ஜாதகத்தையே சாதகமாக மாற்றும் வல்லமை படைத்தவர் குழந்தைவேல் சுவாமிகள். பரபரக்கும் சென்னை வாழ்வியல் ஓட்டத்தில் மனதில் அமைதியை தவழ செய்வதற்கென்றே அருள் புரிபவர் இவர். சொல்லில் அடங்கா சுகானுபவம் தருபவர். நியாயமான பிரார்த்தனைகள் உடனே நிறைவேற்றித் தருவதில் வல்லவர் என சுவாமிகளின் அருளை அடுக்கி கொண்டே போகலாம். நம் தளம் சார்பாக சென்ற ஆண்டு நம் குழந்தைவேல் திருக்கோயிலில் உழவார செய்தோம். சுவாமிகளை பற்றி இரு பதிவு ஏற்கனவே தந்துள்ளோம். சித்தர்கள், மகான்களை பதிவில் அடக்க முடியுமா என்ன? இதெல்லாம் நம் புரிதலுக்குக்கே. சுவாமிகளின் குரு பூஜை சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப் பட்டு வருகின்றது. இதனை தெரிவிக்கவே இந்த பதிவு.
கயிலையே மயிலை. மயிலையே கயிலை என்று போற்றப்படும் மயிலாப்பூர் எப்போதும் பரப்பாக இருக்கும். இங்கு கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில் என கோயில்கள் உண்டு. இங்கே அமைதி ததும்ப, பேராற்றாலை பெருங்கருணையோடு உணர்த்த குழந்தைவேலர் குடி கொண்டுள்ளார் என்பது உறுதி.
மிக மிக சிறிய கோயில். கூட்டம் அதிகளவில் இருக்காது. ஆனால் அளவற்ற அருள் வெளிப்பாடு இருக்கும்.இது போன்ற உயிர்நிலை கோயிலை நாம் இங்கு மட்டும் தான் கண்டுள்ளோம். பொதுவாக சித்தர் கோயில்களில் வியாபார நோக்கம் இருக்காது. அது இங்கே கண்கூடு.
திருமயிலை குழந்தைவேல் சுவாமிகள் பல ஞானிகளுக்கு ஞான குருவாக இருந்தவர். இன்றும் இருந்து கொண்டிருக்கிறார். சித்தர்களுக்கு ஆதி என்று ஒன்று இருக்கும். ஆனால் அந்தம் அவர்களுக்கு கிடையவே கிடையாது.
இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவன் கோவில். 19 ம் நூற்றாண்டில் கவனிப்பார் இன்றி பழுதடைந்து போய் இருந்தது. அப்பொழுது சிதம்பரத்தில் இருந்து வந்த பெரிய சுவாமிகள் தான் இந்த தண்டீஸ்வரம் கோவிலை புதிப்பித்து கட்டினார்.
முற்றும் துறந்த சிதம்பரம் பெரிய சுவாமிகள். தொழிலார்களுக்கு விபூதியை தான் கூலியாக கொடுத்தார். அந்த விபூதி. அவர், அவர் செய்த உழைப்பிற்கு ஏற்றவாறு பணமாக மாறியது.
பல அதிசயங்கள், அற்புதங்களை செய்த சிதம்பரம் பெரிய சுவாமிகளின் உயிர்நிலை கோவில். வேளச்சேரி குரு நானக் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது.
பிறவியிலேயே ஞானியாக இருந்த அந்த சிதம்பரம் பெரிய சுவாமிகளின் குரு தான் குழந்தைவேல் சுவாமிகள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன். துறையூர் வீர சைவ மடத்தின் பீடாதிபதியாக இவர் இருந்தார்.
பல சித்த புருஷர்களின் பிறப்பு பற்றிய குறிப்புகள் அகப்படுவது இல்லை. அதே போல் குழந்தைவேல் சுவாமிகள் பற்றிய முழுமையான குறிப்புகளும் கிடைக்கவில்லை.
