Subscribe

BREAKING NEWS

28 April 2018

ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அனுபவம்

இறை அன்பர்களே.

சென்ற ஆண்டு தொடங்கிய உழவாரப் பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் நடைபெற வில்லை. நாமும் எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. சரி...எல்லாம் அவன் செயல் எனும் போது  நாம் என்ன செய்ய முடியும். இந்த பதிவில் சென்ற மார்ச் மாதம் நங்கநல்லூர்  ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆசிரமத்தில் நடைபெற்ற உழவாரப் பணி அனுபவத்தை இங்கே தர விரும்புகின்றோம். உழவாரப் பணிக்கு முன்பு சனிக்கிழமை நாம் அச்சிறுபாக்கம் மலைக்கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து குருக்களுக்கு தொடர்பு கொண்டோம்.

அவர் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறுவதால், உழவாரப் பணி செய்வதுகடினமே..வண்ணப்பூச்சு வேலைகள் வேறு நடக்கிறது என்றார்.நமக்கு சற்று கடினமாக இருந்தது. தாயின் மேல் பாரத்தை போட்டு விட்டு, நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து விட்டு நாம் வழக்கம் போல் அடுத்த நாள் காலை 9 மணி அளவில் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆசிரமம் அடைந்தோம். 

நமக்கு முன்னதாகவே மகளிர் அணியினர் அங்கு வந்து, தங்கள் கைங்கர்யத்தை செய்து கொண்டு இருந்தார்கள். அன்றைய தினம் ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.அவருடைய ஆசியும் எங்களுக்கு இந்த உழவாரப் பணி மூலம் கிடைத்தது. சுமார் ஐந்தாறு பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாத்திரங்களை தேய்த்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.









நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். பெண்களுக்கு என்று இங்கு பணி நிறைவாக இருந்தது. சற்று நேரத்தில் திரு.சந்திரசேகரன் அண்ணன் வந்தார்கள். அவர்கள் வந்தது ஆடவருக்கான பணிகளை குருக்களிடம் கேட்டு வாங்கி செய்யுங்கள் என்று அன்பித்தோம். அங்கிருந்த சுவாமிகளை சுத்தம் செய்ய சொன்னார்கள். ஆண்கள் இங்கே செல்வதாக இருந்தால் மேல் சட்டை கழற்றி விட்டு தான் செல்ல வேண்டும். இங்கு மட்டுமல்ல.எந்த கோயிலுக்கு சென்றாலும் இதுவே நியதி. ஆனால் நாம் தான் பழமை மறந்தோம். இன்று அவற்றைக் கடைபிடிக்க திணறி வருகின்றோம்.






இங்கே இவர்கள் பாத்திரங்களை மட்டும் தேய்த்து கழுவவில்லை.அவரவர்களின் மனதில் உள்ள அழுக்குகளையும் சேர்த்து தான் கழுவிக் கொண்டு இருக்கின்றார்கள்.இவர்கள் கோயிலின் மேல்புறத்தில் இந்த சேவை செய்து கொண்டிருந்தார்கள். கோயிலின் கீழே மற்றொரு குழு. சொல்லவே வேணாம். நீங்களே பாருங்கள். இப்படித்தான் நீ..நான் என்று போட்டி போட்டுகொண்டு சேவை செய்ய வேண்டும். அது தான் நம் குழுவின் தாரக மந்திரமும் கூட. இந்த பணியில் புதிதாக செல்வி கல்பனா வந்து இருந்தார்கள். புதியவர்கள் வருகையும், மற்றவர்களின் வழிகாட்டலும் அருமையாக இருந்தது.







கோயில் முழுதும் அலங்காரம் தான். சுவாமிகளை காண இரு கண்கள் போதவில்லை. கோயிலின் கீழும் வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் ரைட்மந்த்ரா குழுவின் நட்பான திரு.குட்டி சந்திரன் வந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். மேலும் ஆதம்பாக்கத்தை சார்ந்த திருமதி.ரமணி அவர்கள் வந்தார்கள். அவர்கள் சும்மா வராமல், நம் அனைவருக்குமான மோர் கொண்டு வந்தார்கள். இது புதிய முயற்சியாக இருந்தது. அனைவருக்கும் இடையிடையே மோர் கொடுத்தோம். இங்கே அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கின்றோம்.









