Subscribe

BREAKING NEWS

20 January 2019

33 ஆண்டுகள் வள்ளலார் வசித்த இல்லத்தில் தைப்பூச திருவிழா

அனைவருக்கும் வணக்கம்.

தைப்பூசம் - முருகன் அருள் முன்னின்று நடத்தும் நாள்.அதாவது முருகனுக்கு உகந்த நாள். இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.ஆம். வருவிக்க உற்ற மகான் அருட்பெருஞ்ஜோதியோடு கலந்த நாளும் அதுவே. கடைவிரித்தோம்,கொள்வாரில்லை;கட்டிவிட்டோம்
ஆனால் அச்சில் வார்ப்போம்.ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். என்று சொன்னவர். இன்றைய பூசத்திருநாளில் வள்ளலார் பற்றி சிறிது சிந்திப்போம்.

வள்ளலார் தோற்றுவித்த அறநிலையங்கள், அன்பர்கள் ஏற்படுத்தியுள்ள பரந்துபட்ட சன்மார்க்க சங்கங்கள் வழி அணையா அடுப்பும், அருட்பெருஞ்சோதியும் என்றென்றும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றாலும் வள்ளலார் போதித்த வாழ்க்கை நெறியும், சமய வழிநின்று செய்த சமுதாய புரட்சியும், அவர் காலத்திலும் அவருக்குப் பிறகும் நின்று நிலைபெறவில்லை என்ற ஆதங்கள் வள்ளலாருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உண்டு. அதனால்தான் ‘கடைவிரித்தோம் கொள்வாரில்லை‘ என்று கூறி மறைந்தார்.



இன்று துறைதோறும் தோன்றியுள்ள பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் வள்ளலாரே.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் - வள்ளலாரே.

தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் - வள்ளலாரே.

தமிழகத்தில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் - வள்ளலாரே.

தமிழ்நட்டில் முதன்முதலில் மொழிப் பாடசாலை (தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்) நிறுவியர் - வள்ளலாரே.

தமது கொள்கைக்கென்ற ஒரு தனி மார்க்கத்தை கண்டவர் - வள்ளலாரே.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியர்- வள்ளலாரே.அது, சமரச சன்மார்க்க சங்கம்.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கட்ணவர் வள்ளலாரே. - சன்மார்க்க கொடி.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் வள்ளலாரே. - அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.

தமது தொண்டுக்கென தர்ம சாலையைக் கட்டியவர் வள்ளலாரே. - சத்திய தருமச்சாலை.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையைக் கட்டியவர் வள்ளலாரே. சத்திய ஞானசபை.


சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே.

‘சாகாதவனே சன்மார்க்கி‘ என்பது வள்ளலாரின் உபதேசம்.

‘என் மார்க்கம் இறபொழிக்கும் சன்மார்க்கந்தானே‘.

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு. அது சொல்லவன்றே‘ என்பவை வள்ளலாரின் வாக்குகள்.

இன்று தைப்பூசத்திருவிழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் வடலூர் சிறப்பிடம் பெறுகின்றது.எப்போ அழைப்பாரோ ? என்று நாமும் ஏங்கிக்கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.





தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் தொடங்கும்.. ஏழு திரைகள் நீக்கப்பட்டு ஜோதி வடிவில் இறைவன் தரிசனம் கொடுப்பார். அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரத்தை முழங்கி இறை வடிவான ஜோதியை தரிசனம் செய்வார்கள். 

இந்த நன்னாளில் நடைபெற உள்ள தைப்பூசத்திருவிழாவிற்கு அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.




வள்ளலார் 33 ஆண்டுகள் வசித்த இல்லத்தில் தைப்பூச திருவிழா கொண்டாட இருக்கின்றார்கள்.இந்த அழைப்பிதழ் நமக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக!

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

எனைஇந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே! - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_5.html

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_12.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_18.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.in/2018/05/21052018.html

திருஅருட்பா அமுது உண்போம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_23.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

No comments:

Post a Comment