பறவைகள் பறந்து சென்ற வானில் அவற்றின் தடயங்களைத் தேடுவது எத்தனை? அபத்தம். அந்தத்தை (ஜீவசமாதி) மட்டும் மானுடர்க்கு அருள்பாலிக்க அடையாளமாய் விட்டுச் செல்கின்றனர் சித்தர்கள். அதை தான் நாம் பார்க்க வேண்டும்.
குழந்தைவேல் சுவாமிகளும் சரி. அவரது சீடரான முத்தையா சுவாமிகளும் சரி. அவர்களின் புகைப்படங்களை கூட விட்டு செல்லவில்லை. அந்தத்தை அவர்களின் ஜீவ சமாதியை மட்டுமே விட்டு சென்றுள்ளார்கள்.
குழந்தைவேல் சுவாமிகள், அவரது சீடரான முத்தையா சுவாமிகள் இருவருமே ஜீவ சமாதி அடைந்து 180 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும். இந்த கோவில் 116 ஆண்டுகளுக்கு முன் தான் துறையூர் வீர சைவ மடத்தால் கட்டப்பட்டது. குழந்தைவேல் சுவாமிகளின் வரலாறை சரியான ஆவணங்களுடன். துறையூர் வீர சைவ மடத்தினர் வெகு விரைவில் வெளியிட உள்ளார்கள்.
அடியேன் கேள்விப்பட்ட வரை ஜாதங்களில் மிகப்பெரிய அளவில் தோஷங்கள் இருந்த பலர். இவரை வழிபட்ட பின் அந்த தோஷங்கள் யாவும் நீங்கி இன்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தினமும் நவசிவாய மந்திரத்தை ஒரு 5 முறையேனும் சொல்லும் அடியார்கள். சித்தர்களையும் வழிபடுவார்களே ஆயின். அந்த அடியார்களின் ஜாதகம் மாறி விடும். நல்ல விதமாக.
பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.
பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.
நாமும் சென்ற ஆண்டு உழவாரப்பணி நிறைவில் ஜாதகம் வைத்து வழிபாடு செய்தோம். பிரார்த்தனை இன்று நிறைவேறி உள்ளது. மிகப் பெரும் பாக்கியம் பெற்றோம். இதோ, மீண்டும் நன்றி சொல்ல இருக்கின்றோம்.
குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதி குழந்தைவேல் சுவாமிகள் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
வருகின்ற சித்திரை பூச நட்சத்திரமான திங்கள் கிழமை 23/4/2018 அன்று காலை 7 மணி முதல் ஹோமம், பூசை, அபிஷேகம்,அலங்காரம் என குழந்தைவேல் சுவாமிகளின் குருபூஜை சீரும் சிறப்புமாக நடைபெற உளள்து, அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு குழந்தைவேல் சுவாமிகளின் அருள் பெற வேண்டுகின்றோம்.
எப்படி செல்வது?
மயிலாப்பூர் டேங்க்( கபாலீஸ்வரர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.
பின்பு அங்கிருந்து தெற்கு மாட வீதியில் நேரே நடக்கவும்.குளம் தாண்டியும்
நடக்க வேண்டும். லட்சுமி பவன் தாண்டி,அங்கே வலது புறமாக ஒரு தெரு
பிரியும்.அந்த தெரு சித்திரக் குளம் மேற்கு தெரு.ஆரம்பத்திலேயே சில
பூக்கடைகள் காணப் படும்.
சித்திரக் குளம் மேற்கு தெரு வழியாக சற்று தூரம் நடந்தால்,அங்கே வலது
புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு வழியாக சென்றால் உங்களுக்கு கோவில்
தெரியும். கோவில் அறிவிப்பு பலகை தெரியும்.
தொடர்புக்கு E ஷங்கர்- 8056926699/ ராகேஷ் - 7904612352/ சந்திரசேகரன் - 9677267266
முந்தைய பதிவுகளுக்கு :-
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
No comments:
Post a Comment