அனைவருக்கும் வணக்கம்.
மலையேற்றத்தில் நம் தளம் மூலம் சதுரகிரி,வெள்ளியங்கிரி, அத்திரி மலை, பருவத மலை என சென்று வந்திருக்கின்றோம். இது தவிர ஏராளமான மலைகள் நம் தமிழ் நாட்டில் இருக்கின்றன.தேனி சண்முகநாத மலை, மிருகண்ட மகரிஷி மலை என தற்போது தான் நாம் அறிந்தோம். இது போல் ஒவ்வொரு ஊரிலும் மலைகள் ஏராளம். அவை தரும் நன்மைகளோ தாராளம். வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் நம் குழுவில் சிலரோடு நாம் சென்று வந்த பருவத மலை யாத்திரை பற்றி இங்கே தொட்டு காட்ட விரும்புகின்றோம்.ஏற்கனவே நாம் பருவத மலை யாத்திரையை தொடங்கி விட்டோம்.இங்கு அதன் தொடர்ச்சி காண இருக்கின்றோம். அதன் முன்பாக பருவதமலை பற்றி சில குறிப்புகள்.
அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை என்று சொல்லுவார்கள்.ஏற்கனவே பருவத மலையின் சிறப்புகள் பற்றி பேசியுள்ளோம். இதில் 10 சிறப்புகள் பார்த்து விட்டு, மலையேற்ற தொடங்குவோம்.
1. ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதி தமிழகத்திற்கு வந்த போது முதன் முதலாக காலடி வைத்த மலை
2. ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தென் பகுதிக்கு தூக்கி வந்த போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை
3. ஏழு சடைப்பிரிவுகளை கொண்ட மலை
4. மூலிகை காற்று எப்போதும் வீசி தீராத நோய் தீர்க்கும் மலை
5. 4500 அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாறைப் படி,தண்டவாள படி ,ஏணிப் படி கொண்ட உலகில் உள்ள அதிசய மலை
6. சித்தர்கள் வாழும் மலை. பல அடியார் பெருமக்களுக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.மலையில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.
7. இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி, மலர்களின் வாசனையை நுகரலாம்.
8. அம்மன் அழகு...வேறெங்கும் காண முடியாத பேரழகு. இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம்.
9. அம்மன் கருவறையிலிருந்து வெளியே செல்ல ,செல்ல தூரம் அதிகரிக்க,அதிகரிக்க, அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் இருக்கும். இந்த அருள் நிலை காண கண் கோடி வேண்டும் )
10. சிவபெருமான் எதிரே கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் நாகம்,சூலம், உடுக்கை பிம்பம் காணலாம்.
இதற்கு முந்தைய பதிவில் பருவத மலை அடிவாரத்தில் இருந்து மலை ஏற தொடங்கினோம். சுமார் பாதி தூரம் ஏறிவிட்டோம். மீண்டும் அங்கிருந்து தொடங்குகின்றோம்.
பசுமை,இயற்கை என மலை ஏற,ஏற மனதுள் ஒரு சிலிர்ப்பு. நேரம் ஆக,ஆக வெயிலும் மலை ஏற தொடங்கியது.
ஓரளவு மலை உச்சி வந்து விட்டோம். இனி பெரிய பாறை போன்ற தோற்றம் அளிக்கும் மலையில் ஏற வேண்டியது தான் பாக்கி. அங்கிருந்து மலை அடிவாரம் கீழே.
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி அருளிய சித்தர் காப்பு பாடலை பாடிக்கொண்டிருந்தோம்.
முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை
முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ;
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ;
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர் பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர்பாதங்காப்பு;
நல்ஞானஜோதியைநலமாய்உரைத்திட்ட நற்குதம்பைபாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு;
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;
விளக்கேற்றி வழிபாடு செய்தோம். தாயை தயை கூர்ந்து வணங்கினோம்.
வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html
வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

யாரையும் பயமுறுத்த இங்கே படங்களை பதிவிடவில்லை. மலை ஏறி சென்று ஈசனை தரிசிக்க முடியாதவர்களுக்காகவே இங்கே பதிவிட்டு வருகின்றோம்.
ஓரளவு மலை உச்சி வந்து விட்டோம். இனி பெரிய பாறை போன்ற தோற்றம் அளிக்கும் மலையில் ஏற வேண்டியது தான் பாக்கி. அங்கிருந்து மலை அடிவாரம் கீழே.
