Subscribe

BREAKING NEWS

05 January 2019

எழும் போது வேலும் மயிலும் என்பேன் - மயூரவாகன சேவனம் அழைப்பிதழ் (06/01/2019)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

2019 ஆம் நமக்கு முருகன் அருள் முன்னிற்க கோலாகலமாக தொடங்கிவிட்டது. நம்மைப் பொறுத்தவரை சித்திரை 1 தான் புத்தாண்டு. இருந்தாலும் 2018 ஆம் நாட்காட்டியில் இருந்து 2019 ஆம் ஆண்டு நாட்காட்டியை மாற்றியுள்ளோம். இதனை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தோம். சென்ற ஆண்டு திருவண்ணாமலையில் கிரிவலம்,அன்னதானம்,தீப வழிபாடு என 2018 ஆரம்பித்தோம். இந்த ஆண்டும் மலையை விரும்பினோம். அப்படி பார்க்கும் போது ராஜ துரையை சந்திக்க வேண்டி வள்ளிமலை சென்றோம். அற்புதம்...ஆனந்தம் ..என முருகப் பெருமானின் பேரன்பில் இன்னும் திளைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

நாம் கனவிலும் நினைக்காத வகையில் இன்று வள்ளிமலை தரிசனம்...வள்ளிமலை அற்புதங்கள் என தொடர்பதிவு தரலாம் என நினைக்கின்றோம். குருவருள் நமக்கு துணை புரியட்டும்.
1. வள்ளிமலை கிரிவலம் - 1 மணி நேரம்
2. வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம்
3. முதல் தீப வழிபாடு வள்ளியம்மை தவப்பீடத்தில்
4. வள்ளிமலை மலையேற்றம் - சுமார் 300 படிகள் தான்
5. வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம்
6. வள்ளிமலை சுவாமிகள் ஜீவ சமாதி தீப வழிபாடு
7. வள்ளிமலை ஆஸ்ரமத்தில் பார்த்த இடங்கள் 5
8. உச்சியில் லிங்க தரிசனம். இது போல் வேறெங்கும் நாம் கண்டதில்லை
9. அடிவாரக் கோயில் தரிசனம்
10. நம் குழுவிற்கு படி பூசை செய்ய அனுமதி கிடைத்துவிட்டது. ( இது சுந்தர் அண்ணனின் நீண்ட நாள் ஆசை)இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்


படி பூசைக்கு நாம் கிருத்திகை அல்லது சஷ்டி தேர்வு செய்ய இருக்கிறோம் . சனிக்கிழமையாக இருக்க வேண்டும். விரைவில் அறிவிப்பு செய்கிறோம்.சில அருள்நிலைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.


                                                    வள்ளிமலை தரிசனம்

   
                                     மூத்தோனை வணங்கி கிரிவலம் ஆரம்பம்




கிரிவலப்பாதையில் 







வள்ளியம்மை பீடத்தில் தீபமேற்றி வழிபாடு 



                                                                       அடிவாரக்கோயில்





அகத்தியரின் ஆசியோடு மலையேற்றம் ஆரம்பம்.










அன்றைய தினம் வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் சென்று தரிசித்தோம். அங்கே நமக்கு விளக்கேற்றும் பாக்கியம் கிடைத்தது.




இங்கே நாம் பார்ப்பதற்கே பல இடங்கள் உள்ளன.




இவற்றையெல்லாம் நோக்கும் போது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய

எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து 
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

என்று பாடத் தோன்றுகின்றது. இதே பதிகத்துடன் மயூரவாகன சேவனம் பற்றி அறிய உள்ளோம்.

நம் குருநாதர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் தூய பக்தியையும், அவர்கள் இயற்றிய சண்முககவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம் சென்னையில் முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

