Subscribe

BREAKING NEWS

22 August 2018

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ்


சித்தர்கள் 

ஆத்ம தரிசனம் பெற்றவர்கள். ஆத்ம தரிசனம் நாமும்  பெற விரும்புபவர்கள். ஆத்ம ஞானம் போதிப்பவர்கள். மதம் மறுப்பவர்கள், குலம் மறுப்பவர்கள், தன்னை மறந்தவர்கள். அனைத்தும் நாம் என்று பரத்தை வசப்படுத்துபவர்கள். ஜீவனில் சிவத்தை உணர்ந்தவர்கள் என்று சித்தர்கள் பற்றி பறைசாற்றலாம். என்ன தான் நாம் சொன்னாலும் இது பெருங்கடலில் பெருங்காயத்தை கரைப்பதை போன்றதே ஆகும். ஒவ்வொரு சித்தர்களும் ஒவ்வொரு மார்க்கத்தை கடைபிடித்துள்ளனர். மார்க்கம் வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் கடைசியில் கண்ட தரிசனம் ஒன்றே ஆகும். சிலர் பக்தி, சிலர் மந்திரங்கள், சிலர் யோகம், சிலர் ஞானம் என்று வேறு வேறு பாதையாக இருந்துள்ளது. நாளை நடை பெற உள்ள  ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா பற்றி இந்தப் பதிவில் பேச உள்ளோம்.



பட்டதாரிச் சித்தரே சரணம் என்று பதிவின் தலைப்பில் கூறியுள்ளது போன்று, ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஐயாவினை பற்றிய செய்திகள் இனி தருகின்றோம்.

திருநெல்வேலி மாவட்டம் கடையனோடை என்று ஊரை சார்ந்தவர்.

முத்து - நாராயண வடிவு தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். ஆண் குழந்தை வேண்டு திருசெந்தூர் சென்று வழிபட்டார்கள். நாராயண வடிவு அம்மா கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டு, 48 நாள் விரதம் இருந்தார்கள். 23.11.1908 கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள். முருகன் அழகன் மட்டுமா? அறிவும் ஆவார். எனவே அறிவு சுடர் கொண்டு இவருக்கு சுப்பைய சுவாமிகள் என்று பெயர் வைத்தார்கள்.

ஏற்கனவே கூறியபடி இளங்கலை பட்டம் முடித்த பிறகு சித்த மருத்துவம், ஓலைச்சுவடி என்று திசை திரும்பலானார். பின்னர் தான் சுவாமிகளின் தேடல் விரிந்தது. வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மஹான்களின் பாதம் பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றார். பின்னர் மீண்டும் கடையனோடை வந்து அன்னதான சேவையில் முழுதும் ஈடுபட்டார். வள்ளலார் வழியே சுப்பைய சுவாமிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 



வள்ளலாரின் புகழைப் பாடியபடியே, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தை விட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேசமாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்ட விபூதியை தன்னை காண வரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். நாத்திக வாதம் பரவத் தொடங்கிய காலத்தில் 30 இளைஞர்கள் அவரைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் இளநீர் வெட்டிவெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சுவாமியும் அதை வாங்கிக் குடித்தார். சித்தர் எப்படியும் சிறுநீர் கழிப்பதற்குக் குகையை விட்டு வெளியே வரவேண்டும் என்று இளநீர் கொடுத்தவர்கள் நினைத்தார்கள்? ஆனால் பாவம், சுவாமிக்கு இளநீர் கொடுத்தவர்களே, அதை சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுவாமியின் சக்தி மற்றவர்களுக்குப் புலப்பட ஆரம்பித்தது. இவர் கடைசிகாலத்தில் 6-ம் திருமுறை நூலை எப்போதும் கையில் வைத்திருந்தார்.

'எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடி வையுங்கள். 40 நாள் கழித்து அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதம் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்' என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.



1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்டிருக்கிறார்.
சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தினமும் காலையில் 100 பேருக்கு உணவு, மதியம் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.



மார்கழி சதய நட்சத்திரத்தில் வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை ( 22/8/2018 ) அன்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஆலயத்தில் சுப்பையா சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகப் பெருவிழா  நடக்க இருக்கிறது.






இந்த மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவினை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் ஆலயத்தில் சேவை செய்து வரும்  கணபதி உபாசகர்  சிவத்திரு. R.S. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்கள் நடத்த உள்ளார்கள். இவரின் அபிஷேகமும் ,அலங்காரமும்  கூடுவாஞ்சேரி அகத்தியருக்கு மாதந்தோறும் ஆயில்யத்தில் மின்னுகின்றது. அப்படியிருக்க இந்த மஹா கும்பாபிஷேகப் பெருவிழா மாபெரும் அருளை அனைவர்க்கும் வழங்கும் என்பது உறுதி. இந்தப்பதிவின் மூலம் சிவத்திரு. R.S. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களுக்கு நம் தளம் சார்பில் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html


ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html 

No comments:

Post a Comment