இருப்பு பாதை அமைப்பு கொண்ட பாதை தெரிகின்றதா? இனி தான் யாத்திரையின் உச்சம் தொட இருக்கின்றோம். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முடிவு (climax ) எப்படியோ, அதே போல் தான் பருவதமலையின் முழுமை இங்கே தான் ஆரம்பம்,. இத்துணை வசதி வாய்ப்புள்ள நாட்களில் செல்வதற்கே நம்மால் முடியவில்லை. வசதி வாய்ப்பற்ற பன்னெடுங்காலத்தில் எப்படி மலை ஏறி அந்த ஈசனை தரிசனம் செய்து இருப்பார்கள்? வெறும் கேள்விக்குறி மட்டுமே மனதில் தோன்றுகின்றது.
மலையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் சொருகி பாதை அமைத்துள்ளார்கள்
மனதை அந்த பரத்திடம் ஒப்படைத்து விட்டு, வேறெந்த எண்ணமும் மனதில் இருத்தாது, திக்கற்ற எமக்கு நீரே துணை என்று வேண்டிக் கொண்டு மலை ஏறினோம்.
இது போன்ற மலை ஏற்றங்களை நாம் சாகச பயணங்களாக நினைப்பதில்லை. இறையை இப்படித் தான் தேட வேண்டும். இப்படித் தான் தேடியும் இருக்கின்றார்கள். இரை மட்டுமே தேடிக்கொண்டிருப்பது வாழ்க்கை அல்ல. அது வெறும் பிழைப்பு. இரையோடு இறை தேட வேண்டும். இது தான் வாழ்க்கை. வாழ்க்கையின் எப்படிப்பட்ட துன்பம் அனுபவிக்கும் எவரும் தூய மனதுடன் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஏதேனும் ஒரு நாளில் இங்கு வந்து வழிபட துன்பம் நீங்கி இன்பம் பெறுவார்கள் என்பது உறுதி.
'
இந்த மலை ஏற்றம் கடந்தால் அடுத்து எளிதான படிக்கட்டுகள் கொண்ட பாதை தான். வெயில் கொஞ்சம் சுளுக்கெடுக்க தொடங்கிற்று.
நாம் மலை மேலே ஏறிக்கொண்டிருந்த போது ,சிலர் கீழே வந்து கொண்டிருந்தார்கள். கையில் பையுடன் அங்கிருந்த தேவையற்ற பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்துக் கொண்டு வந்தார்கள். இதுவல்லவோ உழவாரம் என்று மனதில் அவர்களுக்கு நன்றி சொன்னோம்.
இது போன்ற மலை தலங்களுக்கு செல்லும் போது கூடுமானவரை பிளாஸ்டிக் தவிர்க்கவும். அப்படி நீங்கள் கொண்டு சென்றால் அவற்றை மீண்டும் அடிவாரத்திற்கு கொண்டு சென்று குப்பையில் சேர்த்து விடுங்கள். இப்படி செய்பவர்களைத் தான் சித்தர்கள் விரும்புவார்கள். என்ன தான் நாம் பூசை செய்தாலும், ஊர் ஊராக சுற்றினாலும் இது போன்ற மாற்றங்களை செய்தால் தான் நாம் சித்தர்கள் வசம் செல்ல முடியும்.
அடுத்து அப்படியே கோயிலுக்குள் சென்று தரிசனத்தில் ஈடுபட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் சென்றது. தற்போது பல மாற்றங்கள் அங்கே உணர்ந்தோம். 18 சித்தர்கள் இடையே எம் பெருமான் தரிசனம் வழங்கிய காட்சி ..கீழே பகிர்கின்றோம்.
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி அருளிய சித்தர் காப்பு பாடலை பாடிக்கொண்டிருந்தோம்.
முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை
முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ;
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ;
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர் பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர்பாதங்காப்பு;
நல்ஞானஜோதியைநலமாய்உரைத்திட்ட நற்குதம்பைபாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு;
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;
விளக்கேற்றி வழிபாடு செய்தோம். தாயை தயை கூர்ந்து வணங்கினோம்.
அடுத்து கொஞ்சம் இளைப்பாறினோம். அப்போது தான் அனைவரும் வந்து சேர்ந்ததை உறுதி செய்துவிட்டு மீண்டும் பூசைக்கு தயாரானோம்.
- பருவதமலை அருள் இன்னும் பெறுவோம்.
மீள்பதிவாக:-
பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_12.html
அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_21.html
வெள்ளியங்கிரி ஈசன் தந்த தெம்பே போதும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_28.html
வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html
வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html
இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html
குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html
No comments:
Post a Comment