Subscribe

BREAKING NEWS

03 January 2019

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அடிக்கடி செல்லும் ஆசிரமங்களில் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் மிக மிக முக்கியமானது. நமக்கு இருக்கும் சங்கடங்களை நீக்குவதில் இவர் வல்லவர். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் இப்படி ஒரு ஆசிரமம் இருப்பது பலருக்கு தெரியாது, வணிக வளாகங்களில் விடுமுறை சென்று சுற்றுவதை விட, இது போன்ற அமைதியை அள்ளித் தரும், மனதிற்கு மகிழ்ச்சி தரும் உய்ரிநிலை கோயில்களுக்கு சென்று வாருங்கள், நீங்கள் உற்சாகத்தோடு இருப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.

மலேசியா அகத்திய அடியார்களின் மூலம் நமக்கு 108 நெய் தீபம் ஏற்ற உத்தரவானது. எங்கு? எப்படி ? என்பது போன்ற பல கேள்விக்கணைகளை தொடுத்தோம். உடனே சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் இது பற்றி கேட்டோம். உலக நன்மைக்காக என்றது நமக்கு உடனே ஒத்துழைப்பு தந்தார்கள்.

அன்றைய நிகழ்வின் துளிகளை இங்கே பகிர விரும்புகின்றோம். வளர்பிறை சஷ்டி திதியான ஆவணி 30 நாள் சனிக்கிழமை அன்று காலை இந்த வழிபாடு செய்ய முடிவு செய்தோம். 108 விளக்குகள் வாங்கி நன்கு சுத்தம் செய்து காய வைத்தோம்.




எம் பெற்றோரை அழைத்துக் கொண்டு அன்று காலை சுமார் 10 மணி அளவில் ஆசிரமத்தை அடைந்தோம்.பஞ்சபூத தத்துவத்தை உணர்த்தும் குறியீடுகள் கோலமாக விட்டோம்.


பின்னர் சரியாக 11 வாழை இலைகளை அடுக்கி வைத்தோம்.



இலைக்கு 10 தீபமாக வைத்தோம்.


விளக்குகளை வைத்த பின்னர், அதில் நெய் ஊற்றும் பணியை திரு.திலிப் அய்யா அவர்கள் ஆரம்பித்தார்கள்.




எம் பெற்றோரோடு சேர்ந்து நால்வரோடு தான் ஆரம்பித்தோம். ஆனால் வழிபாடு ஆரம்பம் செய்யும் முன்னர் ஆசிரமத்தில் இருந்தவர்களை அழைத்தோம். அவர்கள் வந்து மிக மகிழ்வோடு கலந்து கொண்டாரகள்.






ஒருவாறாக தீபங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. நாம் தான் தாயாராகவில்லை என்று தோன்றியது.



மகானின் சந்நிதியில் இது போன்ற வழிபாடு..நாம் செய்ய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அதிலும் எம் பெற்றோரோடு நாம் இந்த வழிபாட்டில் ஈடுபட்டது இன்னும் மனதில் நிறைந்து உள்ளது. இதோ அனைவரும் தயார்.



நமக்கு கொடுக்கப்பட்ட மந்திரங்களை உச்சரித்து பின்னர் தீபமேற்றினோம். எம் தந்தையார் முதல் தீபம் ஏற்றினார்.







அடுத்து ஒவ்வொருவராக , தத்தம் இலையில் உள்ள 10 தீபங்களை ஏற்றுக் கொண்டே இருந்தார்கள். அங்கிருந்த ஒருவருக்கு சரியாக 8 தீபம் கொண்ட இலை கிடைத்தது. அது அவருக்கு மிக மிக ஆனந்தம் தந்ததாக கூறினார். அதெப்படி? சரியாக 8 விளக்கு கொண்ட இலை அவருக்கு கிடைக்க வேண்டும்? வேண்டத்தக்கது அறிந்த எம் பிரானுக்கு இது தெரியாத என்ன?


இவர் தான் 8 விளக்கேற்றிய மகிழ்ச்சியில் ...








நம் குழுவிற்கும் தீபத்திற்கு ஏகப் பொருத்தம். சென்ற ஆண்டு அகத்தியர் குரு பூசையில் 108 தீப வழிபாடு, ஆடி மாதம் முதல் மோட்ச தீப வழிபாடு, இதோ..இந்தப்பதிவில் 108 நெய் தீப வழிபாடு. அனைத்தும் நமக்கு உணர்த்துவது பஞ்சபூத வழிபாடு ஆகும்.


திரு.திலிப் ஐயா அவர்களுக்கு சிறு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் வழிபாட்டை முழுமை செய்தோம். ஆனால் மனதுள் பூ வாங்காது வந்து விட்டோமே என்று ஒரு குறை இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தில் பூக்கடை இல்லை, சற்று வருத்தம் தான். ஆனால் இந்த வருத்தமும் நம்மை விட்டு நீங்கியது



நம் நெருங்கிய அன்பர் திரு.பிரேம்சந்த் அவர்கள் அன்று கடைசியாக வந்தார். சும்மா ஒன்றும் வரவில்லை. நம் ஏக்கம் தீர்க்க பூக்களோடு வந்தார். அவரே பூக்கள் தூவி மீண்டும் வழிபாட்டை முழுமை செய்தார்.






பூக்கள் தூவிய பிறகு, இன்னும் ஒரு படி ஆனந்தம் கண்டோம்.




இதே வழிபாடு அன்றைய தினம் அகத்திய அடியார்களால் மலேசியாவில் மற்றொரு விதமாக நிகழ்த்தப்பட்டது.




நம்மை போன்றே எம் தங்கையும் அன்றைய தினம் கோயம்புத்தூரில் வழிபாடு செய்தார். மிக அக மகிழ்ந்தோம்.




அன்றைய தினம் கோயில் குருக்களும் மிக மிக சந்தோஷப்பட்டார்.இப்படி யாரும் இங்கு வழிபாடு செய்தது இல்லை என. அனைத்தும் குருவருளால் தானே அன்றி, நம்மால் ஒன்றும் இல்லை.

இந்தப் பதிவின் வழியாக நம்மை வழிநடத்தும் அகத்திய தபோவனம் மலேசியா அடியார்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த வழிபாடு சித்தர்களின் முறைப்படி நடைபெறுகின்ற வழிபாடு ஆகும். இது போன்ற சித்த ரகசியங்களை உலக உயிர்கள் உய்ய அளித்து வரும் திரு.செல்வம் ஐயா அவர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் வழிபாடு நடத்த உதவிய சதானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு நம் கோடான கோடி நன்றிகள் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை விழா (02/02/2018) - http://tut-temple.blogspot.com/2018/01/96-02022018.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html

தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

 சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

No comments:

Post a Comment