Subscribe

BREAKING NEWS

08 January 2019

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள்

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பாக  நாம் கூடுவாஞ்சேரியில் மலையாள சாமி உயிர்நிலை கோயில் இருப்பதாக தகவல் அறிந்தோம். ஆனால் விசாரித்து பார்த்த போது, கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோயில் அருகில் இவர் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் சென்று தரிசிக்க முடியவில்லை. சுவாமிகள் பற்றி நமக்கு கிடைத்த குறிப்புகள் இதோ.

மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், கூடுவாஞ்சேரி.
சுவாமிகள் பூர்விகம் பற்றிய செய்திகள் தெரியவில்லை. கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் பூசை செய்தவர். இவர் சித்த வைத்தியத்தை பற்றியும் தெரிந்து வைத்திருந்தவர். சித்துக்கள் பல செய்தவர். கோவிலின் முன் உள்ள குளத்தில் உள்ள தண்ணீரின் மேல் அமர்ந்து இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். வாணி செட்டியார் என்பவர் இடம் இருந்து அறுபத்தி எட்டு ஏக்கர் நிலத்தை வாங்கி, 1912 ஆம் ஆண்டு திருக்கோயிலுக்கு எழுத்துவைத்தார். 17/7/37 ஆம் ஆண்டு மாலை 5 மணிக்கு சிவானந்தப் பெரு வாழ்வு எய்தினார். கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் உள்ள நந்திஸ்வரர் காலனி, குளக்கரை தெரு, 108 ஆம் எண்ணில் ஜீவசமாதி இருக்கிறது. ஆடி விசாகம் அன்று குரு பூஜை.


ஆனால் சென்ற ஆண்டு சுவாமிகளின் கோயிலை கண்டோம். எந்த ஒரு ஆர்பாட்டமில்லை, அமைதி மட்டுமே இங்கு நிலவுகிறது. இப்படி ஒரு சித்தரின் உயிர்நிலை கோயில் இருப்பது கூடுவாஞ்சேரியில் உள்ள பலருக்கும் தெரியாது. 2016 முதல் கேள்விப்பட்டாலும் 2018 ல் நமக்கு தரிசனம் கிடைத்தது.சென்ற ஆண்டு நாம் ஆடி மாதம் நம் குழு அன்பரின் பிறந்தநாள் முன்னிட்டு அன்னம்பாளிப்பு செய்தோம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் பகுதியில் ஆரம்பித்து அப்படியே நந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். 

நந்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியே உள்ளவர்களுக்கு அன்னம் கொடுத்தோம். இருக்கும் அனைத்து உணவுப் பொட்டலங்களை சரியாக இருந்தது. அடுத்து உள்ளே சென்று நந்தீஸ்வரர் தரிசனம் தான். உள்ளே சென்றதும் நம் கண்ணில் பட்ட காட்சி..இது தான் சித்தர்களின் அருள், குருவின் வழிகாட்டல் என்பது..நீங்களே பாருங்கள். நாம் எதை தேடிக் கொண்டு இருந்து, மறந்துவிட்டோமோ, அது மீண்டும் நம் கண்களில் மிக மிக சரியான நேரத்தில் அகப்பட...தெய்வ தரிசனம் பெற்றோம்.


சுமார் ஓராண்டுக்கு முன்னர் நாம் தேடிய சித்தர் நம் கண்ணில் பட்டதும் ஆனந்த கூத்தாடினோம். கோயிலுள் தரிசனம் முடித்து, குருக்களிடம் விசாரித்தோம். அவர்கள் கோயில் பின்புறம் சுவாமிகள் இருப்பதாக கூறினார். பிறகென்ன..உடனே புறப்பட்டுவிட்டோம். சுவாமிகள் தரிசனம் பெறுவதற்குத் தான் அன்றைய அன்னம்பாலிப்பு நடைபெற்றதாக உணர்த்தப்பட்டோம்.இது தான் காரணமின்றி காரியமில்லை என்பது. 


நந்தீஸ்வரர் ஆலயம் பின்புறம் இவரின் உயிர்நிலை கோயில் உள்ளது.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல், சிறிய இடத்தில் இவரின் பேரானந்த அமைதியை அங்கே நம்மால் உணர முடிகின்றது.




இதற்காக நாம் இரண்டாடுகள் காத்திருந்தோம் என்பது உண்மை. யாருக்கு எப்போது எங்கே தரிசனம் கிடைக்கும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. ஸாத்சாத் அந்த பரம்பொருளே தீர்மானிக்க முடியும். நந்தியம்பெருமானை தொழுதோம்.



அங்கிருந்த பசுமை நம்மை ஈர்த்தது.



சுவாமிகளின் கோயிலை பராமரித்தவர்களும் அங்கே சமாதியாக  உள்ளார்கள்.







பொதுவாக கூடுவாஞ்சேரி சித்தர்கள் என்றாலே மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் பெயர் வரும். எப்பிறவி வாய்க்குமோ என்று இரண்டு ,மூன்று முறை தேடியும் நமக்கு அருள்காட்சி கிட்டவில்லை. இந்தப்பிறவியில் தரிசனம் பெற நமக்கு அருளொளி கிடைத்ததை அங்கே உணர்ந்தோம்.


அன்னம்பாலிப்பு செய்ய நமக்கு வாய்ப்பு வழங்கி, சித்தர்கள் தரிசனம் பெற உதவிய திரு.சரவணன் ஐயாவிற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- சித்தர்கள் அறிவோம் தொடரும் 

மீள்பதிவாக :-


சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_14.html


தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html
பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html
ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html
ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html
பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

No comments:

Post a Comment