Saturday, December 30, 2017

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

என்கிற முதுமொழி நாம் கேட்டிருப்போம்.இந்த பதிவிலும் பல மூத்தோர் மொழிகளை இயற்கை மருத்துவம் என்ற புத்தகத்தில் இருந்து இங்கே தொகுத்து தருகின்றோம். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது பற்றி ஒரு குட்டிக் கதை பார்த்து விட்டு, இனிக்கும் அமிர்தத்தை உண்போம்.


இரண்டு நாடுகள் சிவகிரி, சக்திகிரி என்று இருந்தன.( இப்படி நாடு இருந்ததா என்று தெரியவில்லை. நாம் கற்பனையில் இங்கே வைத்துள்ளோம்.) சிவகிரியை சக்திமாறனும், சக்திகிரியை சிவமாறனும் ஆண்டு வந்தார்கள். ஆனால் சக்திகிரியை ஆண்ட சிவமாறனுக்கு பக்கத்து நாடான சிவகிரியை பிடிக்க ஆசை.

பல முறை படையெடுத்தான். ஆனால் சக்திமாறனை வெல்ல முடியாமல் தோற்று ஓடுவதே வழக்கமாகி விட்டது. ஆனால் ஒரு முறை படை திரட்டி சென்று சிவகிரியை வென்று விட்டான்.

இப்போது சிவகிரியை ஆண்ட மன்னன் சக்திமாறன் தலைமறைவாகி விட்டான்.ரியான  பயிற்சியும்  படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி சக்திகிரி மீது போரிட்டான்.எப்படியாவது   தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சக்திமாறன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.                      


 ஒருநாள்  களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்."பல  முறை போராடியும்  சிவமாறனை  வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே "என்று    நடந்தபடி சிந்தித்தவனுக்கு  காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.

 ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து  எழுபது வயதுள்ள பாட்டி  வெளியே வந்தார்.அவரிடம் "அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால்  மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்."என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.


"ஐயோ பாவம்! கொஞ்சம் பொறுப்பா
வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.
அதையே தருகிறேன்.உண்டு  பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில்  சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
              

நல்ல பசியோடிருந்த சக்திமாறன்  அதை வாங்கி தன்  ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி  அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயில்  வைத்துக் கொண்டான்.
 இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்"ஏனப்பா நீ களி  தின்பது எங்கள் மன்னன் சக்கதிமாறன்  படையெடுப்பது போல் இருக்கிறது."
 

இதைக் கேட்டு சக்திமாறன்  ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.

" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?"என்றாள்  சிரித்தவாறே.
              
"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?" என்றான் சக்திமாறன்.

           
  "புரியவில்லையா?, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்."என்றாள்  புன்னகையுடன் பாட்டி


  பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சக்திமாறன்  உடனே புறப்பட்டான்.         
"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்,வருகிறேன்." என்று கூறி
அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.
ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த  சக்திமாறன் விரைவில் சிவமாறனின்  தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன்
நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
 

 உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.
இப்போது புரிகின்றதா?
மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.

சரி. இனி நாம் கீழேக் கொடுக்கும் அமிர்தத்தை அருந்துங்கள். வாழ்வில் கடைபிடியுங்கள்.ஆத்திச்சூடி ...அறம் செய்ய விரும்பு என்பதெல்லாம் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்போம். காலங்கள் மாறலாம். ஆனால் தர்மம் மாறாது, தர்மத்தை,நீதியை சொல்லித் தர வேண்டும் எனவே ஆரம்பப் பள்ளியில் இவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அவற்றை அள்ள மறந்து விட்டோம்.இது போன்ற  மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் கீழே.

