Monday, April 30, 2018

சிவத் தல தொகுப்புகள்

அனைவருக்கும் வணக்கம்.

சைவம்..என்று சொன்னால் சிவம் என்று தோன்றிய காலம் மறைந்து உண்ணும் உணவில் நீங்கள் சைவமா? அசைவமா ? என்று கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆன்மிகத்திற்கும் அசைவத்திற்கும் சம்பந்தம் உண்டா ? இல்லையா என்று நாம் இங்கே பட்டிமன்றம் நடத்த விரும்பவில்லை.அது அவரவர் சூழ்நிலை, பழக்க வழக்கம், குடும்ப நெறி, பண்பாடு, வாழ்க்கை முறை சார்ந்தது. இன்றைய பதிவில் சிவம் பேசும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிவத் தலங்களை இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம்.

அனைவரும் படித்து பார்த்து காற்றில் பறக்க விடாது, மனதில் இருத்தி, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நம் சனாதன தர்மத்தை நிகழ்காலத்திடமும், எதிர்காலத்திடமும் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமையாகும்.  அட்ட வீரட்டத் தலங்கள்,  பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், முக்தி அளிக்கும் தலங்கள்,  பஞ்சபூத தலங்கள்,  நடராஜருக்கான பஞ்ச சபைகள், வியாக்ரபாதர் வழிபட்டவை - புலியூர்கள்,  சப்த (ஏழு)விடங்க தலங்கள்,  சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற தலங்கள்,   காசிக்கு ஈடான தலங்கள்,   நந்தியுடன் தொடர்புடைய தலங்கள்,  திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள் என அறிய உள்ளோம்.


வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் 

  அட்ட வீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும்.சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

 1.     திருக்கண்டியூர்  : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
 2.     திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
 3.     திருவதிகை  : திரிபுரத்தை எரித்த இடம்
 4.     திருப்பறியலூர்  : தக்கன் தலையைத் தடிந்த தலம்
 5.     திருவிற்குடி  : சலந்தராசுரனை வதைத்த தலம்
 6.     திருவழுவூர்  : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
 7.     திருக்குறுக்கை  : மன்மதனை எரித்த தலம்
 8.     திருக்கடவூர்  : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

  பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்


சோதிலிங்கம் என்பது சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று.வடிவற்ற அவனை நாம் வடிவில் செலுத்தி அவன் பதம் அடைதலே இப்பிறவியின் நோக்கம்.இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பதுபொதுவான  நம்பிக்கை.சிவபெருமானின் பெயர்திருத்தல வகைநகரம்மாநிலம்
கேதாரீஸ்வரர்மலைக்கோவில்கேதர்நாத்உத்ராஞ்சல்
விஸ்வேஸ்வரர்நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை)வாரணாசிஉத்ரபிரதேசம்
சோமநாதேஸ்வரர்கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை)சோமநாதம்குஜராத்
மகா காளேஸ்வரர்நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை)உஜ்ஜயினிமத்திய பிரதேசம்
ஓங்காரேஸ்வரர்நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில்இந்தூர்மத்திய பிரதேசம்
திரியம்பகேஸ்வரர்நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை)நாசிக்மகாராஷ்டிரம்
குஸ்ருணேஸ்வரர்ஊரின் நடுவே அமைந்த தலம்ஓளரங்கபாத்மகாராஷ்டிரம்
நாகநாதேஸ்வரர்தாருகாவனம் காட்டுத்தலம்ஓளண்டாமகாராஷ்டிரம்
வைத்தியநாதேஸ்வரர்ஊரின் நடுவே அமைந்த தலம்பரளிமகாராஷ்டிரம்
பீமசங்கரர்மலைக்கோவில்பூனாமகாராஷ்டிரம்
மல்லிகார்ஜுனர்மலைக்கோவில்ஸ்ரீ சைலம்ஆந்திர பிரதேசம்
இராமேஸ்வரர்கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா)இராமேஸ்வரம்தமிழ்நாடு

