருவண்ணாமலையில்  உள்ள ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில், ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் மூலம் 
சாதுக்களுக்கு  அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில் உதவும்படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.in


முந்தைய பதிவுகளுக்கு :-



 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html



 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html


 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html


போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html





No comments:

Post a Comment