நேரம் செல்ல செல்ல பணியில் வீரியம் தென்பட்டது. அனைவரும் ஒவ்வொரு பணியாக செய்து கொண்டிருந்தார்கள். நம் குழுவின் உறவான திருமதி.தாமரை அவர்கள் அவர்களின் குழந்தைகளோடு வந்து அமர்களப்படுத்தினர். குட்டி சூட்டிஸ் ..தங்கள் பங்கினையும் இணைத்தனர். ஆடவற்கு என ஒட்டடை அடித்தல்,சுவாமிகளின் மீதுள்ள அழுக்குளை துடைத்தல் என தொடர்ந்தோம்.





மோர் பரிமாறிய போது ...


நமக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. முதல் நாள் பேசும்போது பணி எதுவும் இருக்காது என்றார். ஆனால் இங்கே நமக்கு பணி செய்ய கிடைத்தது என்றால் அது அந்த தாயின் அருள் தான். பின்னர் அப்படியே சிறு சிறு குழுக்களாக பிரிந்து தரிசனத்திற்கு சென்றோம். அம்பாள் உத்தரவுப் படி, இங்கு படி ஏறும் முன் மந்திர சுத்தி செய்யப்பட்ட குங்குமம்  வாங்கி உங்கள் குடும்ப தோஷம் நீங்க, திதி தேவிக்கு அங்குள்ள  பெட்டியில் போட வேண்டும். வெளியிலிருந்து நெய், பூக்கள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

 எனவே அனைவரும் குங்குமம் வாங்கி கொண்டு பிரார்த்தனைக்கு செல்ல சென்றோம்.




திருமூலர் இங்கு சில காலம் தங்கி, இந்த இடத்தை தன் திருமந்திரத்தில் சக்தி பேதை திரிபுரை சக்கர விளக்கத்தில் "ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி" என்று குறிப்பிட்டுள்ளார்.நங்கை என்றால் 16 வயதுப் பெண். இராஜ ராஜேஸ்வரிக்கு 16 வயது தான். திருமூலர் பூசித்த தேவி இவர் . அகத்திய பெருமான் இங்கு தங்கி, ஒவ்வொரு திதிக்கும் ஒரு பாடல் வீதம், பூர்வபக்க்ஷமாக 16 பாடல்கள், அமரபக்ஷமாக 16 பாடல்கள் பாடி உள்ளார். அந்த பாடல்களை இங்குள்ள படிக்கட்டுகளில் காணலாம்.  இந்த 16 பாடல்களை தனிப்பதிவாக தருகின்றோம். ஓவர் டூ உழவாரப் பணி 










கடைசியாக ஜெயப்ரகாஷ் மற்றும் கல்பாக்கம் வெங்கடேஷ் வந்தார்கள். அனைவரும் அருமையான தரிசனம் செய்து, நம் குழுவிற்கும் சேர்த்து சங்கல்பித்தோம். பிரார்த்தனை மட்டும் சிறப்பல்ல..பணியும் இங்கே சிறப்பாக இருந்தது. சொல்ல வார்த்தை இல்லை. நேரம் 1 மணியை நெருங்கி கொண்டு இருந்தது. கோயில் சார்பாக நமக்கு தயிர் சாதம் செய்து இருந்தார்கள். 












கோயிலை முழுதும் சுற்றிப் பார்த்தோம். என்ன அழகு. அப்பப்பா..அழகில் மெய் மறந்தோம். தரிசித்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. பணி நிறைவாக மதிய உணவு உண்டு , அனைவரும் ஒன்று சேர்ந்து, ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களின் ஜீவாத்மா அந்த பரமாத்மாவிடம் சென்று நற்கதி அடைய பிராத்தித்து, பணியில் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறி,சிறிய பரிசு ஒன்றைக் கொடுத்தோம்.




கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்ட காட்சி.

வந்திருந்த அனைவருக்கும் அகத்தியரின் அருள்  பிரசாதம் வழங்கப்பட்டது. பணியே இல்லை என்ற நிலையில் நம்மை மலைக்க வைத்து, அருமையான பணியும், தரிசனமும், அருள் பிரசாதமும் வழங்கிய அன்னை ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரியை வணங்கி அனைவரும் புறப்பட்டோம். மே மாதத்திற்கான உழவாரப் பணி அறிவிப்பு விரைவில் நம் தளத்தில் வெளியாகும்.அனைவரும் பங்கேற்று.சித்தர்களின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.



- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_4.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_15.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html


No comments:

Post a Comment