உருத்ரோத்காரி ஆண்டு மார்கழித் திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமையன்று(27-12-1923) வடசென்னை, தம்புச்செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால் அவர்களின் இடைக்கால் எலும்பு முறிந்து விட்டது. ( Compound Fracture )
இரத்தப் பெருக்கோடியது. சுவாமிகள் கலங்கவில்லை. மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்து விட்டன என்றும், மீண்டும் பிறவித்துன்பம் வாராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடி மலர்களையே சிந்தித்து மகிழ்ந்தார்கள்.
கால் முறிந்தது மூப்பு அஞர்நிலையில்; என்கதிகொள்
நீல் முறிந்தது; விடற்கு உள்ளேநிகழ் அதனால்
நான் முறிந்தது; நவைநிலன் முறிந்தது; நடலைச்
சூழ்முறிந்தது எனா உவந்தனன்.
- அசோக சாலவாசம் நூல் பாடல் 4.6
பொருள்: முதுமைத் துன்பம் எய்திய நிலையில் கால் முறிந்தது; நடை கொள்கின்ற பிராணவாயு நடத்தலும் முறிந்தது; விட்டு நீங்குவதற்கு மனமானது நினைப்பதனால் யான் என்ற அகப்பற்றும் முறிந்தது; குற்றத்திற்கிடமாகிய உலக வாழ்வும் முறிந்தது; துன்பமான கருப்பமும் ( பிறப்பும் ) முறிந்தது என எண்ணி மகிழ்ந்தார்.
இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர் சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ( Government General Hospital ) 11 ஆம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்த்தார். சுவாமிகள் 73 வயது மேற்பட்டவர் என்பதாலும், உப்பு அற்ற உணவையே உண்பவர்
என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டுமென்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
அக்கருத்தை ஏற்காமல் சுவாமிகள் முருகப் பெருமானையே சிந்தித்த வண்ணமாய் இருந்தார்கள். சுவாமிகளின் சீடர்கள் 1891 ஆம் ஆண்டில் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் பாராயணம் செய்தார்கள். அவர்களுள் முதன்மையானவரான சென்னை 
திருவல்லிக்கேணி சின்னசாமி சோதிடர் அவர்கள் சுவாமிகளின் கால் இரண்டாக முறிவுப் படாதிருக்க இரண்டு வேல்கள் மேலே பொருந்தியும், மற்றொரு வேல் கீழே தாங்கிஇருப்பதையும் காட்சியாகத் தினமும் கண்டு சுவாமிகளின் முறிந்த காலின் எலும்பு கூடும் வரையிலும் கண்டு இன்பமடைந்தார்.
' என்பு கூடு காறும் அவ்வாறு எதிர்
அன்பன் நோக்கி இறைஞ்சி அகத்துளே
இன்பு கூர்ந்தனனே தொழில் சோதிடம்
என்பது ஆயினும் ஈசனை எண்ணுவோன் '
- அசோக சாலவாசம் - பாடல் 5-6


அரசு பொது மருத்துவமனையில் சுவாமிகளுக்கு மருத்துவம் செய்யத் தொடங்கினர். மருத்துவமனையில் சேர்ந்த 11 ஆம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத்தும், அதன்
இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலும் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்டியருளினான். மயில்களின் கால்கள் தரையில் பதியவில்லை. அவைகள் பொன்மய பச்சை நிறமாக இருந்தன.
விண் மகிழ்ந்திட; வேல்விடு வேள்மயில்
கண்மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்;
மண் மகிழ்ந்திட, மாகம் மகிழ்ந்திட
எண்மகிழ்ந்த பன்னொன்றின் இராவிலே
அசோக சாலவாசம் - பாடல் -5-7
அந்த மாபெரும் காட்சியில் ஆடியே
வந்த மாமயில் கூந்தல் நல்வட்டமாய்
சந்த வானை மறைத்தலும், சாரிடம்
வந்த தோகை நடிப்பும் வழங்கின.
அசோக சாலவாசம் - பாடல் - 5-8
வலத்து மாமயிலோடு இடம் வந்த ஓர்
நலத்து மஞ்ஞை சின்மைத்து அவை ஞாலமாம்
நிலத்திலே அடிவைத்தில நீள்உருப்
பலத்த பொன்மை மலிந்த ஓர் பச்சையாம்
அசோக சாலவாசம் - பாடல் - 5-9
மிளிர் வயித்திய நாத சாலையின் மேற்புறம்
ஒளிர் நடத்தில் இவ்வாறு கண்டுஓகையால்
குளிர் உளத்தினனாய்க் கைகுவித்தனன்
தெளிதிருப்புகழோன் நடைச்சீருளோன்
அசோக சாலவாசம் - பாடல் - 5-10
அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்ற தொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் எனத் திருவருளைச் சிந்தித்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் செவ்வேட் பரமன் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையில் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள் குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அவன் மறைந்து விட்டான். தன்னை விட்டு நீங்கவில்லை என்று, குழந்தை வடிவாய் காட்சியளித்தால் தன் உள்ளம் களிப்பு கொண்டுளதாயினும், இவ்வுலகில் இறப்பேன் என்று உறுதி கொண்டு களித்துள்ளதன்னை இம்மண்ணுலகில் இருக்கும்படி செய்துள்ள பாங்கைத் தான் அறிந்திலேன் என்று உலகவாழ்வை எண்ணாத சுவாமிகள் முருகப் பெருமான் திருப்பெயரைப் பலமுறை ஓதினார். உயிரையும், உடம்பையும் சண்முகனே கவசமாக இருந்து காப்பான் என்ற உறுதியுடன் சண்முகக் கவசம் பாடி அருளிய சுவாமிகளின் காலே முறிந்து விட்டது என்று எண்ணி உலகம் வேலிறைவனை இழிவாகப் பேசுமோ என்றும், அவ்வாறு பேசாமல் இருப்பதற்கு என்ன தடையைக் கருதுவேன் என்றும் பெரிதும் கவலைப்பட்டார். பிறகு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எக்ஸ்ரே படங்கள் எடுத்து ஆராய்ந்து எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் புண் ஆறிவிடும், அதுவரையிலும் மருத்துவமனையை விட்டுச் செல்லக் கூடாது  என்ற நாதம் முருகப் பெருமானிடத்திலிருந்து சுவாமிகள் மகிழும்படி தோன்றியது.
அம்மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் உயர் அதிகாரியான ஓர் ஆங்கிலேய பெண்மணி சுவாமிகளிடம் சென்று எந்த மனிதரும் உண்ணும் உப்பை நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது என்று அன்புடன் கூறினாள். சுவாமிகள் தன் துன்பம் நீங்க மருத்துவம் செய்தவர்களும், உதவி புரிந்தவர்களும் சிறப்புடன் வாழ்வாராக எனக்கூறி முருகப் பெருமான் திருவருளை வேண்டினார். வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் அந்தக் கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே என்று தாம் அருளிய போதனையில் உறுதியாக இருந்தார்.

