Subscribe

BREAKING NEWS

15 February 2018

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறுவோம்

புதுச்சேரி

சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.

தமிழ்நாடு முழுதும் ஜீவன் முக்தர்களின் அரசாட்சி தான். திரும்பிய இடமெங்கும் உயிர்நிலை கோயில்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை சித்தர்களின் ராஜ்ஜியம் தான். அந்த வரிசையில் சென்னை என்றால் நமக்கு மிக மிக நெருக்கமாக சதானந்தர். இவரைத் தாண்டி பாரத்தால் சென்னையில் சாங்கு சித்தர், வேளச்சேரி மகான், பட்டினத்தார் என நீளும் பட்டியலில் திருஒற்றியூர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.

அந்த வரிசையில் நாம் பாண்டிச்சேரி சித்தர்களைப் பற்றி பல முறை கேள்வியுற்றோம். ஆனால் தரிசிக்க ஏங்கினோம். அப்போது தான் வில்லியனூரில் உள்ள  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்று இரண்டு முறை ஆயில்ய ஆராதனை கண்டோம். அப்போது திரு.சுவாமிநாதன் ஐயாவின் வழிகாட்டலின் படி, மூன்று உயிர்நிலை கோயில் தரிசனம் பெற்றோம். பின்னர் அவற்றை நம் தலத்தில் பதிவேற்ற விரும்பினோம். அலைபேசியின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அனைத்து காட்சிகளையும் மீட்க முடியவில்லை.

சென்ற வாரம் மீண்டும் பாண்டிச்சேரி பயணம். இம்முறை TUT தளத்தின் ஆண்டு விழா மற்றும் அகத்தியர் கீதம் ஒலித்தகடு வெளியீட்டு விழா விற்காக அகத்தியர் ஆசி பெற சென்றோம். அப்போது மீண்டும் ஒரு வாய்ப்பாக சித்தர்களின் அருள் கோயில்களை கண்டோம். சுமார் 6 உயர்நிலைக்கோயில்களை தரிசித்தோம். அவற்றுள் இன்று நாம் காண இருப்பது சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனமே.




வில்லியனூர் செல்வதற்கு பாண்டிச்சேரி முதல் விழுப்புரம் சாலையில் வரும் போது, பெரம்பை என்ற ஊர் தாண்டி இடப்பக்கம் திரும்பினால் சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறலாம். முன்பெல்லாம் பரதேசி என்ற சொல்லை நாம் ஏளனமாக பார்த்ததுண்டு. சற்று ஆராய்ந்து பார்த்தால் பரதேசி என்றால் அந்த கடவுளை கண்டவர்கள் என்று பொருளாக தோன்றுகின்றது. பரத்தை கண்டு பேசி இருப்பதால் பரதேசி என்று இருக்குமோ?

பொதுவாக மகான்களின் ஆலயத்தில் பெரிய ஆடம்பரம் இருக்காது, சத்தம் இருக்காது. அது போல் மிக மிக ஆழமாய் அன்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார் சுவாமிகள்.


இதோ கோயில் வெளிப்புறம்.


திருக்கோயில் உள்ளே சென்றதும் நமக்கு சுவாமிகள் நேரே அருள் தருகின்றார். தரிசித்து விட்டு, அப்படியே கோயிலை சுற்றினோம்.








கோயில் முழுதும் சித்தர்களின் அருளே. கண்ணைக் கவரும் சித்தர்களை கண்டோம்.


சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி ! போற்றி !! என உளமார வேண்டினோம்.









நம்ம அகத்தியர் தாங்க!














திருக்கோயில் சந்நிதியில்


பதம் அடைவோம். ஒன்றாவோம். என உணர்த்தும் பாதுகைகள்






தரிசனம் பெற்று அப்படியே அமர்ந்து மௌனித்தோம். சுமார் 10 நிமிடங்கள் ....உள்ளூர உள்ளுணர்வு. அப்படியே அடுத்த கோயிலுக்கு சென்றோம். புதுவையில் மட்டும் 41 சித்தர்கள் உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்தது.

புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள்
1 ஸ்ரீ தொள்ளகாது சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் புதுவை ,
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள் கருவடிக்குப்பம் புதுவை
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள் வைத்திக்குப்பம் ,புதுவை .
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .
6.ஸ்ரீ கம்பளி நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை , புதுவை .
7 .ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .
8 . ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை
9 .ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை
10 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை
12 . ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை .
13 . ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை
14 .ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை 15 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை .
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை .
17 .ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை
18 ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை .
19 . ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
20 . ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை .
21 . ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை
22 .ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை
23. ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னையீன் சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம் , புதுவை
24 . ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர் ,புதுவை
25 . ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை .
26 . ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை
27 .ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை .
28 .ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை
29 .ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் நல்லாத்தூர் எம்பலம், புதுவை .
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம் புதுவை .
31 . ஸ்ரீ கழுவெளி சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம் இரும்பை .புதுவை
32 ஸ்ரீ சிவஞ்ன பாலய சித்தர் சுவாமிகள் , பொம்மையார் பாளையம் புதுவை .
33 ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,.
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)
35 . ஸ்ரீ பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு 38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம்
39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் காரணப்பட்டு .
40 ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் புத்துப்பட்டு காலாப்பட்டு
41 குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில்

இந்த 41 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற ....
தரிசிக்க வருகைதாருங்கள் உள்ளம் தெளிவடையும். மீண்டும் அடுத்த உயிர்நிலைக்கோயிலில் சந்திப்போம்.

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் திருவடி போற்றி! போற்றி !!

No comments:

Post a Comment