Subscribe

BREAKING NEWS

20 April 2018

அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில் - சித்திரை பெருவிழா அழைப்பிதழ்

காரணீஸ்வர் கோவில்

சென்னையில் கடற்கரை நோக்கி நாம் ரயிலில் பயணித்தால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் போது, வானளாவிய கோபுரம் நம்மை அழைக்கும். அழைப்பவர் வேறு யாரும் அல்லர். அந்த பரம்பொருளாய் விளங்கும் காரணீஸ்வரர் தான். இரண்டு, மூன்று முறை சென்று தரிசனம் செய்திருக்கின்றோம். சைதாப்பேட்டையில் மிக மிக பிரசித்தி பெட்ரா கோயில் இது ஆகும்.

சென்னையில்  உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது.



தல வரலாறு

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.

இதனை அறிந்த தேவேந்திரன் இந்த பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது.

இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.



இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.

இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.

அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.

வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.

இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பாக உள்ளது.
















இத்தகு சிறப்பு பெற்ற அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 20-ம் தேதி இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்தி திருவீதிஉலா நடைபெறும். ஏப்ரல் 29-ம் தேதி அருள்மிகு நடராஜர் தரிசனம், பஞ்சமூர்த்தி திருவீதி உலா, இந்திர தீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 

பிரதி தினம் மாலையில் திருக்கோயிலில் 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், இரவு திருவீதி உலாவிலும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். பிரதி தினம் இரவில் சுவாமி திருவீதி உலாவின் போது தேவார இன்னிசை நடைபெறும். 

நேற்று சைதை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை திரு காரணிஸ்வரர் பிரம்ம உற்சவ  வினாயகர் புற்று மண் எடுக்கும் உற்சவத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் கீழே இணைத்துள்ளோம்.





















காட்சிப் படங்கள் மற்றும் அழைப்பிதழ் தந்து நம்மை வழிநடத்தும் நால்வரின் பாதையில் திரு.சுரேஷ் பிரியன் & திரு.கருணாகரன் ஐயா அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விரைவில் தரிசிக்க காரணீஸ்வரர் அருள் புரியட்டும். அன்பர்கள் அனைவரும் சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு அருள் பெற அன்புடன் வேண்டுகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

ஸ்ரீ ரத்னகிரீஸ்வர பெருமான் ஆலய சித்திரை பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_19.html

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_69.html

மதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14 - http://tut-temple.blogspot.in/2018/04/13-14.html

சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_87.html


No comments:

Post a Comment