பிறகு மருத்துவமனையை விட்டு தம் சீடர்கள் இல்லத்தில் தங்கினார். சுவாமிகளின் முறிந்த கால் குணமானது கண்டு அன்பர்கள் மகிழ்ச்சி கொண்டனர். முன்பு காலனை ( இயமனை ) உதைத்த
சிவபெருமானின் மகனாக நிலை பெற்றாய் என்றும், அவனது காலை அடைக்கலம் அடைந்தவரை நன்கு காத்தருளினாய் என்றும், தனது முறிந்த காலை நன்கு குணம் பெறச்செய்தாய் என்றும் கூறி
இனி எக்காலத்திலும் அவனுடைய காலைத் தனக்கு அளித்தருள்வாயாக என்றும் சுவாமிகள் வேண்டினார்.


முன்காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய்
பின்காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என் காலை இனிது அளித்தாய் ; இனி எஞ்ஞான்றும்
நின் காலை எனக்கு அளி என்றான் அந்நீத்தோன்
அசோக சாலவாசம் - பாடல் -7-4
இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி மேற்கண்ட மருத்துவமனை 11 ஆம் வார்டில் 26-12-1981ல் டாக்டர்.இரத்தினவேல் சுப்பிரமணியம் M.D.,F.R.C.P அவர்களால் திறக்கப்பட்ட கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பின் வாசகங்கள் வருமாறு:--
" பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11 வது வார்டு ( மன்றோ வார்டு ) 11 வது படுக்கையில் 27-12-1923 அன்று சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முருகப்பெருமான்திருவருளால் 11ம் நாள் இரவு ( 06-01-1924 ) வளர்பிறைப் பிரதமை திதியும், பூராட நட்சத்திரம் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். அந்நாள் மயூர வாகன சேவன விழாவாக ஒவ்வோர் ஆண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வருகிற 2019 ஜனவரி மாதம் 6ந்தேதி ஞாயிற்றுகிழமை அன்று திருவான்மியூர் சுவாமிகள் சமாதி நிலையத்தில் நடைபெற உள்ளது, அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகப்பெருமான் அருளையும், நம் குருநாதர் பாம்பன் சுவாமிகள் திருவருளையும் பெற வேண்டுகிறோம்.


 சென்னை சென்ரல் வால்டாக்ஸ் ரோடு யாணைக்கவுனி காவல் நிலையம் அருகில் , லாயர் சின்னத்தம்பி தெருவில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன பெருவிழாவில் பாம்பன் சுவாமிகள் உபயோகம் படுத்திய உடை, பாதச்சுவடு,மயூர நாதர் படம், திருநீறு பை, அனைத்தும் கண்ணாடி பேழையில் அடியார்கள் தரிசனம் செய்ய வைக்கப்படுகிறது.நேரம். 06/01/2019, காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை.



- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

2019 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temple.blogspot.com/2019/01/2019.html

நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்.. - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_2.html

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/11/2018.html

சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_16.html

 வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_9.html
சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html

ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html
 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4) - http://tut-temple.blogspot.com/2017/10/4_25.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html
முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html
வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html
வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html
64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html 

 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html
 


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html  

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html 


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html

போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் -https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


No comments:

Post a Comment