முக்தி அளிக்கும் தலங்கள்


 1.  பிறக்க முக்தியளிப்பது - திருஆரூர்
 2.  வாழ முக்தியளிப்பது - காஞ்சிபுரம்
 3.  இறக்க முக்தியளிப்பது - வாரணாசி (காசி)
 4.  தரிசிக்க முக்தியளிப்பது - தில்லை (சிதம்பரம்)
 5.  சொல்ல முக்தியளிப்பது - திருஆலவாய் (மதுரை)
 6.  கேட்க முக்தியளிப்பது - அவிநாசி
 7.  நினைக்க முக்தியளிப்பது - திருவண்ணாமலை

 மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும்
தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய  சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! என்ற
முழக்கம் உருவாயிற்று போலும்.இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு. ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று. இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும். ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அருகில் உள்ள சிவதலத்திற்கு
குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம். அர்ச்சனை செய்யலாம். அன்னதானம் செய்யலாம். சிவத்தலத்தில் மந்திரம் செபிக்கலாம். அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவனது மந்திரங்களை கேட்கலாம். சிவபெருமானின் பெருமைகளை
பேசலாம். அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம்.

இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும். மிகுந்த புண்ணியம் கிட்டும். 16 பேறுகளும் கிட்டும். சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும்.


 பஞ்சபூத தலங்கள்


படிமம்கோவில் பெயர்குறிக்கும் பூதம்லிங்கத்தின் பெயர்இடம்
Ekam.jpgகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்,திருவாரூர் தியாகராஜர் கோயில்நிலம்பிருத்வி லிங்கம்காஞ்சிபுரம், திருவாரூர்
Tiruvannamalai004.jpgதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நெருப்புஅக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்திருவண்ணாமலை
Tiruvannaikkaval4.jpgதிருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்நீர்அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம்திருச்சி
Eastgopuram2.jpgசிதம்பரம் நடராசர் கோயில்ஆகாயம்ஆகாச லிங்கம்சிதம்பரம்
SrikalahastiGaligopuram.jpgதிருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்காற்றுவாயு லிங்கம்திருக்காளத்தி நடராஜருக்கான பஞ்ச சபைகள்

ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக  புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து ஊர்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.


 1. சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
 2. மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
 3. திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
 4. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
 5. குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).


இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.


வியாக்ரபாதர்

மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான். மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூசையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார். மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர். மழமுனிவர் சிவபூசை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார்.  சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது.

விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.


வியாக்ரபாதர் வழிபட்டவை - புலியூர்கள்

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

 சப்த (ஏழு)விடங்க தலங்கள்

சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்டநடனங்களை யாடுவார்கள்.

சப்தவிடங்கத் தலங்களின் இறைவன்

சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.


 1.     திருவாரூர் - தியாகராசப்பெருமான்
 2.     திருநள்ளாறு - நாகவிடங்கர்
 3.     நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
 4.     திருக்காராயில் - ஆதிவிடங்கர்
 5.     திருக்குவளை - அவனிவிடங்கர்
 6.     திருவாய்மூர் - நீலவிடங்கர்
 7.     வேதாரண்யம் - புவனிவிடங்கர்


சப்தவிடங்க நடனங்கள்

ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.


 1.     திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
 2.     திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
 3.     நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
 4.     திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
 5.     திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
 6.     திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
 7.     வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்


இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


 சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற தலங்கள்

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

  காசிக்கு ஈடான தலங்கள்

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

 நந்தியுடன் தொடர்புடைய தலங்கள்

1.            நந்தி சங்கம தலம்                          - கூடலையாற்றூர் திருநணா (பவாநிகூடல்)
2.            நந்தி விலகியிருந்த தலங்கள்        - பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக),திருப்புன்கூர்                      (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3.            நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம்   - திருவெண்பாக்கம்
4.            நந்திதேவர் நின்ற திருக்கோலம்    - திருமாற்பேறு
5.            நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - திருமழபாடி
6.            திருக்கீழ்வேளூர்                             – ஒரு பக்தையின் பொருட்டு
7.            திருநள்ளாறு                                   – ஒரு இடையனுக்காக