- உள்ளுணர்விற்கே சிறப்பு , சிறிதெனினும் இனிது 
- இந்தியா இறைப்பித்து பிடித்த நாடு, இறைப்பித்து என்பது நமக்கு நன்மதிப்பு 
- எல்லாவற்றிற்கும் மூலம் நம்பிக்கை, நம்பிக்கையில் வலிமை உள்ளது 
- பாரதத்தின் ஆன்மா தோற்கவில்லை 
- காட்சியும், நினைவும் சாதனங்கள் 
- இறைநாமம் நாவிலும்,இதயத்திலும் வேண்டும் 
- ஒவ்வொரு மூச்சிலும் இறைநாமம் வேண்டும் 
- ஜபம்,தவம்,கர்மம் அனைத்திலும் பக்தி வேண்டும் 
- ஒழுக்கத்தை விற்று செல்வம் தேட வேண்டாம் 
- உன் சிந்தனையே உன்னை நிலைநிறுத்தும் தூண் 
- அழகு கண்களையும்,ஒழுக்கம் உள்ளத்தையும் குறிக்கும் 
- காலமும்,நேரமும் யார்க்குக்காகவும் காத்திருப்பதில்லை 
- நல்ல பழமொழி எந்நேரமும் பயனளிக்கும் 
- வணங்க ஆரம்பிக்கும் போதே, வளர ஆரம்பிக்கின்றோம் 
- நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கரையைப் போக்கும் 
- இரக்கம் இல்லாதவன், இருப்பினும் கொடியவன் ஆவான் 
- அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும் 
- உண்மையை சொன்னவன் , ஊருக்கு பொல்லாதவன் 
- முதுமை எல்லோருக்கும் உண்டு, அதை மதியுங்கள்.
-உளறிக் கெடுப்பவனை விட ஊமையே சிறந்தவன் 
- உண்மையான தத்துவம் என்பது விதைகள் 
- அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும் 
- ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயும் 
- சத்தியமே கடவுள் 
- தாய்மையின் மகத்துவம் தாய்ப்பால் 
- உண்ணாநோன்பில் உயிராற்றல் கூடும் 
- விலங்குணவு கொள்வோர் புறவினத்தார் 
- பழிவாங்கும் வன்செயலுக்கு இடங்கொடாதீர் 
- சினம் கொண்டவன் சிகரம் தொட்டதில்லை 
- கபாலபதி ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும் 
- இடுப்புக்குளியல் மூல நோயகற்றும் 
- உடம்பார் அழிவின்,உயிரார் அழிவர் 
- இறை எண்ணத்தில் இறைவனைக் காண்போம் 
- உயர் நெறிப்படி வாழ்வோம் 
- அன்பின் ஆற்றல் அகிலம் காக்கும் 
- எள் உருண்டை,எள் சட்டினி,முளைகட்டிய எள் உண்போம் 
- அளவான உணவே அருமை 
- அன்பே சிவம், சிவமே அன்பு 
- குழந்தையின் ஆனந்தத்தைப்  போல் மலர்வது அன்பு 
- அன்பிற்கு உரிய மதிப்பளிக்க தவறி விட்டோம் 
- அன்பை வழங்கவும்,வாங்கவும் கற்க வேண்டும் 
- அன்பே அனைவரையும் கவர் விரும்புகின்றது 
- இதுவும் கடந்து போகும் என எண்ணிக் கொள்வோம் 
- அன்பின் அணுகுண்டை உண்டாக்க வேண்டும் 
- இனியவை பேசி இணக்கம் கொள்வோம் 
- அன்பே இறைவன், இறையே அன்பு 
- மருத்துவ மனையில் ஆத்ம வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை 
- இல்லத்தின் சேவையில் ஆத்ம வளர்ச்சி உண்டு 
- கோபமே பாவங்களுக்கெல்லாம் மூலம் 
- பொறுமை கடலினும் பெரிது 
- ஒருவன் புணர்வதல்ல விபசாரம்; மனதில் வாஞ்சை கொள்வதே அது 
- வாக்கினால் உச்சரிப்பதல்ல பூஜை;மனதில் உள்ள அன்பே பூஜை 
- ஒருவரைத் தழுவுவதல்ல ஆசை; மனதில் உள்ள பிரியமே ஆசை 
- பல வகை உறைவி ஊட்டுவதல்ல அமிர்தம்; அன்புடன் பால் ஊட்டுவதே அமிர்தம் 
- உண்மையான சாதனை இதயத்துடிப்பு தான் 
- நாம் கற்க வேண்டியது வாழ்க்கை 
- வாழ்க்கை என்றால் மௌனம்,அமைதி,அன்பு,பொறுமை 
- அன்பு - பாதுகாப்பு, பொறுமை -முன்னேற்றம் 
- உண்பது ஒரு பங்கு,குடிப்பது இரு பங்கு 
- பணிபுரிவது மூன்று பங்கு, சிரிப்பது நான்கு பங்கு 
- தோல்வி இதயத்திற்கு போகக் கூடாது 
- வெற்றி தலைக்கு போகக் கூடாது 

என்ன நட்புக்களே..மேலே சொன்ன வாக்கியம் ஒவ்வொன்றும் அமிர்தம் தானே. திரும்ப, திரும்ப படியுங்கள், படித்ததை பிடியுங்கள்.

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் 

 
முந்தைய பதிவுகளுக்கு :-


 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html


 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html

அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html


 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html


போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


 

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