Subscribe

BREAKING NEWS

01 January 2019

2019 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

தள வாசகர்களே.

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2019 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

தமிழ் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் நடத்த நாம் விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் இன்றைய நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில் தான் விஷயம் உள்ளது. இன்றைய நாளை,விடுமுறை தினத்தை நாமும் வழக்கமாக தொலைக்காட்சி, சினிமா என்று கொண்டாடாது, குடும்பம், உறவுகள் என சுற்றம் சூழ, மூத்தோர் ஆசி பெற்று, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 

இதோ திருஅண்ணாமலையில் AVM குழுவின் அன்னதானம் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்தும்  குருவின் கருணையாலே. குருவருளின்றி திருவருள் கிடைக்குமா? தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று நாம் நம் உறவுகளோடு ஆலய தரிசனம் பெற தீர்மானித்துள்ளோம். எண்ணத்தை விதைத்தாகி விட்டது, பிறகென்ன? எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.

அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 




உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்







நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளை முருக சிந்தனையில் திளைக்க செய்ய விரும்புகின்றோம்.

கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் தாண்டி ஒரு அருமையான பாடலை நாம் கேட்டோம். அனைவருக்கும் தெரிந்த பாடலாக இருக்கலாம். எம்மைப் போன்ற சிறியோனுக்கு இந்த பாடல் புதிது தான். இது போன்ற பாடல்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள்.




பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்





அட..மேலே உள்ள இணைப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தால் நமக்கு தெரிவியுங்கள்.

முருகா சரணம்
குமரா சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்

முந்தைய பதிவுகளுக்கு :-


 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html
 


 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html
 


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html  

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html 


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html

போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html


வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் -https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



No comments:

Post a Comment