         
 சப்த ஸ்தான (ஏழூர் விழா)  தலங்கள்

சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா என்பதானது ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா ஆகும். இவ் விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். [1] இத்திருவிழா பெரும்பாலும் சைவக் கோயில்களோடு தொடர்புடையதாக உள்ளது. இவ்விழாவின் போது ஒரு கோயில் முதன்மைக் கோயிலாக அமைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அமைவது தொடர்புடைய கோயில்களுக்கு அந்தந்த பல்லக்குகள் சென்றுவரும் நிகழ்வாகும். ஒவ்வொர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் முதன்மைக் கோயிலிலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கு வந்து சேருவது மரபாக உள்ளது. முதன்மைக் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அக்கோயிலைச் சார்ந்த இறைவனும், இறைவியும் உலா வருகின்றனர். அங்கிருந்து பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலிலுள்ள பிற இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் சேர்ந்துகொள்கின்றன.

பலதரப்பட்ட மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் வருவதால் ஒரு சமூகப் பண்பாட்டுப் பிணைப்பு ஏற்படுகிறது. வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுகின்றனர்.
திருவையாறு

தமிழகத்தில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறு சப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய கீழ்க்கண்ட ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்புவர்.


 1.     திருவையாறு ஐயாறப்பர் கோயில்
 2.     திருப்பழனம்
 3.     திருச்சோற்றுத்துறை
 4.     திருவேதிகுடி
 5.     திருக்கண்டியூர்
 6.     திருப்பூந்துருத்தி
 7.     திருநெய்த்தானம்


கடைசித்தலமான திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்தில் இரவு வாண வேடிக்கையுடன் விழா சிறப்புற நடைபெறும். திருவையாற்றில் இறைவனுக்குப் பூப்போடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறும். திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வர். செல்லும் இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்கவும், தொடர்ந்து நடக்கும் அவர்களுக்கு சோர்வு தெரியாமல் இருக்கவும் பானகம் போன்ற பானங்களை ஆங்காங்கே வழங்கப்படுகிறது. பல இடங்களில் அன்னதானமும் நடைபெறும். காலையில் கிளம்ப ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை இந்த இறைவனோடு உடனாட உலா நடைபெறும். செல்லும் இடங்களில் பல்லக்கில் உள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்புப் பூஜைகள், கற்பூர ஆராதனை நடைபெறும். செல்லும் வழியில் வீட்டில் நின்றுகொண்டு பல்லக்குகளை எதிர்கொண்டு அழைப்பர். இறைவன் தம்மைத் தேடி வரும்போது அவனுக்காகக் காத்திருப்பதையும், இருந்த இடத்திலிருந்தே வழிபாடு செய்வதையும் மிகவும் வாஞ்சையோடு மக்கள் செய்வார்கள்.


திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகும். கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் அண்மைக்காலமாக நடைபெறவில்லை என்பதை அறியமுடிந்தது.
கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. பல்லக்கு சீர்செய்யப்பட்டு, வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.

    கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
    திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை
    தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், தாராசுரம்
    திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி
    கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர்
    மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், மேலக்காவேரி
    சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை


 திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்

சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின் திருநாமங்களும்…

1. திருவோத்தூர்    --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம்    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம்       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா       --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல்          --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர்    --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி  --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம்    --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர்     --- அரங்கநாதர்
12. திருவக்கரை     --- அரங்கநாதர்மீண்டும் அடுத்த பதிவில் சிவத்  தல தொகுப்புகள் தொடர்வோம்.  இது போல் வைணவ திருக்கோயில்கள், சித்தர் தலங்கள் என தர விரும்புகின்றோம். விருப்பத்தை இங்கு வைத்துள்ளோம். மற்றதை நம் பெருமாள் பார்த்துக் கொள்வார். பாவம் போக்கும் 108 சிவ தலங்கள் என்றே ஒரு தொகுப்பில் சிவ தலங்கள் உண்டு. இது போன்ற தலங்களை இப்பிறப்பில் தரிசிக்க நாம் விழைகின்றோம். 

ஊழ் வினை பாவம் போக - திருக்குடந்தை 
வினை அகல - திருச்சிராப்பள்ளி 
கஷ்டங்கள் விலக - திருநள்ளாறு 
மனநோய் விலக - திருவிடைமருதூர் 
ஞானம் பெற - திருவாவடுதுறை 


- சிவத் தல தொகுப்புகள் தொடரும்.


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