காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே....
என்ற சித்தர்கள் காப்புடன் பதிவை தொடங்குவோம். இன்று எங்கு பார்த்தாலும் சித்தர்கள் என்ற வார்த்தை மிக எளிதாக காண கிடைக்கின்றது. சித்தர்கள் யார்?சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன? மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு என்ன? என இது போன்றுஇன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின் அருளால் வரும் பதிவுகளில் நாம் உணரும் செய்திகளை பகிர உள்ளோம். இது ஒரு புறமிருக்க..ஏன் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள்,ரிஷிகள், குருக்களை வணங்க வேண்டும் என்ற மற்றொரு கேள்வியும் எழுகின்றது . மகான்களை வணங்குவதால் நம் தலையெழுத்து மாறிவிடுமா என்ன?
பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள்.பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.
ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார் .
என்ன நடந்தது ..? இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறதுஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது.இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்...!!
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் சமாதியிலும் கூட இன்றும் இது நிகழ்கிறது ..!
இதை வார்த்தைகளால் சொன்னால் புரியாது.அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் ..!
சித்தர்களை,மகான்களை தரிசிப்பதால் எவ்வளவு பெரிய மாற்றம் நம்மில் உருவாகின்றது என பார்த்தீர்களா?
இதோ நாம் பரவலாக கூறும் சித்தர்களின் குறிப்புகளை படங்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் சித்தர் தரிசனம் பெறுங்கள்.

சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும் .சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது தன்னை யார்?என்று அறிந்து கொள்ளவேண்டும்.அப்படி அறிந்து கொண்டால் தன் வாழ்வின் பிரச்சினை,சிரமம் , கஷ்டம் இவைகளை எப்படி
தீர்த்துக்கொள்ள வேண்டும்? என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம் சித்தர்கள் பல தெளிவு நிலையை தருவார்கள்.மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்
தெளிவடையும் நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.இவை அனைத்தும் ஏதோ அமானுஷ்யமான முறையில் கிடைக்கும் என்று நம்பாதீர்கள். இவை அனைத்தும் இயல்பிலேயே மலரும். நம்மிடம் உள்ள உயிர் மலர்ந்தால், தன்னை உணர்ந்தால், பிறகென்ன சித்தம் படிக்கலாம். சித்தர்கள் நம் தாத்தாக்கள் போன்ற நிலை கொண்டவர்களே. இப்போதும் பல சித்தர்களை தாத்தா என்றோ, அப்பா என்றோ அழைப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம்.
பொதுவாக நாம் கூறும் 18 சித்தர்களைத் தாண்டி, கோடான கோடி நவகோடி சித்தர்கள் இருக்கின்றார்கள் என்பதே உண்மை. இன்னும் இது போன்ற பல சித்தர்களின் செய்திகளை எடுத்துரைக்க எல்லாம்வல்ல குருவருள் துணை புரியட்டும்.
போகர் பரணி நட்சத்திர வழிபாடு நாளை 17-04-2018, செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு மருதமலையில் உள்ள குருமுனி ஸ்ரீ அகத்தியர் 18 சித்தர்கள் ஆலயத்தில் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்தது கொண்டு சித்தர்கள் அருள் பெறவும்.
- மீண்டும் சித்தர்கள் பணிவோம்.
No comments:
Post a Comment