Subscribe

BREAKING NEWS

04 January 2019

ராம் ராம் ராம் - அனுமன் ஜெயந்தி (05/01/2019)

அனைவருக்கும் வணக்கம்.

நாளை (5-1-2019) அனுமன் ஜெயந்தி தமிழகம் முழுதும் கோலாகலமாக கொண்டாட இருக்கின்றார்கள்.இந்த நன்னாளில் அவரைப்பற்றி சிறிது இங்கே அறிய உள்ளோம்.

அனுமன் என்றாலே நாமக்கல், நங்கைநல்லூர் என்று பிரசித்தம் என்றாலும் நமக்கு அனுமன் என்றாலே சுந்தர காண்டம் தான். எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கின்றீர்களா அப்பொழுதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள். படித்த பின்பு, உங்களுள் ஒரு ஆற்றல் பிறக்கும், புது மூச்சு பிறக்கும்.






மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு நாளை ஜனவரி 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு அணிவிக்க ஒரு லட்சம் வடைகள், லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.
திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 5ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும் நாம் நாளை மோட்ச தீப வழிபாடும் செய்ய உள்ளோம். ஹி..ஹி ஒரு சுய விளம்பரம் தான்.




 நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.




 சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.






இராவணனை போரில் வீழ்த்தி வென்றார் இராமர்.

இந்த தகவலை சீதையிடம் சொல்ல அனுமன் சென்றார். அந்த சமயம் சீதையை கண்ட ஸ்ரீஅனுமனுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்ட சீதை, இராமருக்கு ஏதும் ஆபத்தோ என பயந்து போனார்.

அப்போது அங்கு இருந்த மணலில், “ஸ்ரீராம ஜெயம்” என்று எழுதினார் அஞ்சநேயர்.

போரில் ஸ்ரீஇராமருக்கு வெற்றி என்பதை மிக ரத்தின சுருக்கமாக “ஸ்ரீ இராம ஜெயம்” என்று அனுமன் எழுதியதை கண்ட சீதை மகிழ்ந்தார்.

“எழுத்தின் வித்தகன் நீ” என்று சீதை, அனுமனை பாராட்டினார்.




அனுமன் எழுதிய “ஸ்ரீ இராம ஜெயம்”என்கிற வாக்கியம், மந்திர சொல்லாக இன்றும் நமக்கு எண்ணற்ற வலிமையை-ஆற்றலை- நல்வாழ்க்கையை-வெற்றியை தந்துக்கொண்டிருக்கிறது.




நாளை உங்களால் முடிந்த அளவில் ராம நாமம் கூறுங்கள், அதே போல் சுந்தர காண்டம் படியுங்கள். இதோ..கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் உங்களுக்காக.



மேலும் குருக்கள் ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக நம் தளம் சார்பில் அன்னதானத்திற்கு உதவ வேண்டினார். திருவாரூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் விழாவிற்கு நம்மை அழைத்தார். இங்கே அழைப்பிதழை இணைத்துளோம். நம்மிடம் தருவதாக சொன்ன அழைப்பிதழ் சென்ற அகத்தியர் ஜெயந்தி விழாவில் நம் தளம் சார்பில் குருக்களின் தந்தையாரிடம் நாம் அனைவரும் ஒவ்வொருவராக பெற்றுக் கொண்டோம். அன்றைய அகத்தியர் பூசை கண்டு அவர் நம்மை வாழ்த்தினார். இது போல் சித்தர்களை கொண்டாடி மகிழ நம்மை வேண்டினார்.





நாளை நடைபெற உள்ள அனுமன் ஜெயந்தி விழாவில் ஒரு சிறு துளியை நம் தளம் சார்பில் சேர்த்துள்ளோம். அனைவர்க்கும் மீண்டும் ஒரு முறை அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.

ராம் ராம் ராம் 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை விழா (02/02/2018) - http://tut-temple.blogspot.com/2018/01/96-02022018.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html

தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

 சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html


தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html

ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

No comments:

Post a Comment