Saturday, April 14, 2018

ஸ்ரீ ரத்னகிரீஸ்வர பெருமான் ஆலய சித்திரை பெருவிழா அழைப்பிதழ்.

அய்யர்மலை (சிவாயமலை)

திருவாட்போக்கி - ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

  • மாணிக்கம் வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை, நீர்த் தொட்டி நிரம்பால் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்டு தனது உடைவாளை எடுத்து மாணிக்கக்கல் வியாபாரியை வெட்ட, உடன் இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார்.
  • சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாட்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து மூலவர் மீது படுகிறது.
  • சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

    கால பாசம் பிடித்தெழு தூதுவர்
    பால கர்விருத் தர்பழை யாரெனார்
    ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் .
    சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. .

    விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
    படுத்த போது பயனிலை பாவிகாள்
    அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
    எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே

    நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
    கூடி வந்து குமைப்பதன் முன்னமே
    ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
    வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே..

    இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
    பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
    அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
    கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே

  • இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி.
  • கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
  • இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்)
அருள்மிகு ஸ்ரீ சுரும்பார்குழலி அம்பிகை உடனமர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வர பெருமான் ஆலய சித்திரை பெருவிழா அழைப்பிதழ்..!!
அனைவரும் வருக! இறையருள் பெறுக!!

அருள்மிகு மீனாட்சியம்மன், திருக்கல்யாண விருந்து, சமயபுரம் மாரியம்மன் சித்திரை திருவிழா பதிவுகளை இங்கே மீண்டும் தந்துள்ளோம். 

முந்தைய பதிவுகளுக்கு:-

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_69.html

மதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14 - http://tut-temple.blogspot.in/2018/04/13-14.html

சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_87.html


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